நிலச்சரிவு
உயரமான
சரிவு மிகுந்த பகுதியிலிருந்து சிதைந்த பாறைகள் நகர்வதை நிலச்சரிவு என்கிறோம்.
புவிஈர்ப்பு விசையின் நேரடி தாக்கத்தினால் நிலச்சரிவு ஏற்படுகின்றது. மழைப்பொழிவு,
பனி
உருகுதல், ஆற்றின் அரிப்பு,
வெள்ளப்பெருக்கு,
நிலநடுக்கம்,
எரிமலை
செயல்கள், மனித நடவடிக்கைகள் இணைந்து நிலச்சரிவு
ஏற்படும். நிலச்சரிவினால் உடமைகள் சேதம், காயங்கள்
ஏற்படுதல், உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு வளங்களுக்கு மிக
அதிக பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக,
குடிநீர்
விநியோகம், மீன்பிடித்தல்,
கழிவுநீர்
வெளியேற்றும் அமைப்புகள், காடுகள்,
அணைகள்
மற்றும் சாலை போக்குவரத்துக்கள் பாதிப்படைகின்றன.
நிலச்சரிவு ஏற்படும்போது
1. நிலச்சரிவின் போது மரங்களில் ஏற்படுகின்ற முறிவு,
பெரிய
பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற அசாதாரணமான ஒலிகளை கேட்டால் அது
இடிபாடுகளின் நகர்வினை குறிக்கும்.
2.
நீங்கள்
ஓடை அல்லது ஆற்றின் அருகில் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீரோட்டமானது திடீரென்று அதிகரித்தாலோ குறைந்தாலோ மற்றும் தெளிந்த நீரானது
சேற்றுடன் கலந்து வந்தாலோ நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்மாற்றங்கள்
ஏற்படுவது நிலச்சரிவின் அறிகுறிகளாகும். எனவே உடனே நாம் அங்கிருந்து வேகமாக
வெளியேற வேண்டும்.
3.
நிலச்சரிவு
ஏற்படக்கூடிய இடங்களின் வழியாக வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
4.
நிலச்சரிவு
ஏற்படும் பகுதியில் மின்இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
நிலச்சரிவுக்குப் பிறகு
1. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து விலகி
இருக்க வேண்டும். ஏனென்றால் கூடுதல் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
2. நிலச்சரிவில் காயம் அடைந்தவர்கள் மற்றும்
சிக்கியவர்கள் இருக்கிறார்களா என அப்பகுதிக்கு அருகில் செல்லாமல் தொலைவிலிருந்து
கண்காணிக்க வேண்டும்.
3. மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
4. உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சிகளின்
சமீபத்திய அவசர தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
5. நிலச்சரிவினை தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட
வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.