Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியல் அறிமுகம்
   Posted On :  04.10.2023 08:28 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியல் : அரசியல் அறிவியல் அறிமுகம்

கலைச்சொற்கள்: Glossary


அரசியல் முறைமைகள் (Political Systems): பல்வேறு அரசமைப்புச் சட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்படும் வேறுபட்ட அரசாங்க வகைகளாகும்.


அர்த்த சாஸ்த்திரம் (Arthasastra): பொ.ஆ. மு. 3-ஆம் நூற்றாண்டில் கௌடில்யரால் எழுதப்பட்ட அரசியல் பொருளியல் மற்றும் நிர்வாக ஆளுகை பற்றிய நூலாகும்.


நகர அரசு (City-State): ஒரு நகரத்தில் வாழும் சிறிய சமூகம் சார்ந்த குறைவான மக்கள் தொகைக்கான ஒரு சிறிய அரசு. 


அரசியல் நடத்தை (Political Behaviour): அரசியல் நடத்தை என்பது பொதுவாக அதிகாரம் தொடர்பான செயல்பாடாகும் அதிலும் குறிப்பாக அரசாங்கம் தொடர்பானது எனலாம். 


அதிகாரத்துவம் (Authority): ஓர் தனிநபர் அல்லது நிறுவனத்தால் சட்டபூர்வமாக பயன்படுத்தப்படும் சக்தி அல்லது அதிகாரம் அது சட்டபூர்வ அதிகாரப் பயன்பாடு எனவும் அழைக்கப்படுகிறது. 


நம்பிக்கை (Tryst): சில நேரங்களிலும் அல்லது சில இடங்களிலும் எதிர்காலத்தினை திறமையோடு சந்திக்க செய்யும் ஏற்பாடு.


அரசியல் இயக்கவியல் (Political Dynamics): அரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மை.


அரசியல் (Politics): நாட்டின் நிர்வாகம் மற்றும் அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றியும், அரசாங்கம் மற்றும் ஆளுகையைப் பற்றியும் படிக்க உதவும் ஒரு கலை அல்லது அரசாங்கம்பற்றிய அறிவியல் சார்ந்த பாடம் எனலாம்.


அரசியல் அறிவியல் (Political Science): அரசு மற்றும் அரசாங்க முறைமைகளை பற்றி அறிவதுடன் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி அறிவியல் பூர்வமாகப் படிக்கும் ஒரு பாடம்.


நடத்தையியல் (Behaviouralism): அரசியல் நடத்தையினை முன்கணித்து நடுநிலையுடன் அதனை அளவிடுதலாகும். 


பின்தோன்றிய நடத்தையியல் (Post Behaviouralism) : நடத்தையியலின் பழமைவாதத்திற்கு எதிராக உருவானதுடன் பொருத்துமை மற்றும் துல்லியத்தன்மையை வலியுறுத்தி உருவானதாகும். 


பிரபுக்களாட்சி (Aristocracy) : சமூகத்தின் உயர் நிலையில் இருக்கும் ஆள்வதற்குத் தகுதியானவர்கள் என அறியப்பட்ட சிலரால் நடத்தப்படும் ஒரு ஆட்சி முறை. 


மக்களாட்சி (Democracy) : மக்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்ய மக்களே தங்களுக்காக உருவாக்கிய ஒரு ஆட்சி முறையாகும். 


முற்றதிகாரம் (Totalitarianism) : மனிதனின் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வல்ல முழுமையான அதிகாரம் கொண்ட அரசு உள்ள ஆட்சி முறை.


சிறுகுழுவாட்சி (Oligarchy) : ஒரு சிறு குழு அனைத்து அதிகாரங்களையும் பெற்று ஊழல் மற்றும் சுயநலம் அடிப்படையில் ஆளும் ஆட்சி முறையாகும்.


ஏகாதிபத்தியம் (Imperialism) : ஒரு பேரரசு அல்லது நாடு தனது ஆதிக்க அதிகார வரம்பினை வேறொரு நாட்டின் மீது செலுத்தி அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்லது சார்பு நாடாக்குவதாகும்.


காலனியாதிக்கம் (Colonialism) : ஒரு நாடு தனது கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு நாட்டின் மீதோ அல்லது அதன் நிலப்பரப்பின் மீதோ அல்லது மக்களின் மீதோ கட்டுப்பாடு செலுத்தி அதனை ஆட்சி செய்வது ஆகும்.

11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Glossary for Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் அறிவியல் அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்