புவியியல் - கலைச்சொற்கள் - இயற்கைப் பேரிடர் | 11th Geography : Chapter 8 : Natural Disasters - Public Awareness For Disaster Risk Reduction
கலைச்சொற்கள்
1. பேரிடர் (Disaster): சமூகத்தின் பணிகள் தொடர்ந்து தடைபட்டு பாதிப்படைந்த சமூகத்தில் உள்ள வளங்களையும் போராடி பயன்படுத்த முடியாத அளவிற்கும் மேல் மனிதர்கள், பொருள்கள் அல்லது சுற்றுச் சூழல் ஆகியவற்றில் இழப்புகள் ஏற்படின் அது பேரிடர் எனப்படும்.
2. பேரிடர் அபாயக் குறைப்பு (Disaster Risk R e d u c t i o n ) : பேரழிவுகளின் காரணகாரணிகளை பகுப்பாய்வு செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் திட்டமிட்ட முயற்சிகளால் மேலாண்மை செய்து பேரிடர் அழிவுகளை குறைப்பதற்கான நடைமுறையே பேரிடர் அபாயக் குறைப்பு.
3. மீட்சித் திறன் (Mitigation): பேரிடரின் இடையூறுகள் மற்றும் பேரழிவுகளின் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகும்.
4. தயார்நிலை (Preparedness): பேரழிவு நிகழ்வுகளின் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கு திறம்பட எதிர்பார்க்கும் அமைப்புகளால் உருவாக்கப்படும் திறன்தான் தயார்நிலை.
5. முன்னேற்பாடு (Prevention): இடையூறுகள் மற்றும் தொடர்புடைய பேரழிவுகளின் எதிர்மறையான தாக்கங்களை தவிர்த்தல்.
6. பொது விழிப்புணர்வு (Public awareness): பேரழிவு அபாயங்கள் பற்றிய பொதுவான அறிவு, பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லும் காரணிகள் மற்றும் எடுக்கும் நடவடிக்கைகள், ஆபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மக்களுக்கு கொடுக்கப்படுவதே பொது விழிப்புணர்வு.
7. விரிதிறன் (Resilince): ஒரு சமுதாயத்தின் திறனை சமாளிக்கும், அபாயத்தை எதிர்கொள்ளும் மற்றும் ஒரு பேரழிவின் விளைவுகளில் இருந்து மீட்பது.
8. கியூகோ செயல்திட்ட வரைவு (Hyogo Frame work for action): பேரழிவு ஆபத்து குறைப்பை ஊக்குவிப்பதற்காக குறிப்பிட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் 2005 மற்றும் 2015க்கு இடைப்பட்ட பேரழிவு ஆபத்து குறைப்பு முயற்சிகளுக்கான உலகளாவிய வரைபடம்.