Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  16.09.2023 05:41 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

உடல் நலம் என்பது நோயின்றி இருப்பது மட்டுமல்ல. இது முழுமையான உடல்நலம், மனநலம் மற்றும் சமூகநலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சத்தான உணவை உண்பதால் நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமுடன் இருக்கமுடியும்.

உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள்



உடல் நலம் என்பது நோயின்றி இருப்பது மட்டுமல்ல. இது முழுமையான உடல்நலம், மனநலம் மற்றும் சமூகநலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சத்தான உணவை உண்பதால் நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமுடன் இருக்கமுடியும். உடல் நலத்துடன் இருக்கும்போது நீங்கள் தன்னம்பிக்கையோடும், அனைத்து செயல்களிலும் ஈடுபாட்டோடும், வாழ்க்கையை அனுபவிக்கும் திறனோடும் இருப்பீர்கள்.

சத்துக் குறைவான உணவு வகைகள் உடல் பருமனையும், நோய்களையும் உண்டாக்குகின்றன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவில் பாதிப்பையும் அது உண்டாக்கும். அதனால், உங்களுடைய உணவை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.

 

சரிவிகித உணவு

நமது உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் தேவையான அனைத்து சத்துக்களையும் போதுமான அளவு கொண்ட


ஓர் உணவு அவசியம். உடல்நலத்தை உறுதி செய்யக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்களை சரிவிகித உணவு போதுமான அளவு கொண்டுள்ளது.

உணவு என்பது போதுமான அளவு நீரையும், சரியான அளவு ஆற்றலையும் நமக்கு வழங்க வேண்டும். கீழ்க்காணும் காரணங்களுக்காக சரிவிகித உணவு அவசியமாகும்.

அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கு

நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு

நோய்களை எதிர்க்கும் திறன் பெறுவதற்கு

உடல் நன்றாக வளர்வதற்கு

 

செயல்பாடு 7

12 வயது நிரம்பிய சிறுவன்/சிறுமி ஒருவருக்கு சரிவிகித உணவு அளிக்க ஒரு உணவு வரைபட அட்டை தயாரிக்கவும். அதில் விலைகள் குறைந்த மற்றும் உங்கள் பகுதியில் கிடைக்கக்கூடிய எளிமையான உணவு வகைகள் இடம் பெற வேண்டும்.


ஊட்டச்சத்துக் குறைபாடு

உங்கள் உணவு சரிவிகித உணவாக இல்லாதபோது விளைவுகள் எப்படி இருக்கும்? கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கவனிக்கவும்.

இந்தக் குழந்தைகள் சாதாரணமாக இருப்பதாகத் தெரிகிறதா?

அதற்கான காரணத்தைக் கூறுக?

இந்தக் குழந்தைகள் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகும்.


 

ஊட்டச்சத்துக் குறைபாடு

நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்க வில்லையென்றால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு எனும் வார்த்தை, சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததால் ஏற்படும் விளைவைக் குறிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நோய்கள் உண்டாகின்றன. நமது உணவில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் எனப்படுகின்றன.

 

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் இந்தியா, சீனாவிற்கு அடுத்ததாக, அதிக எண்ணிக்கையில் உடல் பருமன் உடையவர்களைக் கொண்ட நாடுகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது.



செயல்பாடு 8

உனக்கு அருகாமையில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்திற்குச் சென்று, அதைப் பார்வையிட்டு ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும், 0-5 வயது வரையுள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும் கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டறிக.

 

உடற்பயிற்சி

உடல் தகுதியையும், முழுமையான உடல் நலத்தையும் மேம்படுத்தக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய உடல் செயல்பாடே உடற்பயிற்சி ஆகும்.


உடற்பயிற்சி, கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்காக அவசியமாகும்.

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.

வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.

தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்

விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல், எடையைக் குறைத்தல் அல்லது பராமரித்தல் மற்றும் அனுபவ மகிழ்ச்சி அளித்தல்.

குழுந்தைகள் மற்றும் முதியோர்களில் உடல்பருமனால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல்.

 

ஓய்வு

உடல் மற்றும் மன நலத்திற்கு போதுமான அளவு ஓய்வு அவசியம். உடல் வளர்ச்சிக்கும், ஊட்டச்சத்து எவ்வளவு மேம்பாட்டிற்கும், முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் முக்கியம் ஆகும்.



நண்பர்களுடன் கலந்துரையாடு

"சீக்கிரம் படுக்கச் சென்று, அதிகாலை எழும் பழக்கம் ஒரு மனிதனை நலமுடனும், வளமுடனும் மற்றும் அறிவுடனும் வைக்கிறது"

பெஞ்சமின் பிராங்க்ளின்

 

தூய்மை

தூய்மை என்பது உடல் நலத்தைக் காப்பதற்காக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களின் தொகுப்பு ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி "உடல் நலத்தைப் பராமரிக்கவும், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவக்கூடிய நிலை மற்றும் நடைமுறைகளையே, தூய்மை குறிக்கிறது'


தன் சுத்தம்

தன் சுத்தம் என்பது சுத்தமாக ஒருவர் தன் உடல் இருப்பதன்மூலமாக ஆரோக்கியத்திலும், கொள்வதற்காக நடைமுறைகளை நலனிலும் அக்கறை மேற்கொள்ளும் உள்ளடக்கியதாகும். நாம் எத்தனை முறை குளிக்கிறோம், கைகளைக் கழுவுகிறோம், நகங்களை வெட்டுகிறோம், உடை மாற்றுகிறோம் போன்ற பழக்கவழக்கங்களை இது உள்ளடக்கியதாகும். நாம் வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், குளியறை மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களின் தரைகளை கிருமிகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டியதையும் இது உள்ளடக்கியுள்ளது.


செயல்பாடு 9

ஒரு நாள் ரகீம் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மூன்று முறை வாந்தி எடுத்தான். அதனால் அவன் சோர்வாகவும், நீர்ச்சத்து இழந்தும் காணப்பட்டான். செவிலியராகப் பணிபுரியும் ரகீமின் தாயார் ஒரு கரைசலைத் தயார் செய்து ரகீமைப் பருகச் சொன்னார். சிறிது நேரத்திற்குப் பின்னர் ரகீம் நன்றாக இருப்பதாக உணர்ந்து, தனது தாயாரிடம் என்ன கரைசல் எனக்குத் தந்தீர்கள் எனக் கேட்டான். அதற்கு அவர் வாய்வழி நீரேற்றக் கரைசல் (Oral Rehydration Solution - ORS) என்றார். ORS என்றால் என்னவென்று பார்ப்போமா?

வாந்தி எடுத்தாலோ அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ நம் உடலிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு உப்பின்சமநிலை சீரற்றுப் போகிறது. அதிக நீர் வெளியேறுவது (Dehydration), தீவிர உடல் பிரச்சினைகளை உருவாக்கும். ORS கரைசலை அடிக்கடி பருகுவதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.

ஒரு லிட்டர் கொதிநீரை எடுத்து அதனைக் குளிர வைக்கவும்.

அந்நீருடன் அரை தேக்கரண்டி உப்பும், ஆறு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்க்கவும்.

தேவைக்கேற்ற சிறிதளவு எலுமிச்சைச் சாறைக் கலந்து கொள்ளலாம். கரைசலினை நன்கு கலக்கியபின் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்ப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.


Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Health and Nutrients Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்