அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உரங்கள் | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life

   Posted On :  21.09.2023 08:01 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

உரங்கள்

தாவரங்களின் வளர்ச்சிக்கு நீர், சூரியஒளி, காற்று மட்டுமல்லாது சில ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து பெறுகின்றன என நமக்குத் தெரியும்.

உரங்கள்

தாவரங்களின் வளர்ச்சிக்கு நீர், சூரியஒளி, காற்று மட்டுமல்லாது சில ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து பெறுகின்றன என நமக்குத் தெரியும்.

தாவரங்களின் வளர்ச்சிக்கு பலவகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவற்றுள் நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) ஆகியவை தாவரங்களுக்குத் தேவையான மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நாம் பொதுவாகப் பயிரிடும் சில பயிர்கள் மண்ணிலிருந்து எவ்வளவு சத்துக்களை எடுத்துக்கொள்கின்றன எனப் பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது.


ஒரு நிலத்தில் தொடர்ந்து பயிர்செய்யும் போது, அம்மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்கு என்ன நிகழும்?

-----------------------------------------------------------------------

நாம் எவ்வாறு இந்த ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு திருப்பி அளிப்பது?

-----------------------------------------------------------------------------

பயிர்களுக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை நாம் உரங்கள் என்கிறோம்.

தாவரங்களுக்கு அளிக்கப்படும் உரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை கனிம மற்றும் கரிம வகை உரங்களாகும்.


கரிம உரங்கள்

நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்குக் கழிவுகள் அனைத்தும் இயற்கை அல்லது கரிம உரங்கள் எனப்படும். இந்த வகை உரங்களை நாம் எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்த முடியும். இந்த வகையான உரங்கள் சிக்கனமானவை. (எ.கா) மண்புழு உரம், தொழு உரம்.


 

கனிம உரங்கள்

மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப்படுகின்றன. (எ.கா) யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்.


 

நாம் 50 கிலோகிராம் யூரியாவினைப் பயன்படுத்தும் போது, அட்டவணையின்படி 23 கிலோகிராம் நைட்ரஜன் (46 சதவீதம்) மண்ணில் சேர்க்கப்படுகிறது.


அம்மோனியம் சல்பேட்டில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

----------------------------------------------------------

50 கிலோகிராம் பொட்டாசியம் நைட்ரேட் உரமிட்டால், எவ்வளவு பொட்டாசியம் மண்ணில் சேர்க்கப்படும்?

----------------------------------------------------------------------

 

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு செரித்து வெளியேற்றுகின்றன இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இவ்வாறு மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் இது உழவனின் நண்பன் எனவும் அழைக்கப்படுகிறது.


 

செயல்பாடு 4 : உனது ஊரில் உள்ள வயல்வெளிகளைப் பார்வையிடு. அங்கு பயிரிடப்படும் பயிரினையும், பயன்படுத்தப்படும் உரங்களையும் பட்டியலிடுக.


Tags : Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life : Fertilizers Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : உரங்கள் - அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்