Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | நினைவில் கொள்க

மின்னோட்டவியல் | அறிவியல் - நினைவில் கொள்க | 10th Science : Chapter 4 : Electricity

   Posted On :  29.07.2022 02:49 am

10வது அறிவியல் : அலகு 4 : மின்னோட்டவியல்

நினைவில் கொள்க

கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டத்தின் எண்மதிப்பாக வரையறுக்கப்படுகிறது.

மின்னோட்டவியல் (அறிவியல்)

நினைவில் கொள்க

 

·  கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டத்தின் எண்மதிப்பாக வரையறுக்கப்படுகிறது.

·  மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A).

·  மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட் (V)

·  மின்சுற்று என்பது மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதையாகும்.

·  ஒரு கடத்தியின் நீளம், அதன் குறுக்குவெட்டுப் பரப்பு மற்றும் அந்த பொருளின் தன்மை ஆகியவைகள் கடத்தியின் மின்தடையை பாதிக்கும் காரணிகள் ஆகும்.

·  மின்தடை எண்ணின் அலகு ஓம் மீட்டர் (Dm). ஒரு குறிப்பிட்ட உலோக பொருளுக்கு மின்தடை எண் மாறிலி ஆகும்.

·  மின்தடை எண்ணின் தலைகீழி மின் கடத்து எண் எனப்படும்.

σ =  1/ρ

·  மின் தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

·  மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

·  மின் கம்பியின் வழியே மின்னோட்டம் செல்வதால் வெப்பம் உருவாகிறது. இந்த நிகழ்வு மின்னோட்டத்தின் வெப்பவிளைவு எனப்படுகிறது.

·  1 குதிரை திறன் என்பது 746 வாட் ஆகும்.

·  வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது உருவாகும் அதிகப்படியான மின்னோட்டத்திலிருந்து மின் உருகு இழை அல்லது மின்சுற்று உடைப்பி பாதுகாக்கிறது.

 

Tags : Electricity | Science மின்னோட்டவியல் | அறிவியல்.
10th Science : Chapter 4 : Electricity : Points to Remember Electricity | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 4 : மின்னோட்டவியல் : நினைவில் கொள்க - மின்னோட்டவியல் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 4 : மின்னோட்டவியல்