நிலப்பரப்பும் பெருங்கடல்களும் | பருவம் 1 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Geography : Term 1 Unit 2 : Land and Oceans
மீள்பார்வை
• புவியின் மேற்பரப்பு 71 சதவிகிதம்
நீராலும், 29 சதவிகிதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
.• பூமியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை முதல்நிலை,
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் என வகைப்படுத்தலாம்.
.• கண்டங்களும்,
பெருங்கடல்களும் முதல்நிலை நிலத்தோற்றங்களாகும்.
.• புவியில்
ஏழு கண்டங்களும், ஐந்து பெருங்கடல்களும் காணப்படுகின்றன.
• மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்
இரண்டாம் நிலை நிலத்தோற்றங்களாகும்.
• பள்ளத்தாக்குகள், கடற்கரை, மணற்குன்றுகள்
போன்றவை மூன்றாம் நிலை நிலத்தோற்றங்களாகும்.
• பெருங்கடல்கள் கடல்களையும், எல்லையோரக்
தீவுகளையும் கொண்டுள்ளன.
கலைச் சொற்கள்
1. தீவு - நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
2 விரிகுடா - அகன்ற நில வளைவைக் கொண்ட கடல் பகுதி
3 நீர்ச்சந்தி – இரண்டு நீர்ப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி
4 அகழி - பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதி
5 தீபகற்பம் - மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
இணைய வளங்கள்
1. www.nationalgeographic.com
2. http://mocomi.com/landforms
3. www.nationalgeographic.org/encyclopedia/ landform
4. www.britannica.com
இணையச் செயல்பாடு
நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
நிலபரப்பை பற்றி அறிவோமா...
படிநிலைகள்:
• Google Earth இணையதளத்திற்குச்
செல்ல கீழ்க்கண்ட உரலியைப் பயன்படுத்தவும்.
• இடது மேற்புற மூலையில் காணப்படும்
தேடுதல் பொத்தானை பயன்படுத்தி உலக உருண்டையில் ஒரு குறிப்பிட்ட இடங்களைத் தெரிவு செய்து
தேட முடியும். (எடுத்துக்காட்டு) டெல்லி, சென்னை, கீழடி போன்றவை.,
• திரையில் காணப்படும் '+' மற்றும்
'-' பொத்தான்களை அழுத்தி அல்லது சுட்டியில் உள்ள scroll button-ஐ பயன்படுத்தி நிலப்பரப்புகளையும்,
கடற்பரப்புகளையும் zoom in and zoom out செய்து காண முடியும்.
• தேடுதலின் விளைவாக பீடபூமிகள்
மற்றும் நிலப்பரப்புகளின் அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் சமவெளிபகுதி மற்றும்
பள்ளத்தாக்குகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
உரலி:
https://earth.google.com/web/