நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கடிகார நேரத்தை மணிகள் மற்றும் நிமிடங்களுக்குத் துல்லியமாக கண்டறிதல் | 4th Maths : Term 1 Unit 5 : Time
கடிகார நேரத்தை மணிகள் மற்றும் நிமிடங்களுக்குத் துல்லியமாக கண்டறிதல்
அறிமுகம்
ஆசிரியார் பின்வரும் வினாக்களை மாணவர்களிடம் கேட்டு கலந்துரையாடவும்
ஆசிரியர்: நீ காலையில் எத்தனை மணிக்கு விழித்தெழுவாய்?
மாணவன்: _____ _____ ______
ஆசிரியர்: நீ எத்தனை மணிக்கு பள்ளிக்கு புறப்படுவாய்?
மாணவன்: _____ _____ ______
ஆசிரியர்: நீ மதிய உணவு உண்ணும் நேரம் யாது?
மாணவன்: _____ _____ ______
ஆசிரியர்: நீ மாலையில் விளையாடும் நேரம் யாது?
மாணவன்: _____ _____ ______
ஆசிரியர்: நீ இரவியில் எத்தனை மணிக்கு உறங்கச் செல்வாய்?
மாணவன்: _____ _____ ______
கடிகாரத்தின் முகப்பில் 1 முதல் 12 எண்களும் மூன்று முட்களும் உள்ளன.
சிறிய முள் மணியைக் குறிக்கிறது.
பெரிய முள் நிமிடத்தைக் குறிக்கிறது.
சிவப்பு முள் விநாடியைக் குறிக்கிறது.
செயல்பாடு
மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். அவர்களில் ஒரு மாணவரிடம் மாதிரி கடிகாரம் ஒன்றை கொடுக்கவும். இப்பொழுது ஆசிரியர் ஒலி எழுப்பியவுடன் மாணவர்கள் கடிகாரத்தை அடுத்தடுத்த மாணவருக்குக் கடத்த வேண்டும். பின்னர் மீண்டும் ஆசிரியர் ஒலி எழுப்பியவுடன் கடத்துவதை நிறுத்த வேண்டும். யாரிடம் இப்பொழுது கடிகாரம் உள்ளதோ அந்த மாணவர் ஆசிரியர் கூறும் மணியை கடிகாரத்தில் வைத்துக் காட்ட வேண்டும். சரியாக வைத்த வரை பாராட்டி விளையாட்டைத் தொடர வேண்டும்.
ஆசிரியர் குறிப்பு: வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆசிரியர் கடிகாரப் பதிவுத்தாளை முள்கள் இல்லாமல் தயார் செய்யவும்.
செயல்பாடு
உங்கள் வீடுகளில் கீழ்க்காணும் செயல்பாடுகளை செய்ய உங்களுக்கு எவ்வளவு நிமிடங்கள் ஆகும்?
1. பற்களை சுத்தம் செய்தல் ________
2. குவளையை நிரப்புதல் ________
3. உன் படுக்கை அறையை சுத்தம் செய்தல் _______
ஆசிரியார் குறிப்பு: மாதிரி கடிகாரத்தைக்கொண்டு நிமிட முள்ளை அறிமுகம் செய்ய வேண்டும் (1 மணி = 60 நிமிடம்)
நிமிடங்களைப் படித்தல்
தெரிந்து கொள்வோம்