Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நுண்ணுயிரிகள் - ஓர் அறிமுகம்

உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகள் - ஓர் அறிமுகம் | 6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  16.09.2023 04:30 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்

நுண்ணுயிரிகள் - ஓர் அறிமுகம்

தன் சுத்தத்தை அலட்சியம் செய்யும் போது நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. தன் சுத்தத்தை அலட்சியப்படுத்துவதால் நுண்ணுயிரிகள் மூலம் ஏற்படும் சில நோய்களைக் காண்போம்.

நுண்ணுயிரிகள் - ஓர் அறிமுகம்

தன் சுத்தத்தை அலட்சியம் செய்யும் போது நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. தன் சுத்தத்தை அலட்சியப்படுத்துவதால்  நுண்ணுயிரிகள் மூலம் ஏற்படும் சில நோய்களைக் காண்போம்.

1. சீதபேதி

2. பற்சொத்தை

3. சேற்றுப்புண்

4. பொடுகு

உன் கண்களால் காணமுடியாத சில நுண்ணுயிரிகள் உள்ளன என்பதை உன்னால் நம்பமுடிகிறதா? ஆம், நுண்ணுயிரிகளை நுண்ணோக்கி இல்லாமல் பார்க்க முடியாது. பெரும்பாலான நுண்ணுயிரிகள் நான்கு முக்கியப் பிரிவுகளாக உள்ளன.

 பாக்டீரியா

 வைரஸ்

 புரோட்டோசோவா

 பூஞ்சைகள்


1. பாக்டீரியா

பாக்டீரியா என்பவை மிகச் சிறிய புரோகேரியோட்டிக் நுண்ணுயிரிகள் ஆகும். பாக்டீரியா செல்களில் உட்கரு கிடையாது. இவை பொதுவாக செல் சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புக்களைக் கொண்டிருக்காது.

பாக்டீரியாஒட்டுண்ணிகளாகவோ அல்லது தன்னிச்சையான நுண்ணுயிரிகளாகவோ காணப்படும்.

அவை திசுக்களைத் தாக்கக்கூடியவை.

அவை சீழ் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும்.



 

நோய் என்பது, குறிப்பிட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட உடல் செயலியல் நிகஷ்வு ஆகும். கோளாறு என்பது உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை ஆகும்.


 

2. வைரஸ்கள்

வைரஸ் என்பது தொற்று ஏற்படுத்தக்கூடிய காரணியாகும். இவை புரத உறையால் சூழப்பட்ட, நீயூக்ளிக் அமிலத்தினைக் கொண்டுள்ளது.

இது மற்றொரு உயிரினங்களின் செல்களில் புகுந்து பெருக்கமடைகின்றது. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் வைரஸ் பாதிக்கக் கூடியவை. அவை உயிருள்ள செல்களுக்குள் புகுந்து அச்செல்லின் ஆக்கக்கூறுகளைப் பயன்படுத்தி பெருக்கம் அடைகின்றன. வைரஸ், செல்களை அழித்து, பாதிப்படையச் செய்து அல்லது மாற்றமடையச் செய்து உங்களை நோய் வாய்ப்பட வைக்கும்.


ஒரு வைரஸ் டி.என்.ஏ. வுக்குப்பதிலாக ஆர். என். ஏ. பெற்றிருந்தால் அதற்கு ரெட்ரோ வைரஸ் என்று பெயர்

வைரஸினால் உருவாகும் நோய்கள்:

1. சாதாரன் சளி

2. இன்புளுயன்சா

3. கல்லீரல் ஒவ்வாமை

4. சின்னம்மை

5. இளம் பிள்ளை வாதம்

6. பெரியம்மை

7. தட்டம்மை


உங்களது வகுப்பறையில் விவாதிக்கவும்

வைரஸ் என்பது உயிர் உள்ளதா அல்லது உயிர் அற்றதா?

 

உங்கள் யோசனைக்கு சில செயல் திட்டங்கள்

உனக்கு அருகில் உள்ள மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று

தடுப்பூசி அட்டவணையைப் பெற்றுக்கொள்க.

அந்த அட்டவணையிலிருந்து வைரஸ் நோய்கள் மற்றும் பாக்டீரியா நோய்களுக்கு போடப்படும் தடுப்பூசியைப் பட்டியலிடுக.
Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Introduction of Microbes Health and Hygiene | Term 1 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும் : நுண்ணுயிரிகள் - ஓர் அறிமுகம் - உடல் நலமும், சுகாதாரமும் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 6 : உடல் நலமும், சுகாதாரமும்