புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - பரிணாமம் : வினா விடை | 12th Zoology : Chapter 6 : Evolution
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பூமியில் முதல் உயரினங்கள் தோன்றியது
அ) காற்றில்
ஆ) நிலத்தில்
இ) நீரில்
ஈ) மலைப்பபகுதியில்
விடை : இ) நீரில்
2. 'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்'
அ) சார்லஸ் டார்வின்
ஆ) லாமார்க்
இ) வீஸ்மான்
ஈ) ஹியூகோ டி விரிஸ்
விடை : அ) சார்லஸ் டார்வின்
3. கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு?
அ) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு
ஆ) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு
இ) முயன்று பெற்ற பண்பு மரபுப் பண்பாதல் கோட்பாடு
ஈ) வளர்கரு பிளாசக் கோட்பாடு
விடை : அ) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு
4. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
அ) பரவல் முறை தகவமைப்பு
ஆ) குவி பரிணாமம்
இ) விரி பரிணாமம்
ஈ) மாறுபாடுகள்
விடை : ஆ) குவி பரிணாமம்
5. 'தொழிற்சாலை மெலானினாக்கம்' என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது
அ) இயற்கைத் தேர்வு
ஆ) தூண்டப்பட்ட திடீர் மாற்றம்
இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்தல்
ஈ) புவியியல் தனிமைப்படுத்துதல்
விடை : அ) இயற்கைத் தேர்வு
6. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?
அ) இணைப்பு உயிரிகள்
ஆ) பருவ கால வலசை போதல்
இ) தகவமைப்பு பரவல்
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை முறை
விடை : இ) தகவமைப்பு பரவல்
7. வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
அ) டார்வின்
ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்
இ) லாமார்க்
ஈ) ஆல்ஃப்ரட் வாலாஸ்
விடை : ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்
8. புதைவடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது?
அ) மின்னணு நுண்ணோக்கி
ஆ) புதைபடிவங்களின் எடை
இ) கார்பன் முறை வயது கண்டறிதல்
ஈ) படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்
விடை : இ) கார்பன் முறை வயது கண்டறிதல்
9. புதைவடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?
அ) வெப்பப் பாறைகள்
ஆ) உருமாறும் பாறைகள்
இ) எரிமலைப் பாறைகள்
ஈ) படிவுப் பாறைகள்
விடை : ஈ) படிவுப் பாறைகள்
10. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும்?
அ) மூதாதைத் தன்மை
ஆ) ஆன்ட்டோஜெனி
இ) பைலோஜெனி (இன வரலாறு)
ஈ) தொல்லுயிரியல்
விடை : இ) பைலோஜெனி (இன வரலாறு)
11. ஊர்வன இனத்தில் பொற்காலம்
அ) மீசோசோயிக் பெருங்காலம்
ஆ) சீனோசோயிக் பெருங்காலம்
இ) பேலியோசோயிக் பெருங்காலம்
ஈ) புரோட்டிரோசோயிக் பெருங்காலம்
விடை : அ) மீசோசோயிக் பெருங்காலம்
12. எந்தக் காலம் ‘மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது
அ) பெர்மியன்
ஆ) டிரையாசிக்
இ) டிவோனியன்
ஈ) ஆர்டோவிசியன்
விடை : இ) டிவோனியன்
13. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
அ) குவார்டெர்னரி
ஆ) கிரட்டேஷியஸ்
இ) சைலுரியன்
ஈ) கேம்பிரியன்
விடை : அ) குவார்டெர்னரி
14. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
அ) 650-800 க.செ.மீ
ஆ) 1200 க.செ.மீ
இ) 900 க.செ.மீ
ஈ) 1400 க.செ.மீ
விடை : ஈ) 1400 க.செ.மீ
15. டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம்
அ) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்
ஆ) ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்
இ) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி
ஈ) இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்
விடை : இ) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி
16. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது
அ) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
ஆ) திடீர் மாற்றம் இல்லாத நிலையில்
இ) வலசை போதல் இல்லாத நிலையில்
ஈ) இனக்கூட்டத்தின் அளவு பெரிதாக இருந்தால்
விடை : அ) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
17. தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களைப் பட்டியலிடுக
* தொடக்க கால பூமியின் சரியான வளிமண்டலம் இல்லை.
* அதில் அம்மோனியா மீத்தேன் ஹைட்ரஜன் மற்றும் நீராவி போன்றவை இருந்தன.
* புற ஊதாக்கதிர்கள் நீர் மூலக்கூற்றை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்தது.
* அம்மோனியா மற்றும் மீத்தேன் போன்றவை ஆக்சிஜனுடன் சேர்ந்து கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் பிற வாயுக்களாக மாறின.
18. மூன்று வகை புதைவடிமாக்கல் வகைகளை விவரி.
1) எஞ்சிய உடல் பகுதிகள்
* விலங்குகளின் மிகக் கடினமான உடல் பகுதிகளை எலும்புகள் பற்கள் அல்லது ஓடுகள் பூமியின் அடுக்குகளில் பாதுகாக்கப்படுகின்றன.
* கடல் வாழ் விலங்குகளின் எலும்புகள் ஓடுகள் படிவுகளால் மூடப்படுகின்றன.
* கடல்நீரின் உப்புத்தன்மையால் அவை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
* 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பளி மாமுத் யானைகள் சைபீரியாவின் உறைந்த கடற்கரைப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது.
* சில மனிதர்களின் மற்றும் விலங்குகளின் உடல்கள் பொம்பெய் என்ற பழங்கால நகரத்தில் வெசுவியல் எரிமலைச் சாம்பலில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
2) கல்லாதல்
* விலங்குகள் இறந்த பின்னர் உடல் பகுதியின் மூலக்கூறுகள் தாது உப்புகளின் மூலக்கூறுகளால் பதிலீடு செய்யப்படுகின்றன.
* மூல உடல்பகுதிகள் சிறிது சிறிதாக அழிந்து விடுகின்றன.
* இரும்பு பைரைட்டுகள், சிலிகா கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் பைகார்பனேட்டுகள் போன்ற முக்கிய தாது உப்புகள் பெரும்பணியாற்றுகின்றன.
3) இயற்கையான அச்சுகளும் வார்ப்புகளும்
அச்சுகள்
இறந்த விலங்குகளின் உடல்கள் மென்மையான சேறு போன்ற பகுதியில் கடினமாகி பின்பு கல்லாக மாறுகிறது.
வார்ப்புகள்
அச்சுகளின் உட்புறக் குழிகள் தாது உப்புகளால் நிரப்பப்பட்டு படிவமாக மாறுகின்றன.
கோப்ரோலைட்டு
* கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள் சிறு உருண்டைகளாக காணப்படுதல் கோப்ரோலைட்டுகள் எனப்படும்.
* இதன் மூலம் விலங்குகளின் உணவு பழக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.
19. குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.
வரி பரிணாமம்
1. அமைப்பொத்த உறுப்புகள் விரி பரிணாமத்தை ஏற்படுத்தும்
2. உருவாக்கத்தை ஒரே மாதிரியாக அமைந்து வெவ்வேறு செயல்களை செய்யக் கூடிய உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.
விலங்குகளில் எடுத்துக் காட்டுகள்
வெவ்வேறு முதுகெலும்புகளின் முன்னங்கால்கள் அமைப்பில் ஒற்றுமை காணப்படுகின்றன.
குவி பரிணாமம்
1. செயலொத்த உறுப்புகள் குவி பரிணாமத்தை உருவாக்கும்
2. அமைப்பு அடிப்படையில் வேறுபட்டு ஒரே விதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள் செயலொத்த உறுப்புகள் ஆகும்
விலங்குகளில் எடுத்துக்காட்டுகள்
பாலூட்டி மற்றும் ஆக்டோபஸ் ஆகியவற்றின் கண்கள்.
பெங்குவின் மற்றும் டால்பீன்களின் அகலத் துடுப்புகள்
தாவரங்களில் எடுத்துக் காட்டுகள்
1. காகிதப்பூக்கள் உள்ள முட்கள் சுரை மற்றும் பட்டாணியில் காணப்படும் பற்றுக் கம்பிகள் முள் பாதுகாப்பு பற்றுக்கம்பி பற்றிப்படர
தாவரங்களில் எடுத்துக்காட்டுகள்
1. சீனிக் கிழங்குகளில் வேர் மாற்றுரு
2. உருளைக்கிழங்கின் தண்டின் மாற்றுரு. இரண்டு - தாவரங்களிலும் இவை உணவு சேமிப்பு என்ற பொதுவான செயலை செய்கின்றன.
20. ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (P2+2pq+q2=1) இனக்கூட்டத்தில் சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது? மரபியல் சமநிலையைப் பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளை பட்டியலிடுக.
* வண்டுகளில் இரண்டு நிறங்கள் இருப்பதாக கொள்ளலாம்
* கருஞ்சாம்பல் நிறத்தை நிர்ணயிப்பது மரபணு' AA' மற்றும் ' Aa'.
* வெளிர் சாம்பல் நிறத்தை நிர்ணயிப்பது 'aa'.
AA மரபணுவின் நிகழ்வெண் AA = p2
Aa மரபணுவுள் நிகழ்வெண் = 2pq
aa ன் நிகழ்வெண் = q2
மரபணுவாக்க நிகழ்வெண்ணை ஹார்டி - வீன்பெர்க் சமன்பாட்டைக் கொண்டு நிருபிக்கலாம்.
(P+q)2 = p2 + 2pq + q2
P = 0.3, q = 0.7
p2= (0.3)2 = 0.09 = 9% AA
2pq = 2(0.3) (0.7) = 0.42 = 42% Aa
q2 = (0.7)2 0.49 = 49% aa
எனவே இவ்வண்டின் கூட்டம் ஹார்டி வீன்பெர்க் விதிக்கு உட்பட்டது.
ஹார்டி - வீன்பெர்க் சமநிலை
நான்கு காரணிகள் இச்சமநிலையை பாதிக்கும்
* மரபணு ஓட்டம்
* மரபியல் நகர்வு
* திடீர் மாற்றம்
* குறுக்கெதிர் மாற்றம்
* இயற்கைத் தேர்வு
21. திடீர் மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி – வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக
* ஹார்டி வீன்பெர்க் விதியின் படி அல்லில்களின் நிகழ்வெண் இனக் கூட்டத்தில் மாறாதிருக்கும்.
* இனக்கூட்டத்தில் மரபணு ஓட்டம் மரபணு நகர்வு தீடீர் மாற்றம் குறுக்கெதிர் மாற்றம் மற்றும் இயற்கை தேர்வு இல்லாதிருத்தால் மாறாதிருக்கும்.
* எடுத்துக்காட்டாக ஒனாய் இனக்கூட்டத்தில் சாம்பல் நிற உரோமத்திற்கான மரபணு நிகழ்வெண் மாற்றம் பெற்று கருப்புள்ள உரோமத்தை உருவாக்கும். இது இயற்கைத் தேர்வு அல்லது வலசைபோதல் போன்ற சீரற்ற நிகழ்வுகளால் ஏற்படலாம்.
22. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?
* டார்வினின் கோட்பாடுபடி சூழ்நிலைக்கேற்ப வாழ ஏற்படும் மாறுபாடுகளே வாழத்தகுதி வாய்ந்தவை.
* இத்தகைய உயிரிகள் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்த்து வாழ தகுதி வாய்ந்தவை.
* அத்தகைய மாறுபாடுகள் அடுத்த சந்ததிகளுக்கு மரபு கடத்தப்படுகின்றன.
* அவ்வாறு தகுதி பெற்ற உயிரினங்கள் தகுதி பெறாத உயிரினங்களை விட நன்கு வாழும் என்றும் அவை அதிக வாரிசு உயிரிகளை உருவாக்கும் இதற்கு இயற்கை தெரிந்தெடுத்தல் ஒரு காரணம் ஆகும்.
* வாழ்க்கை வாழ்வதற்கான போராட்டம் வாழத் தகுதியுடைய உயிரினங்களை உருவாக்கும். அத்தகைய உயிரிகள் தகவமைப்புகளோடு சூழ்நிலையில் வாழத் தகுதி அடைகின்றன.
23. டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?
டார்வினியத்திற்கான எதிர் கருத்துக்கள்
* மாறுபாடுகள் தோன்றும் முறை குறித்து டார்வின் சரியாக விளக்கவில்லை.
* தகுதியுடையன பிழைத்தவை மட்டுமே விளக்குகிறது. அத்தகுதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை விளக்கவில்லை .
* அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாத சிறு மாறுபாடுகளை மட்டும் டார்வின் கவனத்தில் கொண்டார்.
* உடல் செல் மற்றும் இனப் பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர் வேறுபடுத்தவில்லை.
* எச்ச உறுப்புகள் அளவுக்கதிகமாக சிறப்பு பெற்றிருத்ததைக் குறித்து டார்வின் விளக்கவில்லை.
24. இயற்கை தேர்வு செயல்படுதலை, கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக்கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
தொழிற்சாலை மெலானியாக்கம்
* எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு கரும்புள்ளி அந்திப்பூச்சி (பிஸ்டன் பெட்டுலேரியா) மூலம் விளக்கலாம்.
* தொழில்மயமாக்கத்திற்கு முன் வெள்ளை மற்றும் கருப்பு நிற அந்திப்பூச்சிகள் பரவலாக காணப்பட்டன
* தொழில்மயமாக்களுக்கு முன்பு கட்டிடங்களின் வெள்ளை நிற சுவரின் பின்புலத்தில் வெள்ளை நிற அந்திப்பூச்சுகளின் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பித்தன.
* தொழில்மயமாக்களுக்கு பின் மரங்களின் தண்டுப் பகுதிகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைக் கரியினால் கரியநிறமாக மாறின.
* கருப்பு நிற அந்திப்பூச்சிகள் இந்த கரிய மரத் தண்டுகளில் உருவ மறைப்பு பெற்றன.
* வெள்ளை நிறப் பூச்சிகள் கொன்றுண்ணிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
* கரிய நிறமுடைய அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது.
* இயற்கை கருப்பு நிற அந்திப்பூச்சிக்கு நேர்மறை தேர்வு அழுத்தத்தை வழங்கியது.
* தகுந்த தகவமைப்புப் பெற்ற உயிரினங்கள் இயற்கைத் தேர்வு காரணமாக அதிகமான வாரிசுகளை உருவாக்கின.
25. டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக.
தகவமைப்பு பரவல்
* இது ஒரு பரிணாம முறை
* ஒருமூதாதை இனத்திலிருந்து புதியசிற்றினங்கள் புதிய வாழிடங்கள்வாழ்வதற்கேற்றதகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு தகவமைப்புப் பரவல் எனப்படும்.
டார்வினின் குருவிகள்
* இப்பறவைகளின் மூதாதையர் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவை.
* டார்வினியக் குருவிகள் 14 சிற்றினங்களாகப் பரிணமித்திருந்தன.
* உடல் அளவு அலகின் வடிவம் மற்றும் உணவுப்பழக்கம் ஆகிய பண்புகள் வேறுபட்டிருந்தன.
* உடல் அளவு மற்றும் அலகின் வடிவம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுபாடுகளால் அவை வெவ்வேறு வகை உணவுகளான பூச்சிகள் விதைகள் கள்ளித் தாவரத்தின் மகரந்தத் தேன் மற்றும் உடும்பின் இரத்தம் ஆகியவற்றை உண்ண முடிகிறது.
* ALX, மரபணுக்களால் ஏற்பட்ட மரபணு மாற்றங்களே வெவ்வேறு வகை அலகு வடிவங்களுக்கு காரணமாகும்.
ஆஸ்திரேலியாவின் பைப்பாலூட்டிகள்
* இவைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொது மூதாதையரிடமிருந்து தனியாக தோன்றின.
* ஆஸ்திரேலிய பைப் பாலூட்டிகள் தகவமைப்பு பரவல் மூலம் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு வாழிடங்களில் பரவலாக வாழ்கின்றன.
26. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக் கோட்பாட்டினை தவறென நிருபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
* ஆகஸ்ட் வீஸ்மான் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிருபித்தார்.
* தனது சோதனையில் தொடர்ந்து 20 தலைமுறைகளாக சுண்டெலிகள் வாலினை துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.
* அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.
* உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படாது.
* இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக் கடத்துலுக்கு உரியன என்றும் வீஸ்மான் நிருபித்தார்.
27. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது
டிவிரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு
* திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
(எ.கா) : அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளைக் கண்டறிந்தார்
* பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
* ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்
* திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.
* இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது தீடீர் மாற்றங்கள் ஏற்படும்.
* திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
* திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
28. நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வு முறைகளை உதாரணங்களுடன் விளக்குக.
விடை :
நிலைப்படுத்துதல் தேர்வு :
* நிலையான சுற்றுச்சூழல் இருக்கும் போது செயல்படுகிறது.
* சராசரி புறத்தோற்றப் பண்புகள் உடைய உயிரிகள் தப்பிப் பிழைக்கும்.
* இரு பக்கங்களிலும் உள்ள மிகை பண்புகள் உயிரினங்கள் உயிரினத் தொகையிலிருந்து நீக்கப்படும்.
* புதிய சிறப்பினைமாக்கல் நிகழாது
* புறத்தோற்றப் பண்புகளின் நிலைத்தன்மை தலைமுறைகளிலும் மாறாமல் பேணப்படும்
* உதாரணம் புயலின் போது தப்பி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை சராசரி அளவை ஒட்டி இருக்கும்.
* புயலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாத சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மாறுபாடுகளின் விளிம்புகளில் சேகரமாகி விடுகிறது. இப்போக்கு நிலைப்படுத்துதல் தேர்வினைக் குறிக்கும்.
இலக்கு நோக்கி முறை
* படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல் இலக்கு நோக்கிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
* புறத்தோற்றப் பண்புகள் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி படிப்படியாக உயிரினங்கள் நீக்கப்படுகின்றன.
* எடுத்துக்காட்டாக ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் உடல் அளவில் உள்ள வேறுபாடுகளைக் கூறலாம்.
* ஆண் மற்றும் பெண் சிட்டுக் குருவிகளின் புறத்தோற்றத்தில் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் உடல் எடை வேறுபாடுகள் காணப்படும்.
* பெண் குருவிகள் அதன் உடல் எடையோடு தொடர்புடைய இலக்கு நோக்கிய தேர்வு முறையை வெளிப்படுத்துகிறது.
உடைத்தல் முறைத் தேர்வு
* ஒரே விதமான சுற்றுச்சூழல் நிலை மாற்றம் பெற்று பல்வகை சுற்றுச்சூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும் போது இவ்வகைத் தேர்வு முறை செயல்படுகிறது.
* இரு முனைகளிலும் காணப்படும் புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
* சராசரி புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் இனக்கூட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
* இனக்கூட்டம் துணை இனக்கூட்டங்களாகப் பிரிகின்றன.
* இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாறுபட்ட சிற்றினங்கள் தோன்றுகின்றன.
* எடுத்துக்காட்டு : காலபாகஸ் தீவுகளில் வாழும் டார்வீனின் குருவிகளில் உணவாகப் பயன்படும் விதையின் அளவுக்கேற்ப அவற்றின் அலகுகளின் நீளம் மாறுபடுகிறது.
29. மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக
ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ எரக்டஸ் → ஹோமோ சேப்பியன்ஸ் → ராமாபித்திகஸ் → ஹோமோ ஹாபிலிஸ் ராமாபித்திகஸ் → ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ ஹாபிலிஸ் → ஹோமோ எரக்டஸ் → ஹோமோ சேப்பியன்ஸ்
30. ஆஸ்ட்ரலோபித்திகஸ் மற்றும் ராமாபித்திகஸ் ஆகியவற்றின் உணவுப் பழக்கம் மற்றும் மூளை அளவுகளை வேறுபடுத்துக.
ஆஸ்ட்ரலோபித்திகஸ்
a. உணவுப் பழக்கம்
1 அனைத்துண்ணிப் பண்பு
b. மூளை அளவு
2. 350 - 450 கன செ.மீ
ராமாபித்திகஸ்
1. நவீன மனிதனைப் போன்று கடினமான விதைகள் கொட்டைகளை உணவாகக் கொண்டன
2. 1300 - 1500 கன செ.மீ