Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

பைத்தான் - சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

   Posted On :  22.08.2022 07:48 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

சிறந்த பதிலைத் தேர்ந்தெடுங்கள்,சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கணினி அறிவியல் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

மதிப்பீடு

 

பகுதி - அ

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (1 மதிப்பெண்)


1. பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?

strl="TamilNadu"

print(strl[::-1])

அ) Tamilnadu

ஆ) Tmlau

இ) udanlimaT

ஈ) udaNlimaT

விடை : ஈ) udaNlimaT

 

2. பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது?

strl="Chennai Schools"

strl[7] ="_"

அ) Chennai-Schools

ஆ) Chenna-School

இ) Type error

ஈ) Chennai

விடை: அ) Chennai-Schools

 

3. பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?

அ) +

ஆ) &

இ) *

ஈ) =

விடை: அ) +

 

4. மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்:

அ) ஒரு வரி சரம்

ஆ) பல வரி சரங்கள்

இ) இரு வரி சரம்

ஈ) ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்

விடை: ஆ) பல வரி சரங்கள்

 

5. பைத்தானில் சரங்களானது:

அ) மாற்றக்கூடியது

ஆ) மாறக்கூடியது

இ) பரஸ்பரதன்மையற்றது

ஈ) 'நெகிழ்வானது

விடை: இ) பரஸ்பரதன்மையற்றது

 

6. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicing) செயற்குறியாகும்?

அ) { }

ஆ) [ ]

இ) <>

ஈ) ( )

விடை : ஆ) [ ]

 

7. stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்?

அ) slide செயல்பாட்டின் கீழ்ஒட்டு மதிப்பாகும்

ஆ) slice செயற்பாட்டின் முதல் அளபுருவாகும்

இ) slice செயற்பாட்டின் இரண்டாவது அளபுருவாகும்

ஈ) slice செயற்பாட்டின் மூன்றாவது அளபுருவாகும்

விடை: ஈ) slice செயற்பாட்டின் மூன்றாவது அளபுருவாகும்

 

8. பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

அ) %e

ஆ) %E

இ) %g

ஈ) %n

விடை : ஆ) %E

 

9. பின்வருபவனவற்றுள் எந்தக் குறியீடு format( ) செயற்கூறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?

அ) {}

ஆ) <>

இ) ++

ஈ) ^^

விடை : அ) {}

 

10. சரத்தின் கீழ் ஒட்டானானது:

அ) நேர்மறை எண்கள்

ஆ) எதிர்மறை எண்கள்

இ) (அ) மற்றும் (ஆ)

ஈ) (அ) அல்லது (ஆ)

விடை : ஈ) (அ) அல்லது (ஆ)

 

 

பகுதி - ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (2 மதிப்பெண்கள்)

 

1. சரம் என்றால் என்ன?

விடை. குறியுருக்களின் அணியை கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (String) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.

 

2. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

விடை. பைத்தானில் சர தரவுவகையானது மாற்ற இயலாதது. அதாவது சரத்தரவு வகையை வரையறுத்த பின்பு இயங்கு நேரத்தில் அதை மாற்றியமைக்க முடியாது. 

 

3. பைத்தானில் சரத்தை எவ்வாறு நீக்குவாய்?

விடை. சரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறியுருவை நீக்கவும் அனுமதிக்காது. ஆனால் del-கட்டளை பயன்படுத்தி ஒரு முழு சர மாறியையும் நீக்க முடியும்.

 

4. பின்வரும் பைத்தான் குறிமுறையின் வெளியீடு யாது?

strl = "School"

print(strl*3)

வெளியீடு

விடை

School School School

 

5. சரத்தை துண்டாக்குதல்/பிரித்தல் என்றால் என்ன ?

விடை. (1) மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி துண்டு (Slice) எனப்படும். மூலச் சரத்திலிருந்து [ ] என்ற செயற்குறி மற்றும் சுட்டு அல்லது கீழ்ஒட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச் சரம் உருவாக்கப்படும். இதனால் [ ] செயற்குறி துண்டு அல்லது பிரித்தல் செயற்குறி எனப்படும்.

(ii) துண்டு அல்லது பிரித்தல் செயற்குறியை கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை/ (துண்டுகளாக) மூலச் சரத்திலிருந்து பிரிக்க முடியும்.



பகுதி - இ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (3 மதிப்பெண்கள்)


1. கொடுக்கப்பட்ட வடிவத்தை அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக?

COMPUTER

COMPUTE

COMPUT

COMPU

COMP

COM

CO

C

விடை . str1 = input("Enter string")

str2 =' '

index = len(str1)

for i in str1:

str2 = str1[0 : index]

index -=1 print(str2)

 

2. பின்வருபவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக

அ) capitalize() ஆ) swapcase()


 

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?

str1 = "welcome"

str2 = "to school"

str3 = str1[:2]+str2(len(str2)-2:)

print(str3)

விடை. weol

 

4. format() செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

விடை. format() செயற்கூறானது – சரங்களை வடிவமைக்கப் பயன்படும் முக்கிய செயற்கூறாகும். நெளிவு அடைப்புக்குறி {} இட நிரப்பியாக அல்லது புலத்தின் பிரதியீடாக பயன்படுகிறது. இது format() செயற்கூறில் பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டு:

num1=int (input("Number 1: "))

num2=int (input("Number 2: "))

print ("The sum of {} and {} is {}".

format(num1,num2,(num1+num2)))

வெளியீடு :

Number 1: 34

Number 2: 54

The sum of 34 and 54 is 88

 

5. பைத்தானில் count( ) செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.


 

 

பகுதி -ஈ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5 மதிப்பெண்கள்)


1. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. பைத்தான் பின்வரும் செயற்குறிகளை வழங்குகிறது. இச்செயற்குறிகள் சரங்களை கையாள உதவுகிறது.

இணைப்பு (Concatenation +)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரங்களை இணைக்கும் செயல்பாடு சேர்த்தல்/இணைத்தல் எனப்படும். கூட்டல் செயற்குறியானது சரங்களை பைத்தானில் இணைத்துக் கொள்ளப் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு :

>>> "welcome" + "Python"

'welcomePython'

சேர்த்தல் (Append +=) :

ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் மேலும் புதிய சரம் அல்லது சரங்களை சேர்க்கும் செயல் சேர்த்தல் எனப்படும்.

+= செயற்குறி ஏற்கனவே உள்ள சரத்தின் இறுதியில் புதிய சரத்தினை சேர்க்க பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு:

>>> str1="Welcome to ".

>>> strl+="Learn Python"

>>>print (str1)

Welcome to Learn Python

பலமுறை (Repeating (*)) :

பெருக்கல் செயற்குறி கொடுக்கப்பட்ட சரத்தினை பல தடவைகள் வெளிப்படுத்த பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு :

>>> strl="Welcome"

>>>print (str1*4)

Welcome Welcome Welcome Welcome

 

செய்முறைப் பயிற்சி


1. சரத்தின் நீளத்தை கண்டறிய பைத்தான் நிரல் எழுதுக.

விடை . str = input ("Enter a string")

print (len(str))

 

2. கொடுக்கப்பட்டுள்ள சரத்தில் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை முறை தோன்றுகிறது என்பதை கண்டறிய நிரல் எழுதுக.

விடை : Word = 1

str= input ("Enter a string")

For i in str:

If (i==' '):

Word = word + 1

print("Number of words", Word)

 

3. கொடுக்கப்பட்டுள்ள சரத்தின் ஒவ்வொரு வரியிலும் முன்னொட்டாக உரையை சேர்க்க நிரல் எழுதுக.

விடை : import textwrap

str1 = input ("enter string")

t= textwrap. dedent (str1)

w= textwrap. fill (t, width = 50)

f=textwrap. indent (w, '*')

print ( )

print (f)

print ()

 

4. குறிப்பிட்ட அகலத்தின் வலது புறத்தில் குறியீட்டுடன் முழு எண்ணை அச்சிட நிரல் எழுதுக.

விடை x = 4

y=3,4,5

print ("width 2 "+" (*<3d)". format (x))

print ("width 6 "+" (*<7d)". format (y))

 

5. கொடுக்கப்பட்ட சரத்தினை தலைகீழாக எழுத நிரல் எழுதுக. (எ.கா) "Wel" = "lew"

விடை . strl= input ("Enter a string”)

str2 = ‘ ‘

index =-1)

for i in strl:

str2 = str1[index]

index - = 1

print (“The mirror image of the string is”, str2)

 

6. கொடுக்கப்பட்ட சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு தோன்றும் அனைத்து இடங்களிலும் அதை நீக்க நிரல் எழுதுக.

விடை . strl = input (“Enter string")

Ch = input ("Enter a character to be removed")

print (strl. Replace (ch," ")

 

7. ஒரு சரத்தினை இன்னொரு சரத்துடன் சேர்க்க "+="' செயற்குறியை பயன்படுத்தாமல் நிரல் எழுதுக.

விடை. strl = input (“Enter first string").

str2 = input (“Enter second string')

print(strl + str2)

 

8. இரண்டு சரங்களை இடமாற்றம் செய்ய நிரல் எழுதுக.

விடை . strl = input (“Enter string 1”)

Str2 == input (“Enter string 2')

temp = str1

str1 = str2

str2 = temp

print(“After swapping')

print(stri. Str2)

 

9. ஒரு சரத்தை மற்றொரு சரத்தை கொண்டு மாற்றிட replace ( ) செயற்கூறை பயன்படுத்தாமல் நிரல் எழுதுக.

விடை . strl = input (“Enter string”)

print (str1)

str1 = input (“Enter string to the replaced”)

print (str1)

 

10. கொடுக்கப்பட்டுள்ள சரத்தில் குறியுருக்களின் எண்ணிக்கை, வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் வரிகளின் எண்ணிக்கையை கணக்கிட  நிரல் எழுதுக.

விடை . strl = input (“Enter string”)

c=0  

w =1

for i in str1:

if i! =' ':

c= c +1

else:

w= w + 1

x = strl. count ('\n') + 1

print (“Number of characters", c -- x + 1)

print (“Number of words”, w + x - 1)

print (“Number of lines”, x) .

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation : Python Strings and String Manipulation: Book Back Questions and Answers Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்