Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | மூட்டு நழுவுதல் மற்றும் சிகிச்சை முறைகள் (Dislocation of Joints and Treatment)

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

மூட்டு நழுவுதல் மற்றும் சிகிச்சை முறைகள் (Dislocation of Joints and Treatment)

மூட்டு நழுவுதல் என்பது மூட்டின் அசைவுப்பகுதி இணைவுப் பகுதியை விட்டு முழுமையாக இடம் பெயர்தல் ஆகும். இதில், எலும்புகளின் இயல்பான இணைவு அமைப்பு மாற்றப்படுகின்றது.

மூட்டு நழுவுதல் மற்றும் சிகிச்சை முறைகள் (Dislocation of Joints and Treatment)

மூட்டு நழுவுதல் என்பது மூட்டின் அசைவுப்பகுதி இணைவுப் பகுதியை விட்டு முழுமையாக இடம் பெயர்தல் ஆகும். இதில், எலும்புகளின் இயல்பான இணைவு அமைப்பு மாற்றப்படுகின்றது.

தாடை, தோள்பட்டை, விரல்கள், பெருவிரல் ஆகிய இடங்களில் உள்ள மூட்டுக்கள் எளிதில் நழுவக்கூடிய மூட்டுக்கள் ஆகும்.

மூட்டுநழுவுதலை கீழ்வரும் கீழ்வரும் முறையில் வகைப்படுத்தலாம், அவை

1. பிறவிக்குறைபாடு மூட்டு நழுவுதல் 

2. விபத்து மூட்டு நழுவுதல் 

3. நோய்நிலை மூட்டு நழுவுதல் 

4. பக்கவாதத்தினால் ஏற்படும் மூட்டு நழுவுதல்.

1. பிறவிக் குறைபாட்டு மூட்டு நழுவுதல்: இவ்வகை மூட்டு நழுவுதல் மரபியல் காரணிகள் அல்லது வளர் கருவில் ஏற்படும் குறைபாட்டின் விளைவு ஆகும்.

2. விபத்து மூட்டு நழுவுதல்: தீவிரமான தாக்கத்தின் அல்லது அடிபடுவதன் விளைவாகத் தோள்பட்டை, இடுப்பு மற்றும் முழங்காலில் ஏற்படுவதாகும்.

3. நோய் நிலை மூட்டு நழுவுதல்: காச நோய் போன்ற நோய்களால் ஏற்படுகிறது. அதனால் இடுப்புபகுதி நழுவும்.

4. பக்கவாதத்தினால் மூட்டு நழுவுதல்: இது கால்கள் அல்லதுகைகளில் ஒருபகுதிதசைகளில் ஏற்படும் செயலிழப்பு பக்கவாதத்தை உண்டாக்குவதால் ஏற்படுகிறது.

சிகிச்சை

நழுவிய மூட்டுக்கள் இயல்பு நிலைக்கு இயற்கையாக திரும்பாத நிலையில், கீழ்க்கண்ட சிகிச்சைகளை அளிக்கலாம்.

மீண்டும் பழைய இடத்திலேயே அமைத்தல் 

அசையாதிருக்கச் செய்தல்

மருந்து மருத்துவம்

மறுவாழ்வு அளித்தல்


11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Dislocation of joints and treatment in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : மூட்டு நழுவுதல் மற்றும் சிகிச்சை முறைகள் (Dislocation of Joints and Treatment) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்