நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - முதல் நிலை நிலத்தோற்றங்கள் (First order landforms) | 6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans
முதல் நிலை நிலத்தோற்றங்கள் (First order
landforms)
கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள் முதல்நிலை நிலத்தோற்றங்கள்
ஆகும். மிகப் பெரும் நிலப்பரப்பினைக் கண்டங்கள் எனவும்
இலக்கியத்தில்
சங்க
இலக்கியத்தில் நிலவகைப்பாடு
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
பாலை - மணலும் மணல் சார்ந்த நிலமும்
நீ வாழ்கின்ற பகுதி இதில் எந்தப் பகுதியைச் சார்ந்தது?
புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும். இவற்றுள்
செயல்பாடு:
தேவையான பொருட்கள்:
வட்ட வடிவமான தட்டு,
ஏழு துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு கேரட்,
ஒரு குவளை நீர்.
செய்முறை:
•
கண்டங்களுக்கான குறியீடுகளை கேரட் துண்டுகளில் எழுதவும் (கண்டங்களின் பரப்பளவிற்கு
ஏற்ப) சுவரில் உலக வரைபடத்தை ஆசிரியர் தொங்க விடுகிறார்.
•
கண்டங்களின் பெயர்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்.
•
உலக வரைபடத்தை உற்றுநோக்கி கண்டங்களின் இருப்பிடத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல் வட்ட
வடிவ தட்டில் கேரட் துண்டுகளை மாணவர்கள் வைக்கின்றனர்,
•
அதில் சிறிது நீர் ஊற்றுகின்றனர்.
•
உலவ பெருங்கடல்களின் ஆசிரியர் காட்டுகிறார். வரைபடத்தில் இருப்பிடத்தை புரிந்து கொண்ட
மாணவர்கள் தட்டில் பெருங்கடல்களின் இருப்பிடத்தை சுட்டிக் காட்டி பெயர்களை கூறுவர்.
•
மாணவர்கள் இச்செயல்பாட்டின் மூலம் கண்டங்கள், பெருங்கடல்களின் அமைவிடத்தையும், பரப்பளவையும்
அறிந்து கொள்வர்.
நிலச்சந்தி
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரியநீர்ப்பரப்புகளை பிரிக்கக்கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி நிலச்சந்தி ஆகும்.