புவியியல் - இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு | 11th Geography : Chapter 8 : Natural Disasters - Public Awareness For Disaster Risk Reduction
இயற்கைப் பேரிடர் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு
அத்தியாயக் கட்டகம்
8.1 அறிமுகம்
8.2 பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு
8.3 பேரிடரின் போது பின்பற்றப்படும் -விதிமுறைகள்
8.3.1 நிலநடுக்கம்
8.3.2 நிலச்சரிவு
8.3.3 புயல்
8.3.4 வெள்ளப்பெருக்கு
8.3.5 வறட்சி
8.3.6 மின்னல்
அறிமுகம்
ஒவ்வொரு
ஆண்டும் சராசரியாக 232 மில்லியன் மக்கள் வெவ்வேறு
வகையான பேரிடர்களால் பாதிக்கப்படுகின்றனர். சமீப காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி,
திட்டமிடாத
நகரமயமாதல், சுற்றுப்புற சூழல் சீர்கேடு,
பற்றாக்குறையுள்ள
வளங்களுக்காக ஏற்படும் பிரச்சினை மற்றும் போட்டி,
காலநிலை
மாற்றம், கொள்ளை நோய்கள்,
வறுமை
மற்றும் அதிக அபாயமுள்ள பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சிகளின்
அழுத்தம் ஆகிய காரணங்களால் பேரிடர் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே,
பேரிடர்
அபாயக் குறைப்பு என்பது காலத்தின் தேவையாகும்.
கற்றல்
நோக்கங்கள்
• பேரிடர் அபாயக் குறைப்பு,
மீட்சிப்பெறுதல்
மற்றும் விழிப்புணர்வு போன்ற கலைச்சொற்களை வரையறுத்தல்.
• பேரிடர் அபாயக் குறைப்புக்கான விழிப்புணர்வின்
தேவையை புரிந்துகொள்ளுதல்.
• பேரிடரின் போது பின்பற்றப்படும் விதிமுறைகளை
விளக்குதல்.
• பேரிடரை எதிர்கொள்வதற்கான மாதிரி ஒத்திகை
செய்வதைப் பற்றிக் கற்று அனுபவப்படுதல்.
பேரிடர் அபாயக் குறைப்பின்
முக்கியத்துவத்தை அங்கீகரித்து 2005ல் 168 நாடுகள்,
வளர்ச்சி
மற்றும் மனி்தநேயம் சார்ந்த எல்லா நிறுவனங்ககளும் கியூவகா செயல்திட்ட வரைவில் (Hyogo
Framework for Action (HFA)) கையெழுத்திட்டன.
இது பேரிடரை எதிர்கொள்ளும்
சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. பேரிடர் அபாயக்
குறைப்புக்கான இந்த திட்டத்தில் மேற்கண்ட நிறுவனங்கள் முதலீடு செய்யும்
பத்தாண்டுகளுக்கான பல்துறை திட்டமாகும்.
பேரிடர்
தொடர்புடைய குறிப்பிட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பொது
விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கலாம். இதனை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள
திட்டங்களுடன் பேரிடர் எங்கு, எப்போது நிகழ்கிறதோ அதனுடன் ஒருங்கிணைக்க
வேண்டும். இது தற்போதுள்ள தன்னார்வலர்களை அணிதிரட்டுவதற்கும்,
குழுவிற்கு
ஒத்துழைப்பதற்கும் மற்றும் குழுக்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கும்
உதவிடும். இதை ஆதரிக்க வலுவான மற்றும் ஒருங்கிணைந்த பேரிடர் குறைப்பு செய்திகளும்,
தெளிவான
இலக்குடன் கூடிய தகவல், கல்வி மற்றும் தகவல்தொடர்பு சாதனங்கள் போன்றவை
தேவைப்படுகின்றன.