Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை

சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry

   Posted On :  23.11.2023 11:11 pm

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை

எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை

குமரன் கண்ணாடியின் முன் நின்று, தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். தன்னுடைய மாமா அன்பளிப்பாக அளித்த டி–சர்ட் மீது I LOVE MOM என்ற அழகான வாக்கியத்தைக் கவனித்தான்.

எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை:

குமரன் கண்ணாடியின் முன் நின்று, தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். தன்னுடைய மாமா அன்பளிப்பாக அளித்த டிசர்ட் மீது I LOVE MOM என்ற அழகான வாக்கியத்தைக் கவனித்தான்.


அவற்றுள் I மற்றும் MOM என்ற சொற்களின் எழுத்துகள் கண்ணாடியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதேபோன்று இருப்பதையும் LOVE என்ற சொல்  என்றவாறு மாறியிருப்பதையும் பார்த்தான்.

ஆர்வத்தின் காரணமாக, மேலும் சில ஆங்கிலப் பெரிய எழுத்துகளைக் கொண்ட அட்டைகளைக் கண்ணாடியில் காண்பித்து எந்தெந்த எழுத்துகள் மாறாமல் அதேபோன்று தெரிகிறது என்பதைச் சரிபார்த்தான். அவன் கண்டறிந்த சில எழுத்துகள் A, H மற்றும் I ஆகியவை கண்ணாடியில் அதே போன்று பிரதிபலித்தன. ஏனெனில் அவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கின்றன.

சிந்திக்க 

கண்ணாடியில் எவ்வித மாற்றமில்லாமல் அதேபோன்று தெரியும் மற்ற பெரிய ஆங்கில எழுத்துகள் யாவை?

ஏற்கெனவே, சமச்சீர்க் கோடானது ஒரு வடிவத்தை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் என்பது நாம் அறிந்ததே. அக்கோட்டின் மீது நாம் கண்ணாடியை வைத்தால், அந்த வடிவத்தின் மற்றொரு பகுதி ஆடியால் எதிரொளிப்புச் செய்யப்பட்டு, முழுமையான வடிவம் கிடைக்கிறது. இது எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை அல்லது ஆடிச் சமச்சீர்த் தன்மை எனப்படுகிறது.

குறிப்பு: ஒரு வடிவம் சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருந்தால் அது ஆடிச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.

ஒரு பொருளைக் கண்ணாடியில் காண்பிக்கும் பொழுது, ஆடியில் கிடைக்கும் அப்பொருளின் பிம்பத்தை எதிரொளிப்பு என்கிறோம். பின்வரும் படமானது ஆங்கில எழுத்தான A இன் எதிரொளிப்பைக் காட்டுகிறது. A மற்றும் அதன் பிம்பத்திற்கு இடையில் கண்ணாடிக்குப் பதிலாக ஒரு கோடு இருப்பதாக நினைத்துக்கொள்வோம்.


பொருளும் அதன் கண்ணாடி பிம்பமும் கோட்டினைப் (mirror line) பொறுத்து சமச்சீர்த் தன்மை பெற்றிருப்பதை நாம் காணலாம். காகிதத்தைக் கோட்டின் வழியாக மடித்தால் அக்கோடானது சமச்சீர்க்கோடாக மாறுகிறது.

குறிப்பு

ஒரு பொருளும் அதன் பிம்பமும் ஆடியிலிருந்து சமதூரத்தில் இருக்கும்.

பொருளுக்கும் அதன் ஆடிப் பிம்பத்திற்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு அதன் இட வல மாற்றம் ஆகும்.


எடுத்துக்காட்டு

ஒரு பகுதியானது மற்றொரு பகுதியின் எதிரொளிப்பு எனில், கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஆடிச் சமச்சீர்க்கோடு (mirror line) வரைக.

தீர்வு



எடுத்துக்காட்டு

கொடுக்கப்பட்டுள்ள கோட்டினைப் பொருத்துப் பின்வரும் படங்களை எதிரொளிப்பு செய்க


தீர்வு



எடுத்துக்காட்டு

MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக?

தீர்வு



எடுத்துக்காட்டு 8

கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை உடைய தாள் ஆடிச் சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் ஏதாவது ஒரு கட்டத்தை மட்டும் வண்ணமிடுக மற்றும் சமச்சீர்க்கோடு வரைக.


தீர்வு



எடுத்துக்காட்டு 9

கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணப் பகுதியை முதலில் l என்ற கோட்டைப் பொருத்தும் பிறகு m என்ற கோட்டைப் பொருத்தும் எதிரொளிப்பு செய்க.




செயல்பாடு

மைத்துளிகள் மூலம் சமச்சீர்த் தன்மையுள்ள படங்களை உருவாக்குதல்.

படி 1: ஒரு காகிதத்தை எடுத்து அதை இரு சமபாகங்களாக மடித்து மடிப்புக்கோடு உருவாக்குக

படி 2: மடிப்புக்கோட்டிற்கு ஒரு பகுதியில் மட்டும் மைத்துளிகள் இடுக.

படி 3: காகிதத்தை மடிப்புக்கோட்டின் வழியே மடித்து அழுத்துக.

படி 4: காகிதத்தினைத் திறந்தால் மைத்துளிகள் அடுத்த பகுதியில் பதிந்திருப்பதையும் அவை மடிப்புக்கோட்டினைப் பொறுத்துச் சமச்சீர்த் தன்மை பெற்றிருப்பதையும் நீங்கள் காணலாம்.



இவற்றை முயல்க

1. கடவுச்சொல் கண்டறிக.:

கண்ணுக்கினியாள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட தனது மடிக்கணினியில் ஒரு புதிய விளையாட்டுச் செயலியை வைத்துள்ளாள். கீழேயுள்ள ஆங்கில பத்தியில் அந்தக் கடவுச் சொல் உள்ளதாகவும் அதனைக் கண்டுபிடிக்குமாறும் தனது நண்பர்களுக்குச் சவால் விட முடிவு செய்கிறாள்.

"Kannukkiniyal has a new game app in her laptop protected with a password. She has decided to challenge her friends with this paragraph which contains that password". 

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் அதைக் கண்டறியலாம்.

படிகள் :

i) ஒரு காகிதத்தில், மேலேயுள்ள பத்தியைப் பெரிய ஆங்கில எழுத்துகளில் எழுதுக.

ii) அக்காகிதத்தினைத் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.

iii) எவ்வித மாற்றமுமின்றித் தெரியும் வார்த்தையே அந்தக் கடவுச்சொல் ஆகும்.

2. B, C, D, E, H, I, K, O மற்றும் X ஆகிய எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களைக் கண்டறிக. அவற்றை ஒரு காகிதத்தில் எழுதுக. காகிதத்தைத் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.

i) நிலைக்குத்து மற்றும் கிடைமட்டச் சமச்சீர்க்கோட்டினைக் கொண்ட எழுத்துகளைப் பட்டியலிடுக.

ii) HIKE, DICE, COOK ஆகிய சொற்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் கண்ணாடியில் தெரிகிறதா?

ii) நீங்கள் கண்டறிந்த சொற்களில், எவ்வித மாற்றமும் இல்லாமல் அதேபோன்று கண்ணாடியில் தெரியும் சொற்கள் –––––––––––––, –––––––––––––, ––––––––––––, ...

Tags : Symmetry | Term 3 Chapter 4 | 6th Maths சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 4 : Symmetry : Reflection Symmetry Symmetry | Term 3 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை : எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை - சமச்சீர்த் தன்மை | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : சமச்சீர்த் தன்மை