அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life
மதிப்பீடு
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. சோப்புக்களின் முதன்மை மூலம் ------------------ ஆகும்.
அ. புரதங்கள்
ஆ. விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ மண்
ஈ. நுரை உருவாக்கி
விடை : ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
2. வெப்ப
நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு ---------------- கரைசல்
பயன்படுகிறது.
அ. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
ஆ. சோடியம் ஹைட்ராக்சைடு
இ. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
ஈ. சோடியம் குளோரைடு
விடை : ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு
3. சிமெண்டில்
ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ---------------- ஆகும்.
அ. விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ. கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ. கடினமாக்க
ஈ. கலவையை உருவாக்க
விடை : ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
4. பீனால்
என்பது ------------------------
அ. கார்பாலிக் அமிலம்
ஆ. அசிட்டிக் அமிலம்
இ. பென்சோயிக் அமிலம்
ஈ.ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை : அ) கார்பாலிக் அமிலம்
5. இயற்கை
ஒட்டும்பொருள் -------------------- இருந்து தயாரிக்கப்படுகின்றது
அ.புரதங்களில்
ஆ. கொழுப்புகளில்
இ ஸ்டார்ச்சில்
ஈ. வைட்டமின்களில்
விடை : இ) ஸ்டார்ச்சில்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக்
காரணமான வாயு புரோப்பேன்
தயால் ஆக்சைடு ஆகும்.
2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணைய்
மற்றும் NaOH
தேவைப்படுகின்றது.
3. உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது மண்புழு ஆகும்.
4. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை இயற்கை உரங்கள் ஆகும்
5. இயற்கை பசைக்கு உதாரணம் ஸ்டார்ச்
ஆகும்.
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின்
சரியாக எழுதவும்
1. செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை : தவறு குறைந்த அடர்வுடைய
பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.
2. ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.
விடை : தவறு எப்சம் மருத்துவத்துறையில்
அதிகளவு பயன்படுகின்றது.
3. ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது. விடை : சரி
4. ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடொன்று பிரிக்கப்
பயன்படுகின்றது.
விடை : தவறு - ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு
பயன்படுகின்றது.
5. NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை : சரி.
IV. பொருத்துக
1 சோப்பு - CeH5 OH
2. சிமெண்ட் – CaSO4 2H2O
3. உரங்கள் - NaOH
4. ஜிப்சம் - RCC
5. பீனால் – NPK
விடைகள்
1 சோப்பு - NaOH
2. சிமெண்ட் – RCC
3. உரங்கள் - NPK
4. ஜிப்சம் - CaSO4 2H2O
5. பீனால் - CeH5 OH
V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக
1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால்
கிடைப்பது சோப்பாகும்.
2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி
கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்து குளிர வைக்கவும்.
5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையைத் துவைக்க முயற்சிக்கவும்.
6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
விடை :
1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில்
பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு
நீரை நிரப்பவும்.
3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக்
சேர்த்து குளிர வைக்கவும்.
4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை
சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை
பெறும்.
5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில்
ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
6. இந்த சோப்பின் மூலம் உங்கள்
கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
VI. ஒப்புமை தருக
1. யூரியா: கனிம உரம் : : மண்புழு உரம்: இயற்கை உரம்
2 ஸ்டார்ச் இயற்கை ஒட்டும்பொருள் :: செலோ டேப்
: செயற்கை ஒட்டும்பொருள்:
VII. மிகக் குறுகிய விடையளி
1. சோப்பில்
அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
• நீர்
• சோடியம் ஹைட்ராக்சைடு
(NaOH)
• தேங்காய் எண்ணெய் (தாவர எண்ணெய்
(அல்லது) விலங்கு கொழுப்பு)
2. சோப்பில்
உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
1. நீர் விரும்பும் மூலக்கூறுகள்
2. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்
3. கனிம
உரங்களுக்கு உதாரணம் தருக.
• யூரியா
• சூப்பர் பாஸ்பேட்
• அம்மோனியம் சல்பேட் ,
• பொட்டாசியம் நைட்ரேட்
4. பீனாலின்
மூன்று பண்புகளைக் கூறுக.
1. வீரியம் குறைந்த அமிலம்
2. எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
3. வெண்ணிற படிகத் திண்மம்.
5. பாரிஸ்
சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
• கரும்பலகையில் எழுதும் பொருள்
தயாரிக்க பயன்படுகிறது.
• அறுவைச் சிகிச்சையில் எலும்பு
முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது,
• சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகிறது.
• கட்டுமானத்துறையில் பயன்படுகிறது.
6. சிமெண்டில்
கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
• சுண்ணாம்புக்கல்
• களிமண்
• ஜிப்சம்
7. சிமெண்ட்
தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும்
நேரத்தை தாமதமாக்குகின்றது, இதனால் சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.
VIII. குறுகிய விடையளி
1. மண்புழு
ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
• மண்புழுக்கள் உயிரி கழிவுகள்
அனைத்தையும் உணவாக உண்டு, செரித்து வெளியேற்றுகிறது.
• இத்தகைய மண், செழிப்பான தாவர
வளர்ச்சிக்கு உதவுகிறது.
• மண்புழு விவசாயத்திற்குப்
பல்வேறு வகைகளில் உதவுவதால் “உழவனின் நண்பன்" என்று மண்புழுவை அழைக்கின்றோம்.
2 சிமெண்ட்
தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல்,
களிமண், ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது;
3. ஜிப்சத்தின்
பயன்களைக் கூறுக.
• உரமாகப் பயன்படுகிறது.
• சிமெண்ட் மற்றும் பாரிஸ் சாந்து
தயாரிக்கப் பயன்படுகிறது,
IX. விரிவான விடையளி
1. வலுவூட்டப்பட்ட
சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) :
• இரும்புக் கம்பிகள் மற்றும்
எஃகு வலைகளைத் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை
(RCC)ஆகும். • இது வலுவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்,
பயன்கள் :
• அணைக்கட்டுகள், பாலங்கள்,
வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
• குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு
நீர்வடிகால்கள் அமைக்கப் பயன்படுகிறது,
2 சோப்பு
எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
தேவையான பொருட்கள்:
• 35 மிலி
நீர்
• 10 IL NaOH 760 மிலி தேங்காய்
எண்ணெய்
செய்முறை :
• சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில்
பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
• கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பவும்,
• அதனுடன் 10 மிலி NaOH யைச்
சேர்த்து குளிர வைக்கவும்,
• பின் அதனுடன் 60 மிலி தேங்காய்
எண்ணெயை சிறிது, சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை
பெறும்,
• பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில்
ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
X. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி
1. ரவி
ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில்
உயிரிக்கழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை
ரவிக்கு வழங்கவும். மண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.
• 30 செ.மீ ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டவும் அல்லது
மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்:
• குழியின் அல்லது பெட்டியின்
அடிப்பகுதியில் மெல்லிய வலை ஒன்றை விரித்து 1-2 செ.மீ உயரத்திற்கு மண்ணால் நிரப்பவும்,
• அதன்மீது தாவரக் கழிவுகளை
(உலர்ந்த இலை, பூ) மற்றும் பிற சிதைவுறும் கழிவுகளைப் பரப்பிச் சிறிது நீரை தெளிக்கவும்.
• சில மண்புழுக்களைக் குழியில்
உள்ள பொருள்களோடு சேர்த்து பழைய துணி அல்லது
ஓலையால் மூடவும்.
• நான்கு வாரங்களுக்குப் பிறகு
'மண்புழு உரம்' உருவாகி யிருப்பதைக் காணலாம்.
• உருவாக்கப்பட்ட மண்புழு உரத்தைத்
தாவரங்களுக்குப் பயன்படுத்தி மண்வளம் காக்க வழி செய்யலாம்.
மண்புழு உரத்தின் நன்மைகள் :
• மண்புழு உரம் வேளாண்மைக்குப்
பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும்.
• மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும்
அளவில் கொண்டுள்ளது.
• மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி
மண் அரிப்பைத் தடுக்கிறது.
• அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல்
நட்புமுறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும்
உதவுகிறது.
• விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
• மண்புழு உரங்களை எளிமையாகத்
தயாரித்துப் பயன்படுத்த முடியும்.
XI. செயல்திட்டம்
❖ ஒரு கண்ணாடி முகவையில்
100 மி.லி சூடான நீரை எடுத்துக்கொள்.
❖ 50 கிராம் மைதா மாவினை
எடுத்து வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
❖ உருவாகும் பசை போன்ற பொருளை
எடுத்து தொட்டுப்பார் ஒட்டுகிறதா? கிழிந்த உனது புத்தகத்தை பசையை பயன்படுத்தி ஒட்டவும்.
❖ சிறிதளவு மயில்துத்தம்
(தாமிர சல்பேட்) சேர்க்கும் போது பசைகெடாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.