Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு
   Posted On :  25.03.2022 07:14 pm

11 வது புவியியல் : அலகு 8 : இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு

முறைசார் கல்வி சார்ந்த பங்களிப்பு முன்னிலைப்படுத்துவது, இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.

பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் அபாயக்குறைப்பிற்கான பொது விழிப்புணர்வு நான்கு முக்கிய அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. அவை பிரச்சாரம், பங்கேற்று கற்றல், முறைசாரா கல்வி மற்றும் முறைசார் பள்ளி சார்ந்த பங்களிப்பு போன்றவையாகும். முறைசார் கல்வி சார்ந்த பங்களிப்பைப் பற்றி விரிவாக படிப்போம்.

முறைசார் கல்வி சார்ந்த பங்களிப்பு

முறைசார் கல்வி சார்ந்த பங்களிப்பு முன்னிலைப்படுத்துவது, இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. அவை பள்ளிப்பாடத்திட்டத்தில் பள்ளி பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய பாடத்தினை உட் படுத்துவதாகும். இவை முறையானது என கருதப்படுகிறது. ஏனெனில் பள்ளிப் பாதுகாப்பு மற்றும் பாடத்திட்டத்திற்கான பொறுப்பு முழுமையாக பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்தது. எனவே நீண்டகாலத்திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகின்றன.

 

பள்ளிப் பேரிடர் மேலாண்மை

பள்ளிப் பேரிடர் மேலாண்மையின் முதன்மைக் குறிக்கோளானது மாணாக்கர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். தெரிந்த பங்கேற்பு மற்றும் பேரிடர்களை கண்டறியும் செயலாக்கம், ஆபத்தை குறைப்பது, தடுக்கும் வழி முறைகள் மற்றும் பொறுப்பு திறனை மேம்படுத்துவது போன்றவை நிலையான பள்ளிப் பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு தேவைப்படுகின்றன.

பள்ளி அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு பள்ளி பேரிடர் மேலாண்மைத் திட்டம் என்பது பேரிடர் அபாயக் குறைப்பிற்கான விழிப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயல்படும் ஆவணமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் கீழ்க்கண்ட பள்ளி பேரிடர் குழுக்களை அமைக்க வேண்டும்.

1. ஒருங்கிணைப்புக்குழு

2. விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழு

3. தேடுதல், மீட்பு மற்றும் வெளியேற்றும் குழு

4. இடப்பாதுகாப்பு குழு

5. முதலுதவி குழு

6. எச்சரிக்கை மற்றும் தகவல் குழு

7. பேருந்து பாதுகாப்பு குழு

8. நீர் / உணவு ஏற்பாட்டு குழு

மேற்கண்ட எல்லாக் குழுக்களும் மாதிரிப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 

உங்களுக்குத் தெரியுமா?

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வினை எளிதில் கையாளும் விதத்தில் முன் கூட்டியே மேற்கொள்ளும் ஒரு பயிற்சியை மாதிரிப் பயிற்சி என்கிறோம்.

 

மாதிரிப் பயிற்சி

மாதிரிப் பயிற்சியானது பள்ளிப் பேரிடர் மேலாண்மையில், முக்கியப் பங்கு வகித்து, ஒரு ஆழமான கற்றல் அனுபவத்தைக் கொடுக்கின்றது. பள்ளி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவராலும் இது பிரதிபலிக்கப்பட்டும் மதிப்பீடு செய்யப் பட்டும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு கற்ற பாடங்கள் பள்ளி பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்த கட்ட மேம்பாட்டிற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. நாம் எதிர்கொள்ளும் பேரிடர்களைப் பொறுத்து பல்வேறு மாதிரி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

11th Geography : Chapter 8 : Natural Disasters - Public Awareness For Disaster Risk Reduction : Public awareness for disaster risk reduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 8 : இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு : பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 8 : இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு