உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  16.09.2023 07:41 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1. நம்  உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு தேவைப்படுகிறது.

அ) கார்போஹைட்ரேட்

ஆ) கொழுப்பு

இ) புரதம்

ஈ) நீர்

விடை : இ) புரதம்

 

2 ஸ்கர்வி -------------- குறைபாட்டினால் உண்டாகிறது.

அ) வைட்டமின் A

ஆ) வைட்டமின் B

இ) வைட்டமின் C

ஈ) வைட்டமின் D

விடை: இ) வைட்டமின் C

 

3. கால்சியம் ---------------------- வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

அ) கார்போஹைட்ரேட்

ஆ) கொழுப்பு

இ) புரதம்

ஈ) தாது உப்புகள்

விடை: ஈ) தாது உப்புகள்

 

4 நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் ------------------------

அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது

இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன

ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது

விடை: இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

 

5. பாக்டீரியா, ஒரு சிறிய ----------------------- நுண்ணுயிரி

அ) புரோகேரியோட்டிக்

ஆ) யூகேரியோட்டிக்

இ) புரோட்டோசோவா

ஈ) செல்களற்ற

விடை: அ) புரோகேரியோட்டிக்

 

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. ஊட்டச்சத்துக் குறைபாடு குறைபாட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

2 அயோடின் சத்துக்குறைபாடு பெரியவர்களில் காய்ட்டர் நோயை ஏற்படுத்துகிறது.

3. வைட்டமின் D குறைபாடு ரிக்கெட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது.

4. டைபாய்டு நோய், உணவு மற்றும் நீர் மாசுபடுவதால் பரவுகிறது.

5. குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) வைரஸ் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.

 

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

 

1. நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.வறு

நம் உணவில் ஆறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை: கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நீர், வைட்டமின்கள், தாது உப்புக்கள்.

2. நம் உடலில் கொழுப்பு, ஆற்றலாக சேமித்து வைக்கப்படுகிறது. சரி

3. அனைத்து பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன. தவறு

4. ஹீமோகுளோபின் இரும்புச்சத்து உதவுகிறது. சரி

5. ஓம்புயிரியின் உற்பத்திக்கு உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும். தவறு

வைரஸ்களால் ஓம்புயிரியின் உடலுக்கு வெளியே வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலாது.


IV. பின்வரும் ஒப்புமைகளைப் பூர்த்தி செய்க.

 

1. அரிசி : கார்போஹைட்ரேட் :: பருப்பு வகைகள்: புரதங்கள்

2. வைட்டமின் D : ரிக்கெட்ஸ் : வைட்டமின் C: ஸ்கர்வி

3. அயோடின் : முன் கழுத்துக் கழலை நோய் :: இரும்பு : அனீமியா

4 காலரா: பாக்டீரியா :: சின்னம்மை : வைரஸ்

 

V. பொருத்துக.


1 வைட்டமின் A -அ. ரிக்கெட்ஸ்

2 வைட்டமின் B - ஆ. மாலைக் கண் நோய்

3 வைட்டமின் C இ. மலட்டுத்தன்மை

4 வைட்டமின் D - ஈ. பெரி பெரி

5 வைட்டமின் E - உ ஸ்கர்வி

 

 

விடைகள்

1 வைட்டமின் A - ஆ. மாலைக் கண் நோய்

2 வைட்டமின் B - ஈ. பெரி பெரி

3 வைட்டமின் C - உ ஸ்கர்வி

4 வைட்டமின் D - அ. ரிக்கெட்ஸ்

5 வைட்டமின் E - இ. மலட்டுத்தன்மை

 

VI. நிரப்புக.



 

VII. சுருக்கமாக விடையளி.

 

1. கீழ்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள  உணவுப்பொருள்கள். - நெய், பால்

ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள். - வைட்டமின் C - ஸ்கர்வி, வைட்டமின் D-ரிக்கெட்ஸ்

 

2. கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.

கார்போஹைட்ரேட்

1. கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் தரும் உணவு

2 அரிசி, சோளம், பழங்கள், கரும்பு சர்க்கரையில் அதிக அளவு உள்ளது

புரதம்

புரதம் உடல் வளர்ச்சிக்கான உணவு,

மீன் , பால் , முட்டை, பருப்புகளில் அதிக அளவு உள்ளது

 

3. சரிவிகித உணவு – வரையறு

அனைத்துச் சத்துக்களும் போதுமான அளவில் உணவில் இருந்தால் அதற்கு சரிவிகித உணவு என்று பெயர்.

 

4. பழங்களையும், காய்கறிகளையும் வெட்டிய பின், அவற்றை நீரில் கழுவக்கூடாது. ஏன்?

வைட்டமின்கள் இரு வகைப்படும்

1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - ADEK

2.  நீரில் கரையும் வைட்டமின்கள் - B, C

நீரில் கரையும் வைட்டமின்கள் B, மற்றும் C காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவும் போது கரைந்து விடும்.

 

5. வைரஸால் ஏற்படும் நோய்கள். இரண்டினை எழுதுக.

1 - எய்ட்ஸ்

2 - ஹிபாட்டிட்டிஸ்

 

6. நுண்ணுயிரிகளின் முக்கியப் பண்புகள் யாவை?

• நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கலாம்  

• பாக்டீரியாக்கள் - புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள்  

• பாக்டீரியாக்கள் - ஒட்டுண்ணியாகவோ அல்லது தனியாக வாழும்.

• வைரஸ்கள் செல்லற்ற உயிரியாகும்.

• இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வாழும்

 

VIII. விரிவாக விடை யளி.

 

1. வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களகளை யும் அட்டவணைப்படுத்துக


உயிர்ச்சத்து வைட்டமின்

வைட்டமின் A - மாலைக்கண் நோய்

வைட்டமின் B - பெரிபெரி

வைட்டமின் C - ஸ்கர்வி

வைட்டமின் D - ரிக்கெட்ஸ்

வைட்டமின் E - நரம்பு பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத்தன்மை

வைட்டமின் K - பலவீனமான எலும்புகள், பற்கள் மற்றும் இரத்தம் உறையாது

Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Questions Answers Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : வினா விடை - உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்