அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation

   Posted On :  20.08.2023 08:22 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

| சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. மக்கள்-----------------லிருந்து-----------------க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.

அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு

இ) மலையிலிருந்து சமவெளிக்கு

ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

[விடை : அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு]

 

2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் --------------- எனப்படுகிறது.

அ) குடிபுகுபவர்

ஆ) அகதி

இ) குடியேறுபவர்

ஈ) புகலிடம் தேடுபவர்

[விடை : இ) குடியேறுபவர்]

 

3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது ------------

அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு

இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு

ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு

[விடை : அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு]

 

4. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ------------ ஐ சார்ந்தது.

அ) மக்களியல்

ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்

இ) அரசியல்

ஈ) பொருளாதாரம்

[விடை : இ) அரசியல்]

 

5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் --------------------

அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

ஆ) கால்நடை வளர்ப்பு

இ) மீன் பிடித்தல்

ஈ) வேட்டையாடுதல்

[விடை : அ) மிகையான உணவு தானிய உற்பத்தி]

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. நகரமயமாதல் மூன்று எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

2. வேலையின்மை என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.

3. இந்தியாவின் புதுதில்லி மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.

4. ஒருநபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் தன்னார்வ இடம்பெயர்வு எனப்படும்.

5. நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி தொழில்புரட்சி வளர்ச்சியால் அதிகரிக்கிறது.

 

III பொருத்துக 

 

1. குடிபெயர்தல் - குடிபுகுபவர்

2. குடியேற்றம் - வெளியேறுதல்

3. இழுக்காரணி - வேலை வாய்ப்பின்மை

4. உந்து காரணி - சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு

5. திருமணம் - வேலைவாய்ப்புகள்

 

விடைகள்

1. குடிபெயர்தல் - வெளியேறுதல்

2. குடியேற்றம் - குடிபுகுபவர்

3. இழுக்காரணி - வேலைவாய்ப்புகள்

4. உந்து காரணி - வேலை வாய்ப்பின்மை

5. திருமணம் - சமூக மற்றும் பண்பாட்டு இடம் பெயர்வு

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக  

 

1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது. விடை: சரி

2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை. விடை: சரி

3. நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது. விடை: தவறு

4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன. விடை: சரி

5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது விடை: சரி

 

 

V.கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க


கூற்று: நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.

காரணம்: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல

அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

இ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

ஈ. கூற்று தவறு மற்றும் காரணம் சரி

விடை: அ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு

 

VI சுருக்கமாக விடையளி

 

1. 'இடம் பெயர்தல்' - வரையறு.

> “ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.

> ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.  

 

2. கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:

> வேலைவாய்ப்பு

> கல்வி

> பொழுதுபோக்கு வசதிகள்

 

3.சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுகள்.

சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள்:

> எரிமலை வெடிப்பு

> நில அதிர்வு

> வெள்ளம்

> வறட்சி


4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:

> பொருளாதாரக் காரணிகள் - வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்

> மக்கள்தொகை காரணிகள் - குறைவான மக்கள்தொகை

 

5. நகரமயமாக்கம் என்றால் என்ன?

நகரமயமாதல்: “நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்."

 

6. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள் :

> டோக்கியோ (ஜப்பான்) - 37 மில்லியன்

> புதுதில்லி (இந்தியா) - 29 மில்லியன்

> சாங்காய் (சீனா) - 26 மில்லியன்

> மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) 22 மில்லியன்

 சா பாலோ (பிரேசில்) - 22 மில்லியன்

 

VII விரிவான விடையளி

 

1. இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.

I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் : உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும். - ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல். - நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல். - ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல். - நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல். சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

> தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்) தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக) III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் : குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்) நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்) பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்)

> கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில் இடம்பெயர்தல் மற்றும் 'மந்தை இடமாற்றம்' (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.

 

2. இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.

i) சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் : சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும். இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)

ii) பொருளாதார காரணங்கள் : வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன. பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.

iii) சமூக - பண்பாட்டுக் காரணங்கள் : பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.

iv) மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் : மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும். பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.

v) அரசியல் காரணங்கள் : காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தே போர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.

 

3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.

குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் : நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால்

குடிசைப்பகுதிகள் உருவாகின்றன. மக்கள் நெரிசல் : அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

> தண்ணீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் : எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.  போக்குவரத்து மற்றும் நெரிசல் : இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை. மாசடைதல் :

பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

 

VIII நில வரைபடப் பயிற்சி

 

உலக வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.

1. டோக்கியோ

2. புது தில்லி

3. மெக்சிகோ நகரம்

4. ஷாங்காய்

5. சா - பாலோ

6. ஓசியானியா

7. இலத்தீன் அமெரிக்கா

8. பாரிஸ்

9. இலண்டன்

10. கெய்ரோ

 

IX செயல்பாடுகள் 


1. உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.

> எனது பகுதியில் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போவதால் வேலை தேடியும் குழந்தைகளின் கல்விக்காகவும் புலம் பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு - ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு)

> எனது பகுதி வறட்சி பாதித்த பகுதி என்பதால் மக்கள் செழிப்பான பகுதியை நோக்கி நல்ல ஊதியம், நல்ல வேலைவாய்ப்பு தேடி நகர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு - ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

> திருமணத்தின் காரணமாக, மக்கள்தொகை காரணி அடிப்படையில், பெண்கள் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்கிறார்கள்.(உள்நாட்டு இடம்பெயர்வு - ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு மற்றும் ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

> பருவகால இடம்பெயர்வு, முதுமை, பணி நிறைவு, பணி ஓய்வு காரணமாக மக்கள் பூர்வீக இடங்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழவும், நகர்ப்புற பிரச்சனைகளிலிருந்து மீளவும் இடம்பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு - நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு) 


2. நகரமயமாக்கலின் விளைவுகள் சார்பான தகவல்கள் மற்றும் படங்களைச் சேகரித்து தொகுப்புப் படம் (Album) ஒன்றைத் தயார் செய்க. (மாணவர்களுக்கானது)

Tags : Chapter 4 | Geography | 8th Social Science அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation : Questions with Answers Chapter 4 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் : வினா விடை - அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்