புவியியல் - கலைச்சொற்கள் - பாறைக்கோளம் - வெளி இயக்கச் செயல்முறைகள் | 11th Geography : Chapter 4 : Lithosphere: Exogenic Processes
கலைச்சொற்கள்
1. ஆற்றுப்படுகை : (Streambed) ஆறு செல்லும் வழி அல்லது ஆறு
முன்பு சென்ற வழி.
2. வேகமான நீர்வீழ்ச்சி : (Cataracts) நீர்வீழ்ச்சியானது முழு
கொள்ளவுடன் இருப்பது.
3. பனிகவிகை : (Icecaps) துருவங்களில் உள்ள பெருங்கடலானது பனி
மற்றும் பனிகட்டிகளால் சூழப்பட்டு இருப்பது.
4. கடற்கரை விலகிய பகுதி : (Offshore) கண்டத்திட்டின் ஆழமில்லாப்
பகுதி கடற்கரை விலகிய பகுதி.
5. ஆறுகள் தோன்றும் இடம் : (Sourceofariver) ஆறுகள் உற்பத்தியாகும் இடம்.
6. நீர்பிரிப்பு : (water
divide) ஒரு
மலையின் இருபக்கத்தில் காணப்படும் இரண்டு நதி அமைப்புகள்.
7. பாலைவனச்சோலை : (Oasis) மழை நீர் நிரம்பிய பாலைவனப்
பள்ளம்
8. பாலைவனம் : (Desert)
வறண்ட பயன் அற்ற நிலம்.
9. உறைபனிக்கோடு : (Snow
line) பனி
மூடியப் பகுதிக்கும் பனியற்ற பகுதிக்கும் இடையே உள்ள எல்லை.
10. டெல்டா : (Delta)
ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள முக்கோண
வடிவ வளமிக்க நிலத்தோற்றம்.