அறிமுகம் - பொருளாதார உயிரியல் | 9th Science : Economic Biology
அலகு 23
பொருளாதார உயிரியல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ பூச்செடி வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை பற்றி அறிதல்.
❖ உயிரி உரங்களை வகைப்படுத்தி அவற்றின் முக்கியத்துவத்தை அறிதல்.
❖ காற்று, நீர் மற்றும் மீன் கழிவுநீர் ஊடக வளர்ப்பு முறைகளை வேறுபடுத்துதல்.
❖ கால்நடை இனங்கள் மற்றும் பால் பண்ணையின் முக்கியத்துவம் பற்றி அறிதல்.
❖ மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு பற்றிய அம்சங்களை அறிதல்.
❖ மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுதல்.
❖ தேனீ வளர்ப்பு மூலம் பெறப்படும் வணிகரீதியான பொருள்களைக் கண்டறிதல்.
அறிமுகம்
இயற்கையின் நன்கொடையானது எல்லையற்றது. பலவகையான பயனுள்ள பொருள்கள் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன. தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் அதிகம் உள்ளதால் அவற்றை மேம்படுத்துவதற்கும் பயிரிடுவதற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பூவளர்த்தல்மற்றும் தோட்டக்கலைமுறை ஆகியவை மக்களிடையே நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நீர்உயிரிவளர்ப்பு, (மீன், இறால், நண்டு, முத்து மற்றும் உண்ணத்தக்க சிப்பிகள்), மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற உயிரியல் சார்ந்த பொருளாதார அம்சங்களை மேம்படுத்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றின் வணிக மற்றும் பொருளாதாரப் பயன்களுக்காக அவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கால்நடை வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழிலாக மாறி கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அவற்றைப்பற்றி இப்பாடத்தில் விரவாகக் காண்போம்.