ஓம் விதி
ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன்
இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை
நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
இவ்விதியின்படி மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின்
வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த
வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
I α V. எனவே, 1 /
V = மாறிலி.
இந்த மாறிலி மதிப்பு 1/R ஆகும்.
எனவே, I = [1 / R] V
V = I R (4.3)
இங்கு R என்பது
மின்தடையாகும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு (எ.கா நிக்ரோம்) குறிப்பிட்ட
வெப்பநிலையில் மின்தடை ஒரு மாறிலி ஆகும். மின்னழுத்த வேறுபாடு V யும் மின்னோட்டம் I யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில்
அமைவதால் V மற்றும் I இடையேயான வரைபடம்
ஒரு நேர்கோடு ஆகும். இது படம் 4.5 ல் காட்டியுள்ளது.