Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | சோப்புகள் மற்றும் சலவைத்தூள்

அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - சோப்புகள் மற்றும் சலவைத்தூள் | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life

   Posted On :  21.09.2023 07:57 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

சோப்புகள் மற்றும் சலவைத்தூள்

இரண்டு வகையான சோப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்று குளியல் சோப்பு, மற்றொன்று சலவை சோப்பு. அதுமட்டுமல்லாமல் அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு சலவைத்தூளைப் பயன்படுத்துகிறோம்.

சோப்புகள் மற்றும் சலவைத்தூள்

இரண்டு வகையான சோப்புகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்று குளியல் சோப்பு, மற்றொன்று சலவை சோப்பு. அதுமட்டுமல்லாமல் அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு சலவைத்தூளைப் பயன்படுத்துகிறோம்.


சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு. ஒன்று நீர் விரும்பும் பகுதி மற்றொன்றுநீர் வெறுக்கும் பகுதி, நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பிகள் நீர் மூலக்கூறுகளை நோக்கியும் செல்கின்றன. துணி துவைக்கும்போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றன. துணி வெளுக்கப்படுகிறது.


பின்வரும் செயல்பாட்டின் மூலம் நாமே எளிமையான முறையில் சோப்பினைத் தயாரிக்க முடியும்.

 

செயல்பாடு 2 : சோப்பு தயாரித்தல்

தேவைப்படும் பொருள்கள் : 35 மி.லி நீர், 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடு, 60 மி.லி. தேங்காய் எண்ணெய்.

செய்முறை

சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்.

கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பு. அதனுடன் 10 கி. சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்க வேண்டும். பின் அதனுடன் 60மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும். பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

இந்த சோப்பைக் கொண்டு உங்கள் கைக்குட்டையை துவைத்துப் பார்க்கவும்.

பலவித பயன்பாடுகளுக்கான தனித்தனியான சோப்புகள், பல்வேறு வேதி மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பின்வரும் செயல்பாட்டினைச் செய்து நீங்கள் இதனைப் பற்றி அறியலாம்.

 

செயல்பாடு 3 : நம் வீட்டில் பயன்படுத்தும் பலவகையான சோப்பு கட்டியின் மேல் உறைகளைச் சேகரித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், மூலப் பொருள்களைக் கொண்டு பின்வரும் அட்டவணையை நிரப்புக


அறிவன: இதன்மூலம் சோப்பினுள் இருக்கும் மூலப்பொருள்களைப் பொறுத்து சோப்பின் தன்மை வேறுபடும் என்பதை அறியலாம்.



Tags : Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life : Soaps and Detergents Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : சோப்புகள் மற்றும் சலவைத்தூள் - அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்