தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாதை வரைபடம் | 7th Maths : Term 1 Unit 6 : Information Processing
பாதை வரைபடம்
சூழ்நிலை 1
வரைபடங்கள் பல்வேறு வகையான தகவல்களைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. வரைபடம் பற்றிய அறிவு, பயணத்திற்குத் தேவையான சரியான திட்டமிடல், பார்க்க வேண்டிய இடங்களையும், வழித்தடங்களையும் அறிவதற்கு உதவுகிறது. இனி ஒரு வரைபடத்தில் மிகக் குறைந்த தொலைவு உள்ள வழிப்பாதையைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி கற்றுக் கொள்வோம்.
கொடுக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரைபடத்தைப் பயன்படுத்திக் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்:
1. நுழைவு வாயிலிலிருந்து மனிதக்குரங்கு உள்ள பகுதியைப் பார்வையிட வேண்டுமானால், நேராகச் சென்று இடது பக்கத்தில் உள்ள பாதைவழியாகச் செல்லவேண்டும். (இடது / வலது)
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் யானையின் மேற்கு மற்றும் கிழக்குப்பக்கமாக அமையக் கூடிய விலங்குகளைக் குறிப்பவை எது?
(i) மான் ← யானை → முதலை
(ii) புலி ← யானை → மான்
விடை : (i) மான் ← யானை → முதலை
3. ஒருவர் வரிக் குதிரையைப் பார்த்துவிட்டுத்தான் ஒட்டகச் சிவிங்கியைப் பார்க்க முடியும் என்பது சரியா / தவறா? (சரி)
4. கொடுக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிக்குள், உயிரியல் பூங்காவில் காணப்படும் 6 விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக
1. மான் 2. அணில் 3. மயில்
4. யானை 5. புலி 6. மனித குரங்கு
5. உயிரியல் பூங்காவின் தெற்குப் பகுதியில் காணப்படும் இரண்டு விலங்குகளைக் குறிப்பிடுக.
வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி
6. வரைபடத்தின் நுழைவாயில் உயிரியல் பூங்காவின் மேற்கு திசையில்உள்ளது.
7. வரைபடத்தில் பூங்காவின் கிழக்குப் பகுதியில் பார்க்கக்கூடிய விலங்குகள் மூன்றின் பெயரைப் பட்டியலிடுக.
முதலை, பாம்பு மற்றும் ஆமை
மேற்காணும் சூழ்நிலை, வரைபடம், எவ்வாறு ஒரு புதிய இடத்திற்குச் சென்று பார்வையிட வழிகாட்டியாக உள்ளது என்பதை விளக்குகிறது.
சூழ்நிலை 2
கீழே தரப்பட்டுள்ள சூழ்நிலை, பாதை வரைபடத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. படம் 6.25 இல் தரப்பட்டுள்ள பாதை வரைபடத்தில் பள்ளி, பூங்கா, வீடு, உணவுவிடுதி போன்ற பல இடங்கள் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்ட அளவுகோலின்படி கணக்கிட்டுத் தூரத்தைக் கண்டுபிடிக்க.
1. வீட்டிற்கும் நூலகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தைக் காண்க.
2. சந்துரு, பள்ளியிலிருந்து நூலகம் வழியாக வீட்டிற்குச் செல்லும் தூரத்தைக் காண்க.
3. சிறுவர் பூங்காவிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தூரம், சிறுவர் பூங்காவிலிருந்து வீட்டிற்குச் செல்லும் தூரம் - ஆகியவற்றில் எது குறைந்த அளவு தூரம் ?
தீர்வு
1. வீட்டிற்கும், நூலகத்திற்கும் இடைப்பட்டதூரம் 10 அலகுகள் எனில்,
10 × 100 மீ = 1000 மீ (1 அலகு = 100 மீ)
2. பள்ளிக்கும், நூலகத்திற்கும் இடைப்பட்டதூரம் 11 அலகுகள் எனில்,
11 × 100 மீ = 1100 மீ (1 அலகு = 100 மீ)
நூலகத்திற்கும், வீட்டிற்கும் இடைப்பட்டதூரம் 10 அலகுகள் எனில்,
10 × 100 மீ = 1000 மீ (1 அலகு = 100 மீ)
பள்ளியிலிருந்து நூலகம் வழியாக வீட்டிற்குச் செல்லும் தூரம் = 1100+1000 = 2100 மீ
3. சிறுவர் பூங்காவிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தூரம், 11 அலகுகள் எனில்,
11 × 100 = 1100 மீ (1 அலகு = 100 மீ)
சிறுவர் பூங்காவிலிருந்து வீட்டிற்குச் செல்லும் தூரம் 12 அலகுகள் எனில்,
12 × 100 = 1200 மீ (1 அலகு = 100 மீ)
எனவே, சிறுவர் பூங்காவிலிருந்து பள்ளி குறைந்த அளவு தூரத்தில் உள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக இணையதளம் (https://www.aazp.in/live-streaming/) மூலம் விலங்குகளின் செயல்களை நேரடியாக ஒளிபரப்பும் (Live Streaming) வசதி செய்யப்பட்டுள்ளது.
1. மிகக்குறைந்த தொலைவு உள்ள வழித்தடத்தைக் கண்டறிதல்
நாம் பயணம் மேற்கொள்ளும் பல நேரங்களில் , ஓர் இடத்திலிருந்து (அ) , மற்றொரு இடத்திற்குச் (ஆ) செல்வதற்கான மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தை அறிந்துகொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்படுகிறது அல்லது சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.
நம்முடைய தேவைக்கேற்பப் பயணம் மேற்கொள்வதற்குப் பாதை வரைபடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இனி, மிக்க குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் கண்டறிவதற்கான சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
எடுத்துக்காட்டு 6.3
மதன், அலுவலகப் பணிக்காகக் கோயம்புத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்குப் போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகக் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்து திரும்பும்பொழுது, ஈரோடு வழியாகக் கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். படம் 6.26 இல் மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதைக் காண்க.
தீர்வு
மதன், கோயம்புத்தூரிலிருந்து வெள்ளக்கோவில் வழியாகக் கரூருக்கு சென்ற தூரம் = 131 கி.மீ
கரூரிலிருந்து ஈரோடு வழியாகக் கோயம்புத்தூருக்குச்சென்ற தூரம் = 66 + 101 = 167 கி.மீ
ஆக, மதன் வெள்ளக் கோவில் வழியாகக் கரூருக்குப் பயணித்தபோது மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தில் பயணித்தார்.
எடுத்துக்காட்டு 6.4
அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இணைப்பகத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். படம் 6.27 இல் கேபிள் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க.
தீர்வு
A விலிருந்து D இக்கான இடைப்பட்ட தூரம் = 7 மீ
A விலிருந்து ( B வழியாக ) D இக்கான தூரம் = 4+5 = 9 மீ
A விலிருந்து ( C வழியாக) D இக்கான தூரம் = 2+6 = 8 மீ
எனவே, A விலிருந்து D இக்கு நேரடியாக இணைப்பு வழங்கும்பொழுது, குறைந்த அளவு கேபிள் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றை முயல்க
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்றுநோக்கிக் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) தீயணைப்பு நிலையம் வழியாக வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் கண்டுபிடிக்கவும்.
வழி 1 : வீடு → தீயணைப்பு நிலையம் → நூலகம் → பழக்கடை → பள்ளி
300 மீ + 50 மீ + 100 மீ + 150 மீ = 600
வழி 2 : வீடு → தீயணைப்பு நிலையம் → நூலகம் →
300 மீ + 50 மீ + 200 மீ = 550 மீ
(ii) பள்ளியிலிருந்து சென்ட்ரல் பூங்காவிற்குச் செல்லக் கூடிய அனைத்துப் பாதைகளையும் அவற்றின் தொலைவையும் கண்டுபிடித்து எந்த வழித்தடம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுக.
வழி 1 : சென்ரல் பூங்கா → உணவகம் →
100 மீ + 300 மீ + 150 மீ = 550
வழி 2 : சென்ரல் பூங்கா → நூலகம் →
200 மீ + 100 மீ + 150 மீ = 450
வழி 3 : சென்ரல் பூங்கா → நூலகம் →
200 மீ + 200 மீ = 400
வழி 4 : சென்ரல் பூங்கா → வீடு →தீயணைப்பு நிலையம் →நூலகம் →
150 மீ + 300 மீ + 50 மீ + 100 மீ + 150 மீ = 750
வழி 5 : சென்ரல் பூங்கா → வீடு → தீயணைப்பு நிலையம் → நூலகம் → பள்ளி
150 மீ + 300 மீ + 50 மீ + 200 மீ = 700 மீ
வழி 6 :சென்ரல் பூங்கா → வீடு → வங்கி → உணவகம் →
150 மீ + 200 மீ + 150 மீ + 300 மீ + 150 மீ = 950
பள்ளியிலிருந்து சென்ரல் பூங்காவிற்கு செல்ல தீயணைப்பு நிலையம் மற்றும் நூலகம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது
(iii) வங்கிக்கும் பள்ளிக்குமிடையே உள்ள மிகக்குறைந்த தொலைவு உள்ள வழித்தடத்தைக் காண்க.
வங்கி →
150 மீ + 300 மீ + 150 மீ = 600 மீ
2. பள்ளியிலிருந்து ஒரு குழுவினர் ஊட்டிக்கு கல்விச் சுற்றுலா செல்லத் திட்டமிடுகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதை வரைபடத்தின் உதவியுடன் ஊட்டி படகுத்துறை, ஆதாம் நீரூற்று, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களைப் பார்வையிடத் தீர்மானித்தனர். அவர்களுக்கு உதவக் கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) ஊட்டி படகுத் துறையிலிருந்து தாவரவியல் பூங்காவிற்குச் செல்ல எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும் ?
தீர்வு :
(i) (a) 700 m + 8.1 km = 700 m + (8 km + 100 m) = 8 km + 800 m = 8.8 km
(b) 700 m+ 1.7 km + 1.5 km = 700 m + (1 km, 700 m) + 1 km 500 m
= 2 km + 1900 m
= 2 km + 1 km + 900 m
= 3 km + 900 m
= 3.9 km
ஊட்டி படகுத் துறையிலிருந்து தாவரவியல் பூங்கா 3.9 km(குறுகிய) தொலைவில் உள்ளது
(ii) ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்காவிற்குச் செல்ல மிகக்குறைந்த தூரம் உள்ள வழித்தடம் எது ?
(ii)
(a) ஊட்டி மைய பேருந்து நிலையம் ➝ ஊட்டி படகு குழாம் ➝ அரசு தாவரவியல் பூங்கா தூரம் 1.5 km + 8.1 km + 700 m
= 1 km 500 m + 8 km 100 m + 700 m
= 9 km 1300 m
= 9 km + 1 km +300 m
= 10 km 300 m
= 10.3 km.
(b) வேறு வழி .
ஊட்டி மைய பேருந்து நிலையம் ➝ ஆதாம் நீருற்று ➝ தாவரவியல் பூங்கா.
தூரம் = 1.7 + 700 m
= 1 Km 700 m + 700m
= 1 Km 1400 m
= 1 Km+ 1 Km 400 m
= 2 Km 400 m
= 2.4Km
குறைந்த தூரம் ஊட்டி மைய பேருந்து நிலையம் ➝ ஆதாம் நீருற்று ➝ தாவரவியல் பூங்கா.
(iii) ஆதாம் நீருற்றிலிருந்து, தாவரவியல் பூங்காவிற்குச் செல்ல வேண்டுமானால் எந்தத் திசையில் செல்ல வேண்டும்?
தீர்வு : தாவரவியல் பூங்கா ஆதாம் நீருற்றுக்கு வடக்கே உள்ளது.
(iv) ஊட்டி பேருந்து நிலையத்திற்கு எந்தத் திசையில் ஊட்டி படகுத் துறை அமைந்துள்ளது?
தீர்வு : ஊட்டி பேருந்து நிலையத்திற்கு மேற்கில் ஊட்டி படகுத் துறை அமைந்துள்ளது.
(v) கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்காவிற்குச் செல்லும் பாதை வழிப்படத்தை நிரப்புக.
ஆசிரியர்கள், மேற்கண்ட இடங்களைத் தவிர பாதை வரைப்படத்தின் உதவியுடன் மேலும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிடுமாறு ஊக்கப்படுத்துக.