பொருளாதாரம் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு | 11th Economics : Chapter 4 : Cost and Revenue Analysis
அத்தியாயம் 4
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
பெரிய தடைகளைத் தாண்டி வருவாயை உயர்த்த வேண்டும்
- டெய்லர் கோவன்
கற்றல் நோக்கங்கள்
1 பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்திக்கான செலவுகளையும், அவை பயன்படுத்தப்படும் விதத்தையும், வருவாயுடன் இணைத்து நிறுவனத்தின் இலாபத்தை கணக்கிடுவதையும் பற்றி அறிதல்.
2 பல்வேறு அங்காடியில் பண்டங்கள் மற்றும் பணிகள் விற்பனை செய்வதால் - எவ்வாறு வருவாய் வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுதல்.முன்னுரை
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு என்பது, பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு நிறுவனத்தின் (ஓர் உற்பத்தி அலகு) உற்பத்திச் செலவு மற்றும் விற்பனை வருவாய் பற்றிய ஆய்வு ஆகும். ஒரு நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள் இலாபம் ஈட்டுவதும், நட்டம் ஏற்படாமல் இருத்தலும் ஆகும். இருந்த போதிலும் ஒரு நிறுவனத்தினுடைய இலாபம் அல்லது நட்டம் என்பது அந்நிறுவனத்தின் செலவு மற்றும் வருவாய்களால் தீர்மானிக்கப்படுகிறது. இலாபம் அல்லது நட்டம் என்பது, மொத்த வருவாய்க்கும், மொத்தச் செலவிற்கும் உள்ள வேறுபாடாகும்.
இலாபம் (அ) நஷ்டம் = மொத்த வருவாய் - மொத்தச் செலவு
ஒரு நிறுவனத்தினுடைய உற்பத்தி மற்றும் அளிப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் செலவு மற்றும் வருவாய் மிக முக்கியமான காரணிகளாக உள்ளது. எனவே பல்வேறு சூழ்நிலைகளில் செலவு மற்றும் வருவாய் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது.