Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

   Posted On :  29.08.2023 10:15 pm

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

படித்துச் சுவைக்க.

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம் போட்டுத்

தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!

வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி

அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ

முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா

தொட்டில் கட்டித் தாலாட்ட தூக்கம் வருமோடா

கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால்

மதியத்து வெயிலிலே மயக்கமும் தான் வாராதோ

வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன் வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ?

நாட்டுப்புறப்பாட்டுதகவலாளர்வேலம்மாள்

 

பொன்மொழிகளை மொழி பெயர்க்க.

1. A nation's culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi

நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும்ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

2. The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3. The biggest problem is the lack of love and charity - Mother Teresa

அன்பு செலுத்துதல்தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடேமிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

4. You have to dream before your dreams can come true - A.P.J. Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரைகனவு காணுங்கள்.

5. Winners don't do different things; they do things differently - Shiv Khera

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும்வித்தியாசமாக செய்கிறார்கள்.

 

வடிவம் மாற்றுக

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டுவரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.

1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றனபெரம்பலூர் மாவட்டத்தில் கடல் பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள்பாறைப் படிமமாகக் கிடைத்த கடல்நத்தைடைனோசரின் வால்பகுதிகடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

விடை:

தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர்பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றனபெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள்பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தைடைனோசரின் வால் பகுதிகடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 

மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

விடை:

கா : மேலும் கீழும்:

ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.

1. மேடும் பள்ளமும்:

சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.

2. நகமும் சதையும்:

மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.

3. முதலும் முடிவும்:

இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார்.

4. கேளிக்கையும் வேடிக்கையும்:

எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.

5. கண்ணும் கருத்தும்:

அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.

 

தொகுப்புரை எழுதுக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

விடை:

தமிழ் இலக்கிய மன்ற விழா

இடம் : வித்யாபார்த்தி மேனிலைப் பள்ளிசீலப்பாடிதிண்டுக்கல் -5. நாள் : திருவள்ளுவராண்டு , ஸ்ரீவிளம்பி வருடம்வைகாசி 23.

06.06.2018 புதன்கிழமை

 தொகுப்புரை:

திண்டுக்கல் மாவட்டம்சீலப்பாடிவித்யாபார்த்தி மேனிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றதுஇந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் மேரி தலைமை தாங்கினார்பள்ளித் தாளாளர் டாக்டர்ஆர்கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர் இன்ப வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார்முன்னிலை வகித்துப் பேசிய பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் இன்பச் சுவையோடு நகைச்சுவையும் இருக்கிறது என்பது பற்றிப் பேசினார்.

தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய திண்டுக்கல் .லியோனி அவர்கள்ஒன்பான் சுவைகளை விளக்கி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவைஎனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

நிறைவாகஇலக்கியமன்றச் செயலர் 12ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.

 

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றனதமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம்கருதப்படுகிறதுபிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள்ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றனபசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றனமிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளனஅத்துடன்ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம்கர்நாடகம்ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றனஇலங்கைபிரேசில்பிலிப்பைன்ஸ்மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றனகரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.முமுதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

வினாக்கள்:

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது

பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது

மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

விடைகாங்கேயம் இனக் காளைகள்

 

2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

கர்நாடகம்

கேரளா

இலங்கை

ஆந்திரா

விடைஇலங்கை

 

3. பிரித்து எழுதுககண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.

கண்டெடுக்க + பட்டு + உள்ளன.

கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

விடை: கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

 

4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?

வினாத் தொடர் 

கட்டளைத்தொடர் 

செய்தித்தொடர் 

உணர்ச்சித்தொடர்

விடைசெய்தித்தொடர்

 

மொழியோடு விளையாடு

 

பொருள் எழுதித் தொடரமைக்க.

கரைகறைகுளவிகுழவிவாளைவாழைபரவைபறவைமரைமறை;

அலை : கடலலை - இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாவுள்ளது.

அழை :  வரவழைத்தல்  - என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்

கரை : ஆற்றின் ஓரம் - ஆற்றங்கரையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

கறை படிவது கறை - சட்டையில் கறை படிந்துள்ளது.

குளவி :  பூச்சி வகைகளுள் ஒன்று - வாசல் நிலைப்படியில்

குளவி : கூடுகட்டியிருக்கிறது.

குழவி : குழந்தை - குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)

வாளை மீன்களில் ஒருவகை - நீர் நிலைகளில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.

வாழை வாழை மரம் - திருமணப் பந்தலில் வாழை மரங்கள் கட்டினர்.

பரவை : பரந்துள்ள கடல் - மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றூர் பரவை.

பறவை : பறப்பவை - காலைப் பொழுதில் பறவைகள் பாடும்.

மரை : மான்தாமரை - தாமரை நீர் நிலையில் மலரும்.

மறை வேதம் - வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.

 

அகராதியில் காண்க.

இயவைசந்தப்பேழைசிட்டம்தகழ்வுபௌரி

இயவை : வழிமூங்கில் அரிசிதுவரைதோரை நெல்காடு சந்தப்பேழை : சந்தனப் பெட்டி

சிட்டம் : நூல் சிட்டம்எரிந்து கருகியதுபெருமை அறிவுநீதிஉயர்ந்து

தகழ்வு : அகழ்அறிவுஉண்கலம்

பௌரி : பெரும் பண்வகை.

 

பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள் தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குகஅத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்துபுதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குகஇறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.

விடை:

1. வைக்காதீர்கள்

2. மழைக் காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்

3. மழைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்

4. மழைக் காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

 

குறுக்கெழுத்துப் புதிர்


 

இடமிருந்து வலம்

2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6)

5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3)

7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7)

10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2)

13. மா + அடி - இதன் புணர்ந்த வடிவம் (3)

19. கொள் என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் (2)

 

வலமிருந்து இடம்

9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2)

11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3)

12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5)

16. சல்லிக்கட்டு விளையாட்டுக்குரிய விலங்கு (2)

18. தனி + ஆள் - சேர்த்து எழுதுக. (4)

 

மேலிருந்து கீழ்

1. தமிழர்களின் வீர விளையாட்டு (7)

2. இவள் +  - சேர்ந்தால் கிடைப்பது(3)

3. மரத்தில் காய்கள் .......... ஆகக் காய்த்திருந்தன (4)

5. உரிச்சொற்களுள் ஒன்று (2)

6. ............. சிறந்தது(2)

8. நேர்ததைக் குறிப்பிடும் வானியல் சொல் (2)

12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)

15. காய் பழுத்தால் ............ (2)

 

கீழிருந்து மேல்

14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3)

17. யா முதல் வரும் வினாப்பெயர் (2)

18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4)

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


விடை

1. பரதம் பாரதத்தின் பண்பாட்டுக் கலையாகும்.  

2. தமிழகத்தின் இசைக்கருவிகளுள் நாதசுரமும் ஒன்றுதவில் தோற் கருவிகளுள் ஒன்று.

3. தம்புரா சுருதி தவறாமல் இருப்பதற்கு இசைக்கப்படுவது.

4. பறைதோல் கருவிகளுள் தொன்மையானதுநல்லதுக்கும் கெட்டதுக்கும் இசையில் நுண்ணிய வேறுபாடு உண்டு.

5. தமிழ்நாட்டுப் பெண்களில் எண்ணங்களை வாசல் முன் வெளிப்படுத்துவதுஎரியும் குத்துவிளக்கு மங்கலம் சின்னங்களில் ஒன்று.

6. தமிழர்களின் காதலும் வீரமும் இருகண்கள்காளையை அடக்கி பெண்ணைத் திருமணம் செய்தனர்இஃது ஒரு பண்பாட்டு நிகழ்வு.

 

செயல்திட்டம்

தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளைநாளிதழ்களிலோ புத்தகங்களிலோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.

தொல்லியல் பற்றிய செய்திகள்:

  தேனி மாவட்டம்போடிசி.பி.., கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியியல் துறை மூலம்இந்த ஆய்வு நடந்தது.

உதவி பேராசிரியர்மாணிக்கராஜ் கூறியதாவது:

  தே.கல்லுப்பட்டி அருகேகவசகோட்டை கிராமத்தில்பண்ணைமேடு எனப்படும்அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில்ஆய்வு மேற்கொண்டோம்இதில்தமிழரின் தொன்மை எழுத்து வடிவமானதமிழ்பிராமி எழுத்துக்கள் பொறித்தகருப்புசிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்முதுமக்கள் தாழிசுடுமண் பொம்மைகள்மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  பானை ஓடுகளில்கி.பி. 1 மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்ததமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளதுதொடர் எழுத்துகள் கிடைக்காததால்முழுவதும் படித்து அறிய முடியவில்லைஇங்கு காணப்படும் செங்கல்கள்கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறதுதுவாரங்கள் உள்ளது இதன் சிறப்புமற்றொரு பானை ஓட்டில்மீன் உருவம் பொறித்துள்ளது.

முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.

தாழியின் விளிம்பு பகுதியில் கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றனஇவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என தெரிகிறது.

விரிவான தொல்லியியல் ஆய்வு மேற்கொண்டால்பண்டைய தமிழர்களின் சிறப்புகளையும்வாழ்வியல் முறைநாகரீகத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிக்கொணர முடியும்இவ்வாறு அவர் கூறினார்.

 

நிற்க அதற்குத் தக

 

நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்

கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.

கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.

நகரப் பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச் செய்த போது.

 

நிறைவுரை :

 வித்யானந்தன் எழுதிய இந்நூல் பல கலைச் சொற்களையும் விளக்குகின்றது.

 

வாழ்வியல்

இயல் மூன்று

திருக்குறள்


கற்பவை கற்றபின்

 

1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

விடை 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

 

2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

பாடல்

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம் செய் - மாண்பற்ற

காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்.

(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில்அவரது கவித்திறனைப் புகழ்ந்து 'பாரதிஎன்ற பட்டத்தைச் சூட்டினார்.)

குறள்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

விடை:

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:

  நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8வது குறள்)

 

3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.


விடை : 1 - , 2 - , 3 – 

 

4. தீரா இடும்பை தருவது எது?

ஆராயாமைஐயப்படுதல்

குணம்குற்றம்

பெருமைசிறுமை

நாடாமைபேணாமை

விடை: ஆராயாமைஐயப்படுதல்

குறள்தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

 தீரா இடும்பை தரும்

 

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்.

முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான்அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.

பேணாமை - பாதுகாக்காமை.

அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.

செவிச் செல்வம் - கேட்பதால் பெறும் அறிவு.

அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.

அறனல்ல செய்யாமை - அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.

மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான்அமைதிக்கான விருது கிடைத்தது.

 

 குறுவினா

1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

   தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.

 

2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும் - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

   தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும்தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும்தீ தொட்டால் தான் சுடும்தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளனஅதனால் தான் 'தீயினும் அஞ்சப்படும்என்றார்.

 

3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல் - இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

    ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் நம்ப வேண்டும் மன்னன்அவற்றை ஒப்பு நோக்கிய பின்பேஅதனை உண்மையென நம்பவேண்டும்..

 

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

 சொல் ஒன்றுசெயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

 

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர்தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர்மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டதுகொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். "எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”

பக்கத்திலிருந்தவன் "அடப்பாவிபேசிட்டியே!” என்றான்உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்னநீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான்நான்காவது ஆள், “நல்லவேளைநான் மட்டும் பேசவில்லை !" என்றான்இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்து போனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

 பேதையின் பேதையார் இல்.

 

கதைக்குப் பொருத்தமான குறள்

 3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

விளக்கம்:

 கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன்தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை.

எனவே “சொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம்குவளை

திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனைமூங்கில்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப் திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளதுஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளதுதிருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

 

கலைச்சொல் அறிவோம்

அகழாய்வு - Excavation

நடுகல் - Hero Stone

புடைப்புச் சிற்பம் - Embossed sculpture

கல்வெட்டியல் - Epigraphy

பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol

பொறிப்பு - Inscription


தமிழகத்தில் அகழாய்வு நடைபெற்ற முக்கிய இடங்கள்

Tags : Chapter 3 | 9th Tamil இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 3 : Ullathin sher : Tamil Language Exercise - Questions and Answers Chapter 3 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்