பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - சமச்சீர்த் தன்மை | 6th Maths : Term 3 Unit 4 : Symmetry
இயல் 4
சமச்சீர்த் தன்மை
கற்றல் நோக்கங்கள்
• நமது சுற்றுச்சூழலில் உள்ள சமச்சீர்த் தன்மை கொண்ட பொருட்களை அடையாளம் காணுதல்.
• சமச்சீர்த் தன்மையின் வகைகளைப் புரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
நமது சுற்றுச்சூழலில் பெரும்பாலான பொருள்கள் அழகிய தன்மையோடு காட்சியளிப்பதை நாம் காண்கிறோம். ஏன் அவை அழகாகக் காட்சியளிக்கின்றன என உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், அப்பொருள்கள் சரியான விகிதத்தில் அமைந்து பெற்ற ஒத்திசைவு சமநிலையையும் பெற்றிருப்பதால் அழகாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறான ஒருங்கமைவுத் தன்மையினைச் சமச்சீர்த் தன்மை என்கிறோம். பொம்மைகள் செய்தல், ஓவியங்கள் வரைதல், கோலமிடுதல், வீட்டிற்குத் தேவையான பொருள்களை வடிவமைத்தல் வாகனங்கள் உற்பத்தி செய்தல் மற்றும் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு துறைசார் பணிகளில் சமச்சீர்த் தன்மையானது முக்கியப் பங்கினை வகிக்கிறது.
எங்கும் கணிதம்–அன்றாட வாழ்வில் சமச்சீர்த் தன்மை
பூங்காவில் சமச்சீர்த் தன்மை கொண்ட தாவரங்கள்
செம்பருத்தி மலரில் சுழல் சமச்சீர்த் தன்மை