Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மனித நலன் மற்றும் நோய்கள்

விலங்கியல் - மனித நலன் மற்றும் நோய்கள் | 12th Zoology : Chapter 7 : Human Health and Diseases

   Posted On :  13.05.2022 04:19 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 7 : மனித நலன் மற்றும் நோய்கள்

மனித நலன் மற்றும் நோய்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வரையறையின்படி "உடல் நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று. உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நல்வாழ் நிலையே உடல் நலம் என்பதாகும்".

மனித நலன் மற்றும் நோய்கள்


பாடம் 7


தும்மலின் போது வெளிப்படும் கோழைத்துளிகள் நோய்களைப் பரப்புகின்றன.


பாட உள்ளடக்கம்

7.1 பொதுவான மனித நோய்கள் 

7.2 தனிப்பட்ட மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பு 

7.3 விடலைப் பருவம்- தவறான போதை மருந்து மற்றும் மதுப்பழக்கம் 

7.4 மன நலன் - மன அழுத்தம் 

7.5 மனித வாழ்க்கை முறை குறைபாடுகள்


கற்றலின் நோக்கங்கள் : 

* பல்வேறு பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் குடற்புழுவின நோய்களைப் பற்றி கற்றுக் கொள்ளுதல். 

* மலேரியா ஒட்டுண்ணியின் வாழ்க்கைச் சுழற்சியை புரிந்து கொள்ளுதல். 

* போதை மருந்துகள் மற்றும் மதுவினால் விளையும் தீய விளைவுகளை உணர்தல்.

* அவரவருடைய நடத்தை ,உடல் நல பாரமரிப்ப மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றுக்கான பொறுப்பை உணர்தல். 

* மனநலன் மற்றும் தங்கள் நல்வாழ்விற்காக பின்பற்றப்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வரையறையின்படி "உடல் நலம் என்பது வெறுமனே நோய்கள் இல்லா நிலையன்று. உடல், மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நல்வாழ் நிலையே உடல் நலம் என்பதாகும்". மக்கள் உடல் நலமுடையவர்களாக, இருந்தால் தங்களுடைய வேலையில் அதிக திறனுடையவர்களாகவும் இருப்பார்கள். இதையே ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என நாம் கூறலாம். உடல் நலம் மக்களின் வாழ்நாள் காலத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் இறப்பு வீதத்தையும் குறைக்கின்றது. நல்ல உடல் நலத்தை பராமரிக்க, தன் சுத்தம், முறையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவை முக்கியமானதாகும்.




Tags : Zoology விலங்கியல்.
12th Zoology : Chapter 7 : Human Health and Diseases : Human Health and Diseases Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 7 : மனித நலன் மற்றும் நோய்கள் : மனித நலன் மற்றும் நோய்கள் - விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 7 : மனித நலன் மற்றும் நோய்கள்