கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.2 | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry
பயிற்சி 4.2
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
1. பின்வருவனவற்றிற்குப் படம் வரைந்து விடையளி
i) சமச்சீர்க் கோடற்ற முக்கோணம்
ii) ஒரேயொரு சமச்சீர்க் கோடு பெற்ற முக்கோணம்
iii) மூன்று சமச்சீர்க் கோடுகள் பெற்ற முக்கோணம்
விடை :
i) அசமபக்க முக்கோணம்
ii) இரு சமபக்க முக்கோணம்
iii) சமபக்க முக்கோணம்
2. கட்டத்திலுள்ள எழுத்துகளில் எந்தெந்த எழுத்துகளுக்கு

i) சமச்சீர்க் கோடு இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
iii) எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
iv) சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
விடை :
i) P, N, S, Z
ii) I, O, N, X, S, H, Z
iii) A, M, E, D, I, K, O, X, H, U, V, W
iv) I, O, X, H
3. பின்வரும் படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர்த் வரிசை ஆகியவற்றைக் காண்க.

விடை : i) 0, 2 ii) 1, 0 iii) 2, 2 iv) 8, 8 v) 1, 0
4. 101 என்ற மூன்றிலக்க எண் சுழல் மற்றும் எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது. அவ்வாறு சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்ற மூன்றிலக்க எண்களுக்கு மேலும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.
விடை : 181, 111, 808, 818, 888
5. செவ்வகப் பட்டையில் பின்வரும் அமைப்பை (pattern) இடப்பெயர்வு செய்து வடிவமைப்பை நிறைவு செய்க.

விடை :

மேற்சிந்தனைக் கணக்குகள்
6. ஒரு கட்டத்தை மட்டும் நிழலிட்டுப் பின்வருவனவற்றைப் பெறச் செய்க.

i) ஒரு சமச்சீர்க் கோடு
ii) சுழல் சமச்சீர் வரிசை 2
விடை :

7. சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக. (எவையேனும் 3 வழிகளில்)
விடை :

8. பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.
விடை :

9. கொடுக்கப்பட்ட ஒழுங்கு பலகோணங்களுக்குச் சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் கண்டறிந்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

i) 10 பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் –––––––––– சமச்சீர்க்கோடுகளைப் பெற்றிருக்கும்.
விடை : 10
ii) 10 சமச்சீர்க்கோடுகளைக் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் ––––––– சுழல் சமச்சீர் வரிசை பெற்றிருக்கும்.
விடை : 10
iii) ‘n' பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் –––––––– சமச்சீர்க்கோடுகள் மற்றும் –––––––––––– சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றிருக்கும்.
விடை : n, n
10. இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக

விடை :
