பொருளாதாரம் - செலவு பற்றிய ஆய்வு | 11th Economics : Chapter 4 : Cost and Revenue Analysis
செலவு பற்றிய ஆய்வு
செலவு என்பது உற்பத்திச் செலவைக் குறிக்கும். ஒரு பொருளை உற்பத்திச் செய்யும் போது ஏற்படுகின்ற பல்வேறு வகையான செலவினங்கள் உற்பத்திச் செலவு ஆகும். உற்பத்திச் செலவினை ஆய்வு செய்யும் போது அதனுடன் தொடர்புடைய பல்வேறு காரணிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தின் அளவு, உற்பத்தி அளவு, உற்பத்திக் காரணிகளின் விலை, மற்றும் பல்வேறு பொருளாதார மாறிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
செலவுச் சார்பு என்பது மொத்த செலவிற்கும் மற்றும் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பினை வெளிப்படுத்துகிறது. செலவுச் சார்பை இவ்வாறு எழுதலாம்.
C = f(Q)
எ.கா. TC = Q3 _ 18Q2 + 91Q + 12
இதில் C = செலவு
Q = உற்பத்தி அளவு
செலவுச் சார்பு என்பது பெறப்பட்ட சார்பு ஆகும். ஏனெனில் அவை உற்பத்திச் சார்பிலிருந்து பெறப்பட்டதாகும். இனி அடிப்படைச் செலவு கருத்துக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கலாம்.