நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 (நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்) | 4th Maths : Term 1 Unit 5 : Time
பயிற்சி 5.1
1. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
i வாரத்தின் முதல் நாள் எது?
விடை: ஞாயிறு
ii ஒரு வாரத்தில் எத்தனை நாள் நீ பள்ளிக்குச் செல்வாய்? அவை யாவை?
விடை: ஆறு. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.
iii ஒரு வாரத்தில் விடுமுறை நாள்கள் எத்தனை? அவை யாவை?
விடை: ஒன்று (ஞாயிறு)
iv வாரத்தின் மூன்றாவது நாள் எது?
விடை: செவ்வாய் கிழமை
2. கலைந்திருக்கும் எழுத்துகளை ஒழுங்குபடுத்தி நாள்களைக் கண்டுபிடித்து பின்னர் வரிசைப்படுத்தவும்.
செயல்பாடு
1. தரையில்/மைதானத்தில் வாரத்தின் நாள்களின் பெயரை எழுதவும். மாணவர்களை வட்டத்தில் ஓடுமாறு கூறவும். ‘வெள்ளி’ எனக் கூறும் போது வெள்ளிக்கிழமைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் நிற்க வேண்டும்.
2. மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும். மாதங்களின் பெயர்கள் எழுதிய அட்டைகளைப் பரப்பி வைக்கவும். குழுவினரை மாதங்களை வரிசைப்படுத்தச் செய்யவும்.