தகவல் செயலாக்கம் | முதல் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - தகவல் செயலாக்கம் | 7th Maths : Term 1 Unit 6 : Information Processing
இயல் 6
தகவல் செயலாக்கம்
கற்றல் நோக்கங்கள்
• நாற்சதுர இணைகளைப் (Tetrominos) பயன்படுத்திப் பல விதமான பெரிய வடிவங்களை உருவாக்கக் கற்றுக்கொள்ளுதல்,
• பாதை வரைபடத்தைப் பயன்படுத்திக் காட்சித் தகவலை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
மீள்பார்வை
பல்வேறு வழிகளில் தகவலை வரிசைப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் ஆகியன பற்றி ஆறாம் வகுப்பில் நாம் படித்ததை நினைவுபடுத்திக் கொள்ளக் கீழ்வரும் செயல்பாடுகள் உதவுகின்றன.
செயல்பாடு
டேன்கிராம் வடிவங்களைப் பயன்படுத்தி, படம் 6.1இல் கொடுக்கப்பட்டுள்ள பறவைகளின் உருவங்களை வடிவமைத்துப் படம் 6.2 இல் கொடுக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயப் படத்தில் ஒட்டுக. மாதிரிக்காக ஒரு பறவையின் உருவம் ஒட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செயல்பாடு
நாட்காட்டி கணிதப் புதிர்
அருகில் கொடுக்கப்பட்டுள்ள நாள்காட்டியில், வண்ணமிடப் பட்டிருக்கும் எண்களின் பண்புகளைப் பற்றிக் கலந்துரையாடி, அது போன்றே, புதிதாக மேலும் சில எண்களைக் கண்டுபிடிக்கவும்.
செயல்பாடு
1. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களை நிறைவு செய்க.
விடை :
2. படம் 6.6 இல் கொடுக்கப்பட்டுள்ள சதுரவடிவப்படத்தினைக் கொண்டு எத்தனை சதுரங்களை உருவாக்கலாம்?
விடை :
அறிமுகம்
ஆறாம் வகுப்பில் எண் புதிரான சுடோகு பற்றிப் படித்தோம். இவ்வகுப்பில் நாற்சதுர இணை(Tetromino) வடிவங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
எங்கும் கணிதம் – அன்றாட வாழ்வில் தகவல்செயலாக்கம்