நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans
பயிற்சிகள்
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. மிகச்
சிறிய பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) இந்தியப் பெருங்கடல்
இ) அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்
[விடை: ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்]
2. மலாக்கா
நீர்ச்சந்தியை இணைப்பது
அ) பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
இ) பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
ஈ) பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
[விடை: இ) பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்]
3. அதிகமான
கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்
இ) இந்தியப்பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்
[விடை: ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்]
4. உறைந்த
கண்டம்
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) அண்டார்டிகா
ஈ) ஆசியா
[விடை: இ) அண்டார்டிகா]
ஆ.கோடிட்ட இடத்தை நிரப்புக
1. உலகின் மிகப் பெரிய கண்டம் ஆசியா
2. இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி சோட்டா நாகபுரி
3. பெருங்கடல்களில் மிகப்பெரியது பசிபிக் பெருங்கடல்
4. டெல்டா மூன்றாம் நிலை நிலை நிலத்தோற்றம்.
5 தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது ஆஸ்திரேலியா
இ. பொருந்தாததை வட்டமிடுக
1. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை
2. ஆர்க்டிக் பெருங்கடல், மத்திய தரைக் கடல், இந்தியப் பெருங்கடல்,
அட்லாண்டிக் பெருங்கடல்.
3. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை
4. வங்காள விரிகுடா, பேரிங் கடல், சீனக் கடல், தாஸ்மானியா
கடல்
5. ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை
ஈ. பொருத்துக
1. தென்சான்ட்விச் அகழி - அ) அட்லாண்டிக் பெருங்கடல்
2. மில்வாக்கி அகழி - ஆ) தென் பெருங்கடல்
3. மரியானா அகழி - இ) இந்தியப் பெருங்கடல்
4. யுரேஷியன் படுகை - ஈ) பசிபிக் பெருங்கடல்
5. ஜாவா அகழி – உ) ஆர்க்டிக் பெருங்கடல்
விடைகள்
1. தென்சான்ட்விச் அகழி - ஆ) தென் பெருங்கடல்
2. மில்வாக்கி அகழி - அ) அட்லாண்டிக் பெருங்கடல்
3. மரியானா அகழி - ஈ) பசிபிக் பெருங்கடல்
4. யுரேஷியன் படுகை - உ) ஆர்க்டிக் பெருங்கடல்
5. ஜாவா அகழி – இ) இந்தியப் பெருங்கடல்
உ. i). கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
1. சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.
2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி 'சான்ட்விச்' அகழி.
3. பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப்
கீழே பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2, மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை: அ) 1 மற்றும் 3
உ. ii) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
கூற்று
1:
மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
கூற்று
2:
உலகிலேயே மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை: இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஊ. ஒரு வார்த்தையில் விடையளி
1. உலகின்
உயரமான பீடபூமி எது?
திபெத்திய பீடபூமி
2. இரண்டாம்
நிலை நிலத்தோற்றம் எவை?
மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்.
3. ஒரு
நாட்டின் பெயரைக் கொண்டுள்ள பெருங்கடல் எது?
இந்தியப் பெருங்கடல்.
4. அரபிக்
கடலில் உள்ள தீவுகள் யாவை?
மாலத்தீவு, மினிகாய் தீவு.
5. கடலிலுள்ள
ஆழமான பகுதி யாது?
அகழி
எ. சுருக்கமான விடையளி
1. கண்டம்
என்றால் என்ன?
• மிகப்பெரும் நிலப்பரப்பினை
கண்டங்கள் என அழைக்கிறோம்
• உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.
• எடுத்துக்காட்டு: ஆசியா, ஐரோப்பா
2. அட்லாண்டிக்
பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே
ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென்அமெரிக்காவும் எல்லைகளாக
உள்ளன.
3. பெருங்கடல்
என்றால் என்ன?
• மிகப்பரந்த நீர்ப்பரப்பினை
பெருங்கடல்கள் என அழைக்கிறோம்
• புவியில் ஐந்து பெருங்கடல்கள்
காணப்படுகின்றன. அவை, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல்,
தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும்.
4. பரப்பளவின்
அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுது?
1. ஆசியா
2 ஆப்பிரிக்கா
3. வட அமெரிக்கா
4. தென் அமெரிக்கா
5. அண்டார்டிகா
6. ஐரோப்பா
7. ஆஸ்திரேலியா.
5. வட,
தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக்
பெருங்கடல்.
ஏ.வேறுபாடறிக
1. மலை
- பீடபூமி
மலை
1. சுற்றுப்புற நிலப்பகுதியை
விட 600 மீ.க்கு மேல் உயர்ந்து காணப்படும்
நிலத்தோற்றம் மலைகள் எனப்படும்
2. இவை தனித்தோ அல்லது தொடர்களாகவோ
காணப்படுகின்றன.
3. மலைத் தொடரின் உயரமான பகுதி
சிகரம் எனப்படுகிறது.
4. உலகின் நீளமான மலைத்தொடர்
தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர் ஆகும்
பீடபூமி
1. சமமான மேற்பரப்பைக் கொண்ட
உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
2. நூறு மீட்டரிலிருந்து பல்லாயிரம்
மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
3. பீடபூமி சமமான மேற்பரப்பைக்
கொண்டுள்ளதால் ‘மேசை நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது.
4. உலகிலேயே உயர்ந்த பீடபூமி
திபெத் பீடபூமியாகும்.
2. பெருங்கடல்
- கடல்
பெருங்கடல்
1. பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள்
என்று அழைக்கப்படுகின்றன.
(எ-கா): பசிபிக்பெருங்கடல்
2. பெருங்கடல்கள் போன்று மிக
ஆழமானவை
3. பெருங்கடல்கள் சூழலை பாதிக்கின்றன.
கடல்
1. பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ
நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படும். (எ-கா): அரபிக்கடல்
2. கடல்கள் பெருங்கடல்கள் போன்று
மிக ஆழமானவை அல்ல.
3. கடல்கள் சூழலை பாதிப்பதில்லை.
ஐ. விரிவான விடையளி
1. நிலத்தோற்றத்தின்
வகைகளை விளக்கி எழுதுக
பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள்
காணப்படுகின்றன. இந்நிலத் தோற்றங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
• முதல் நிலை நிலத்தோற்றங்கள்
• இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்
• மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்
முதல் நிலை நிலத்தோற்றங்கள்
• கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்
முதல் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
• மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள்
எனவும், பரந்த நீர்ப்பரப்பு பெருங்கடல்கள் எனவும் அழைக்கப்படும்.
• உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.
அவை ஆசியா,ஆப்பிரிக்கா,வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா,ஐரோப்பா மற்றும்
ஆஸ்திரேலியா.
• ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன.அவை
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல்
மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்
• மலைகள், பீடபூமிகள் மற்றும்
சமவெளிகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
• சுற்றுப்புற நிலப்பகுதியை
விட 600 மீ.க்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்.
• சமமான மேற்பரப்பைக் கொண்ட
உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும். இவை மலைகளைப் போன்று சரிவுகளைக் கொண்டது.
எடுத்துக்காட்டு: திபெத் பீடபூமி, சோட்டா நாகபுரி பீடபூமி
• சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத்
தோற்றமாகும். இது 200மீ.க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம்.
• எடுத்துக்காட்டு: கங்கைச்
சமவெளி
மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்
• ஆறுகள், பனியாறுகள், காற்று,
கடல் அலைகள் போன்றவற்றின் அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்களால் மலைகள், பீடபூமிகள்
மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்
ஆகும்.
• எடுத்துக்காட்டு: கடற்கரை,
மணல் குன்று.
2. பீடபூமி
பற்றிக் குறிப்பு வரைக
• சமமான மேற்பரப்பைக் கொண்ட
உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
• இவை மலைகளைப் போன்று வன்சரிவுகள்
கொண்டவை.
• பீடபூமிகள் நூறு மீட்டரிலிருந்து
பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
• உலகிலேயே உயர்ந்த பீடபூமி
திபெத் பீடபூமியாகும்.
• பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து
காணப்படுகின்றன. இந்தியாவில் சோட்டா நாகபுரி பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
• தென்னிந்தியாவிலுள்ள தக்காண
பீடபூமி எரிமலைப் பாறைகளால் ஆனது.
3. சமவெளி
மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
• சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத்
தோற்றமாகும்.
• சமவெளிகள் ஆறுகள்,துணை ஆறுகள்
மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப் படுகின்றன.
• இங்கு வளமான மண்ணும், நீர்ப்பாசனமும்
காணப்படுகிறது.
• இதனால் வேளாண்மை தழைத்தோங்குகிறது.
• எனவே மக்கள் வாழ்வதற்கு சமவெளி
ஏற்றதாய் அமைகிறது. இதனால் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக சமவெளிகள் விளங்குகின்றன.
4. பசிபிக்
பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
• புவியின் மிகப்பெரிய மற்றும்
ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
• புவியின் மொத்தப் பரப்பளவில்
மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
• பசிபிக் பெருங்கடலின் மேற்கில்
ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும் கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும்
எல்லைகளாக உள்ளன.
• இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில்
காணப்படுகிறது.
• முக்கோண வடிவத்தின் மேற்பகுதி
பெரிங் நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.
• புவியின் ஆழமான பகுதியான மரியானா
அகழி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
• பசிபிக் பெருங்கடலைச் சுற்றி
எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் “நெருப்பு வளையம்“ என அழைக்கப்படுகிறது.
5. பெருங்கடல்களின்
முக்கியத்துவத்தை விளக்குக.
• பெருங்கடல்கள் முதல் நிலை
நிலத்தோற்றமாகும்.
• புவியில் மேற்பரப்பில் 71
சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.
• பெருங்கடல்கள் மனித வாழ்வில்
கால நிலையிலிருந்து அவன் உண்ணும் உணவு வரை தீர்மானிக்கின்றன.
• பேராழிகள் வளமான புரதச் சத்து
மிகுந்த மீன் உணவினைக் கொண்டுள்ளது.
• பேராழிகள் உப்பு, மதிப்பு
மிக்க உலோகங்கள், பெட்ரோலியம், முத்து, வைரம் போன்ற உலோகங்களைக் கொண்டுள்ளன.
• கடல் நீரோட்டங்கள் அண்மைப்
பகுதிகளின் காலநிலையைப் பாதிக்கின்றன.
• கடல் வணிகம் உலகப் பொருளாதாரத்தில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
• கடல் நீரோட்டங்களை மின்னாற்றலாக
மாற்ற இயலும்
ஒ.கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளி
1. இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
விடை: மணல் குன்று
2. இது எந்த நிலை நிலத்தோற்றம்?
விடை: மூன்றாம் நிலத்தோற்றம்
3. இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது?
விடை: படிய வைத்தல்
ஓ.. செயல்பாடு
அ). அருகில் உள்ள குறிப்பிடத்தக்க ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்திற்குக்
களப் பயணம் மேற்கொள்க.
ஆ) நிலத்தோற்றம் மற்றும் பெருங்கடல்கள் பற்றி வினாடி வினா நடத்துதல்.
ii. செயல்பாடு
நிலவரைபடப்
புத்தகத்தைப் பயன்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
அ) விரிகுடா - வங்காள விரிகுடா, ஹட்சன் விரிகுடா, ஜமைக்கா விரிகுடா
ஆ) வளைகுடா - பாரசீக வளைகுடா, மெக்ஸிகோ வளைகுடா, மன்னார் வளைகுடா
இ) தீவு - ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, லட்சத்தீவு.
ஈ) நீர்ச்சந்தி - பாக் நீர்ச்சந்தி, பேரிங் நீர்ச்சந்தி, ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
2. கீழ்க்கண்டவற்றை
நிலவரைப்பட புத்தக உதவியுடன் கண்டுபிடிக்கவும்
அ) இந்தியாவின் கிழக்கில் உள்ள கடல் விடை: வங்காள விரிகுடா
ஆ) அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கில் உள்ள
கண்டங்கள்
விடை: வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா
இ) ஆர்க்டிக் பெருங்கடலின் தெற்கில் உள்ள கண்டங்கள்
விடை: ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா
ஈ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள
நீர்ச்சந்தி
விடை: பாக் நீர்ச்சந்தி
உ) ஆஸ்திரேலியாவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள்
விடை: இந்தியப்பெருங்கடல், பசிபிக்பெருங்கடல்
ஊ) நிலச்சந்திகளை கண்டுபிடிக்கவும். (மேலும்
கேள்விகளை உருவாக்கவும்) விடை: பனாமா நிலச்சந்தி, அவலான் நிலச்சந்தி, லாடியூன் நிலச்சந்தி