Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | பெருங்கடல்கள் (Oceans)

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பெருங்கடல்கள் (Oceans) | 6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans

   Posted On :  27.08.2023 08:12 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 2 : நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

பெருங்கடல்கள் (Oceans)

விண்வெளியில் இருந்து பார்க்கு போது புவி நீல நிறமாக காட்சியளிக்கு புவியின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பரப்ப உள்ளதே இதற்குக் காரணமாகும். கடல்களு பெருங்கடல்களும் இந்நீரினை கொண்டுள்ள பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள் என் அழைக்கப்படுகின்றன.

பெருங்கடல்கள் (Oceans)

விண்வெளியில் இருந்து பார்க்கு போது புவி நீல நிறமாக காட்சியளிக்கு புவியின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பரப்ப உள்ளதே இதற்குக் காரணமாகும். கடல்களும், பெருங்கடல்களும் இந்நீரினை கொண்டுள்ள பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள் என் அழைக்கப்படுகின்றன. முழுமையாகே அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்ப பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படுகிறது. புவியில் காணப்படும் ஐந்து பெருங்கடல்களளை ஏற்கனவே அறிந்துள்ளீர்கள். அவற்றைப் பற்றி தற்போது காணலாம்.




பசிபிக் பெருங்கடல் (The Pacific Ocean)

புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும். இது புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.

இதன் பரப்பளவு சுமார்188.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும், கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. இது வடக்குத் தெற்காக ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது. முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும், இணைக்கும் பெரிங் நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.



உங்களுக்குத் தெரியுமா

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம்  (8,848 மீ) மரியானா அகழியில் (10,994 மீ) மூழ்கிவிடும் என்றால் அதன் ஆழத்தை உணர்ந்தறிவாயாக.

கடலின் ஆழத்தை மீ என்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும்.

பெரிங் கடல், சீனக் கடல், தாஸ்மானியா கடல், கடல், ஜப்பான் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலில் உள்ள எல்லையோரக் கடல்களாகும். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் பசிபிக் பெருங்கடலில் உள்ளன. புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி (10,994 மீ-) பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்" என அழைக்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா

ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என் பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.

 

அட்லாண்டிக் பெருங்கடல் (The Atlantic Ocean)

புவியின் இரண்டாவது பெரிய பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். இதன் பரப்பளவு சுமார் 85.13 மில்லியன் சதுர கி.மீட்டர் ஆகும். இது புவியின் மொத்த பரப்பளவில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன. பசிபிக் பெருங்கடலைப் போன்றே


இப்பெருங்கடலும் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல் தெற்கே தென் பெருங்கடல் வரை பரவியுள்ளது. இப்பெருங்கடல் ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ளது.

ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி அட்லாண்டிக் பெருங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கிறது. கிழக்கு மற்றும் அரைகோளங்களுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகமாக நடைபெறுகிறது. போர்ட்டோ ரிக்கோ அகழியில் காணப்படும் மில்வாக்கி அகழி அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாகும். இது 8,600 மீ- ஆழமுடையது ஆகும். கரீபியன் கடல், மெக்சிகோ வளைகுடா, வடகடல், கினியா வளைகுடா, மத்திய தரைக் கடல் போன்றவை அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கிய எல்லையோரக் கடல்களாகும். செயின்ட் ஹெலனா, நியூபவுண்ட்லாந்து, ஐஸ்லாந்து, ஃபாக்லாந்து உள்ளிட்ட பல தீவுகள் பெருங்கடலில் உள்ளன.

சிந்தனை வினா

பெயர் காரணம் அறிக.

அ. செங்கடல்

ஆ. சாக்கடல்

இ. கருங்கடல்


 

இந்தியப் பெருங்கடல் (The Indian Ocean)

இந்தியப் பெருங்கடல் புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். இதன் பரப்பு சுமார் 70.56 மில்லியன் சதுர கி.மீ. ஆகும். இந்தியாவிற்கு அருகாமையில் உள்ளதால் இப்பெருங்கடல் இப்பெயரைப் பெற்றது. இது முக்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது. இப்பெருங்கடல் மேற்கே ஆப்பிரிக்கா வடக்கே ஆசியா, கிழக்கே ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களால் சூழப்பட்டுள்ளது.


இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத் தீவுகள், இலங்கை, மொரிஷியஸ், ரீயூனியன் உள்ளிட்ட பல தீவுகள் காணப்படுகின்றன. மலாக்கா நீர்ச்சந்தி இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் வங்காள விரிகுடா அரபிக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் போன்ற கடல்கள் எல்லையோரக் கடல்களாக உள்ளன. இப்பெருங்கடலின்

பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா

6° கால்வாய் இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது.

8° கால்வாய் மாலத் தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது

9° கால்வாய் லட்ச தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.

10° கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.

ஆழமான பகுதி ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7,725 மீ ஆகும்.

 

தென் பெருங்கடல் (The Southern Ocean)

தென்பெருங்கடல் அண்டார்க்டிகாவை சுற்றி அமைந்துள்ளது. தென் பெருங்கடல் 60° தெற்கு அட்சத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 21.96 மில்லியன் சதுர கி.மீ ஆகும். தென் பெருங்கடல் இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் தென் சூழப்பட்டுள்ளது.


ராஸ் கடல், வெடல் கடல் மற்றம் டேவிஸ் கடல் இதன் எல்லையோரக் கடல்களாகும். ஃபேர்வெல் தீவு, பெளமன் தீவு, ஹார்ட்ஸ் தீவு போன்ற தீவுகள் காணப்படுகின்றன. இது அருகிலுள்ள பெருங்கடல்களைக் காட்டிலும் குளிர்ச்சியாக உள்ளது. இதன் பெரும்பான்மையான பகுதி பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இப்பெருங்கடலின் ஆழமான பகுதி 'தென் சான்ட்விச் அகழி' (7,235 மீ- ஆழம்) ஆகும்.


சிந்தனை வினா

ஜப்பானில் இருந்து கலிபோர்னியாவிற்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் எந்தப் பெருங்கடல் வழியாக பயணம் செய்வீர்கள்?

 

ஆர்க்டிக் பெருங்கடல் (The Arctic Ocean)

ஆர்க்டிக் பெருங்கடல் மிகச் சிறியது ஆகும். இதன் பரப்பளவு சுமார் 15.56 மில்லியன் சதுர கி,மீ இது ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்துள்ளது. வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் இப்பெருங்கடல் உறைந்தே காணப்படும்.

நார்வே கடல், கிரீன்லாந்து கடல், கிழக்கு சைபீரியக் கடல் மற்றும் பேரண்ட் கடல் போன்றவை இதன் எல்லையோரக் கடல்களாகும். கிரீன்லாந்து தீவு, நியூ சைபீரியத் தீவு மற்றும் நவோயா செமல்யா போன்ற தீவுகள் இப்பெருங்கடலில் காணப்படுகின்றன.


வட துருவம் ஆர்க்டிக் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது. இப்பெருங்டலின் ஆழமான பகுதி 'யுரேசியன் தாழ்நிலம்' ஆகும். இதன் ஆழம் சுமார் 5,449 மீட்டர் ஆகும்.


சிந்தனை வினா

கண்டங்களை பரப்பளவின் அடிப்படையில் ஏறு வரிசையில் வரிசைப்படுத்தினால் மூன்றாவதாக உள்ள கண்டம் எது?

Tags : Land and Oceans | Term 1 Unit 2 | Geography | 6th Social Science நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans : Oceans Land and Oceans | Term 1 Unit 2 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 2 : நிலப்பரப்பும் பெருங்கடல்களும் : பெருங்கடல்கள் (Oceans) - நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 2 : நிலப்பரப்பும் பெருங்கடல்களும்