வரையறை, சூத்திரம், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்கு - மின்தடை எண் மற்றும் மின்கடத்து எண் | 10th Science : Chapter 4 : Electricity
மின்தடை எண்
மற்றும் மின்கடத்து எண்
1. மின்தடை எண்
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு
(L) நேர்தகவிலும், குறுக்குவெட்டு
பரப்பிற்கு (A) எதிர் தகவிலும் அமையும்.
ρ என்பது ஒரு மாறிலி. இது கடத்து
பொருளின் தன் மின்தடை எண் எனப்படும்.
சமன்பாடு 4.4 லிருந்து,
ρ = RA
/ L
L = 1 m, A = 1 m2 எனில் ρ = R
எனவே ஓரலகு நீளமும் ஓரலகு
குறுக்வெட்டு பரப்பும் கொண்ட கடத்தி ஒன்று மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் மின்தடை
அக்கடத்தி பொருளின் தன்மின்தடை எண் என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு ஓம் மீட்டர்
(Ω
m)
ஒரு கடத்தியின் மின்தடை எண் என்பது
அதன் வழியே பாயும் மின்னோட்டத்தினை எதிர்க்கும் திறனை குறிக்கும் அளவு ஆகும். ஒரு
குறிப்பிட்ட உலோக பொருளுக்கு மின்தடை எண் மாறிலி ஆகும்.
2. மின் கடத்து திறன்
மற்றும் மின் கடத்து எண்
ஒரு பொருளின் வழியாக மின்னூட்டங்கள்
பாய்ந்து செல்வதை அல்லது மின்னோட்டம் பாய்வதை அனுமதிக்கும் பண்பு அந்த பொருளின்
மின்கடத்து திறன் ஆகும்.
மின் தடையின் தலைகீழி மின்கடத்து
திறன் என வரையறுக்கப்படுகிறது. எனவே, ஒரு கடத்தியின் மின் கடத்துதிறன் G என்பது
G = I / R (4.5)
இதன் அலகு ohm-1. இது mho எனவும் குறிப்பிடப்படுகிறது.
மின்தடை எண்ணின்
தலைகீழி மின்கடத்து எண் எனப்படும்.
இதன் அலகு ஓம்-1 மீ-1 இது மோ மீ-1 எனவும்
குறிப்பிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட கடத்தி பொருளுக்கு
இது ஒரு மாறிலி ஆகும். மின் கடத்தி எண் என்பது ஒரு கடத்தியின் வழியே பாயும்
மின்னோட்டத்தினை அனுமதிக்கும் திறனை குறிக்கும் அளவு ஆகும். சில பொருள்கள்
மின்னோட்டத்தை நன்கு கடத்தும். எ.கா. தாமிரம், அலுமினியம் முதலியன. சில பொருள்கள் மின்சாரத்தை
கடத்தாது (காப்பான்கள்) எ.கா கண்ணாடி, மரக்கட்டை, இரப்பர் முதலியன. காப்பான்களை விட கடத்திகளுக்கு மின் கடத்தி எண் அதிகம்.
ஆனால் மின் தடை எண்ணானது காப்பான்களை விட கடத்திகளுக்கு குறைவு. பொதுவாக பயன்படும்
சில பொருள்களின் மின்தடை எண் மதிப்பு அட்டவணை 4.2 யில்
கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்க்கப்பட்ட கணக்கு 4
10 மீட்டர் நீளமும்,
2 x 10-7 m2, குறுக்குவெட்டு பரப்பும் கொண்ட
கம்பியின் மின்தடை 2 ஓம் எனில் அதன் (i) மின்தடை எண், (ii) மின்கடத்து திறன் மற்றும் (iii)
மின் கடத்தி எண் ஆகியவற்றை காண்க. தீர்வு :
நீளம், L = 10 மீ ,
மின்தடை, R = 2 ஓம் குறுக்குவெட்டு பரப்பு,
A = 2 × 10-7 m2
உங்களுக்குத் தெரியுமா?
நிக்ரோம்
என்பது மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட ஒரு கடத்தியாகும். இதன் மதிப்பு 1.5 × 10-6
Ω m. எனவே இது மின் சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற
வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது.