Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள்

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள் | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

   Posted On :  19.08.2023 06:47 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு

கற்கண்டு 

வல்லினம் மிகும் இடங்கள்



வாணன் வேலைக் கொடுத்தான்.

வாணன் வேலை கொடுத்தான்.

இந்த இரண்டு தொடர்களுக்கும் உள்ள பொருள் வேறுபாடு யாது?

வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர். இவ்வாறு எந்த எந்த இடங்களில் அவ்வல்லினம் மிகும் என்பதை விதிகளின் மூலமும் எடுத்துக்காட்டுகள் மூலமும் அறியலாம். 

வல்லினம் மிகும் இடங்கள் 

தற்கால உரைநடையில் வல்லினம் மிகவேண்டிய இடங்களாகக் கீழ்க்காண்பனவற்றைக் கூறலாம்.

1. அச்சட்டை

இந்தக்காலம்

த்திசை?

எந்தப்பணம்?

அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.

 

2. கதவைத்திற

தகவல்களைத்திரட்டு

காட்சியைப்பார்

என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

 

3. முதியவருக்குக்கொடு

மெட்டுக்குப்பாட்டு

ஊருக்குச்செல்

கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

 

4. எனக்கேட்டார்

வருவதாகக்கூறு

என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்.

மேற்கண்டவாறு வல்லினம் மிகும் இடங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கினாலே , தவறுகளைத் தவிர்த்துவிடலாம். மரபையும் பட்டறிவையும் தாண்டி, சொற்களை ஒலித்துப் பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளியவழி எனலாம்.

தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்

வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப் புணர்ச்சியின்பாற்படும்.

சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கவும் பேச்சின் இயல்பைப் பேணவும் இனிய ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.

மேலும் சில வல்லினம் மிகும் இடங்களை அறிந்துகொள்வோம்

அதற்குச் சொன்னேன்

இதற்குக் கொடு

எதற்குக் கேட்கிறாய்?

அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

 

இனிக் காண்போம்

தனிச் சிறப்பு

இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்.

 

மிகப் பெரியவர்

மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.

 

எட்டுத்தொகை

த்துப்பாட்டு

எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின்பின் வல்லினம் மிகும்.

 

தீப் பிடித்தது

பூப் பந்தல்

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

 

கூவாக் குயில்

ஓடாக் குதிரை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகும்.

 

கேட்டுக் கொண்டான்

விற்றுச் சென்றான்

வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.

 

ஆடச் சொன்னார்

ஓடிப் போனார்

(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.

 

புலித்தோல்

ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

 

கிழக்குப் பகுதி

வடக்குப் பக்கம்

திசைப் பெயர்களின்பின் வலிமிகும்.

 

மல்லிகைப்பூ

சித்திரைத்திங்கள்

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

 

தாமரைப்பாதம்

உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

 

சாலப்பேசினார்

தவச்சிறிது

சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்.

 

நிலாச் சோறு

கனாக் கண்டேன்

தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும்.

 

வாழ்க்கைப்படகு

உலகப்பந்து

சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.


Tags : Chapter 3 | 9th Tamil இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 3 : Ullathin sher : Grammar: Vallinam migum edankal Chapter 3 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்கள் - இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்