கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 6.2 (பாதை வரைபடம்) | 7th Maths : Term 1 Unit 6 : Information Processing
பயிற்சி: 6.2
பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
1. கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்.
தீர்வு :
2. கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள செவ்வகத்தை நிரப்பவும்.
தீர்வு :
3. கொடுக்கப்பட்ட வடிவத்தை ஐந்து நாற்சதுர இணை வடிவங்களை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி நிரப்புக.
தீர்வு :
4. கொடுக்கப்பட்டுள்ள எண்களால் நிரப்பப்பட்ட நாற்சதுர இணைகளைப் பயன்படுத்தி 4 × 4 மாயச் சதுரத்தை உருவாக்கவும்
தீர்வு :
5. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக் குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
தீர்வு :
மிகக் குறைந்த தொலைவு :
மண்டபம் → குருசடைத் தீவு → விவேகானந்தர் நினைவு இல்லம்
மேற்சிந்தனைக் கணக்குகள்
6. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 4 × 10 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
தீர்வு :
7. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 × 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
8. கீழுள்ள படத்தை உற்றுநோக்கிக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) A விலிருந்து Dக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காண்க.
ii) E மற்றும் C இக்குமிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
iii) B யிலிருந்து F இற்கு செல்லக்கூடிய அனைத்துப் பாதைகள் மற்றும் அவற்றின் தொலைவைக் கண்டுபிடித்து எந்த வழித்தடம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காண்க
தீர்வு :
i) வழி 1 : A → G → D
வழி 2 : A → B → D
வழி 3 : A → B → C → D
வழி 4 : A → G → F → E → D
ii) 320 மீ.
iii) வழி 1 : B → D → G → F
100 + 200 + 150 = 450 மீ.
வழி 2 : B → C → D → E → F
120 + 200 + 120 + 300 = 740 மீ.
வழி 3 : B → D → E → F
100 + 120 + 300 = 520 மீ.
வழி 4 : B → A → G → F
250 + 100 + 150 = 600 மீ.
வழி 3 ஆனது குறுகிய வழியாகும்.
விடைகள்
பயிற்சி 6.2
5. மண்டபம் → குருசடைத் தீவு → விவேகானந்தர் நினைவு இல்லம்
மேற்சிந்தனைக் கணக்குகள்
8 (i)
வழி 1 A→G→D
வழி 2 A→B→D
வழி 3 A→B→C →D
வழி 4 A→G→F→E→D
(ii) 320 m
(iii) வழி 1 B→A→G →F
250 100 150 = 600m
வழி 2 B→D→E →F
100 120 300 = 520m
வழி 3 B → D → G → F
100 200 150 = 450m
வழி 4 B→C→D →E→F
120 200 120 300 = 740m
வழி 3 ஆனது குறுகிய வழியாகும்
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் "ஏழாம் வகுப்பு - தகவல் செயலாக்கம்” என்னும் பணித்தாளிற்குச் செல்லவும்.
படி 2
ஒவ்வொரு இயலுக்கும் பல பணித்தாள்கள் இருக்கும். "டெட்ரோமினாக்களில் புதிர்கள்" என்னும் பணித்தாளைத் தேர்ந்தெடுக்கவும். நீல நிறப் புள்ளிகளை இழுப்பதன் மூலம் துண்டுகளை நகர்த்திக் கொடுக்கப்பட்ட வடிவத்தில் பொருத்துக. சிவப்பு நிறப் பெருக்கல் குறியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் துண்டுகளைச் சுழற்றலாம். சிவப்பு நிற டைமண்ட் ( ) வடிவத்தை நகர்த்துவதன் மூலம் துண்டுகளைத் திருப்பலாம். பழைய நிலைக்குத் திரும்ப 'ரீசெட்' (Reset) பொத்தானைப் பயன்படுத்தவும்.
செயல்பாட்டிற்கான உரலி
தகவல் செயலாக்கம் : https://ggbm.at/f4w7csup
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.