மின்னோட்டவியல் | அறிவியல் - தீர்க்கப்பட்ட கணக்குகள் | 10th Science : Chapter 4 : Electricity
மின்னோட்டவியல் - அறிவியல்
தீர்க்கப்பட்ட
கணக்குகள் :
1. இரண்டு
மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V. இரண்டில் எந்த விளக்கு அதிக
மின்தடையை பெற்றிருக்கும்?
தீர்வு :
மின்திறன் P = V2/ R
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு
மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர்
விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட
மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக்
கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
2. ஒரு மின்சுற்றில்
பொருத்தப்பட்டுள்ள 100 W, 200 V மின்விளக்கில் பாயும்
மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கிடு.
தீர்வு :
மின்திறன் P = 100 W மின்னழுத்தம்
V = 200V
மின்திறன் P = V I
3. கீழே
கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 5 Ω, 10 Ω மற்றும்
20 Ω
மின்தடை உடைய R1,
R2 மற்றும் R3 ஆகிய
மூன்று மின்தடையாக்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.
A) ஒவ்வொரு மின்தடை
வழியாக செல்லும் மின்னோட்டம்
B) மின்சுற்றில்
பாயும் மொத்த மின்னோட்டம்.
C) மின்சுற்றில் உள்ள
மொத்த மின்தடை ஆகியவைகளை கணக்கிடு.
தீர்வு :
A) மூன்று
மின்தடையாக்கிகளும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளதால் மூன்று மின்
தடையாக்கிகளுக்கு எதிராக உள்ள மின்ன ழுத்தமும் சமமாக இருக்கும். (i.e.
V=1OV)
எனவே R1 வழியாக
செல்லும் மின்னோட்டம்
B) மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டம்,
= I = I1 +
I2 + I3
= 2 + 1 + 0.5 = 3.5 A
4. 1 Ω, 2 Ω
மற்றும் 4 Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று
மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி
வழியாக 1A மின்னோட்டம்
சென்றால் மற்ற இரு மின் தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை
காண்க
தீர்வு :
R1 = 1 Ω, R2 = 2 Ω, R3 = 4 Ω
Current I1
= 1 A
1 Ω மின் தடைக்கு எதிராக இருக்கும்
மின்னழுத்த வேறுபாடு = I1R1 = 1 ×
1 = 1 V
இங்கு மின்தடைகள் இணையாக இருப்பதால்
மூன்று மின்தடைகளுக்கும் சமமான மின்னழுத்த வேறுபாடே இருக்கும்.
எனவே 2 Ω
மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம்,
V/R2 = 1/2 = 0.5 A
இதுபோல 4 Ω மின்
தடை வழியாக பாயும் மின்னோட்டம் V/R2 =
1/4 = 0.25 A