நிலமட்டம்
சமமாக்கல் செயல்முறைகள் (Gradational processes)
புவியின் மேற்பரப்பை சமன் செய்யும் செயல் முறைகளை நிலமட்டம்
சமமாக்கல் என்கிறோம். அது மேலும் அரித்தலினால் சமப்படுத்துதல் (degradation) மற்றும் படிவுகளால்
நிரப்பப்படுதல் (aggradation) என வகைப்படுத்தப்படுகிறது. புவியின் மேற்பரப்பை அரிக்கும்
செயல்முறையை அரித்தலினால் சமப்படுத்துதல் (degradation) என்றும் புவியின் ஆழமான
பகுதிகளை நிரப்புதலை படிவுகளால் நிரப்பப்படுதல் (Aggradation) என்றும் அழைக்கிறோம்.
நிலமட்டம் சமமாக்கும் காரணிகள்
புவியின் மேற்பரப்பில்
செயல்புரியும் சக்திகள் நிலமட்டம் சமமாக்கும் காரணிகள் ஆகும். நீர், அலைகள், காற்று, பனி போன்றவை முக்கிய நிலமட்டம்
சமமாக்கும் காரணிகள் ஆகும்.