Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us

   Posted On :  15.09.2023 05:57 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

நிறையை உடையதும் இடத்தை அடைத்துக் கொள்வதுமாகிய பொருள்கள் பருப்பொருள்களாகும்.

அனைத்துப் பருப்பொருள்களும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை.

இரண்டு முக்கியப் பண்புகளின் அடிப்படையில் திண்மம், திரவம் மற்றும் வாயு என பருப்பொருள்களை வகைப்படுத்தலாம்.

அ) துகள்களின் அமைப்பைப் பொருத்து,

ஆ) துகள்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையைப் பொருத்து.

துகள்களின் அமைப்பு மற்றும் துகள்களுக்கிடையே உள்ள விசையின் அடிப்படையில் திட, ஈர்ப்பு திரவ மற்றும் வாயுக்கள் அவற்றின் பண்புகளில் வேறுபடுகின்றன.

ஒரு தூய பொருள் என்பது ஒரே மாதிரியான துகள்களைக் கொண்ட தனிமம் அல்லது சேர்மம் ஆகும்.

ஒரு கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களை ஏதாவது ஒரு விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட தூய்மையற்ற பொருளாகும்.

கைகளால் தெரிந்தெடுத்தல் - எளிதில் கண்ணால் காணக்கூடிய பகுதிப் பொருள்களை கைகளால் பிரித்தெடுக்கும் முறை.

கலவையைப் பிரித்தல் கீழ்க்காணும் காரணங்களுக்காக நிகழ்த்தப்படுகிறது.

1.தீங்கு விளைவிக்கும் பகுதிப் பொருள்களை நீக்க.

2. தேவையான பகுதிப் பொருளைப் பெற.

3.ஒரு பொருளினை மிகத் தூய நிலையில் பெற.

ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பண்புகளைப் பொருத்தே அக்கலவையினைப் பிரித்தெடுக்கும் முறை நிர்ணயிக்கப்படுகிறது.

தூற்றல் கனமான பொருள்களில் கலந்துள்ள லேசான பொருள்களை நீக்கும் முறை

தெளியவைத்து இறுத்தல் - வண்டலைப் பாதிக்காத வண்ணம் தெளிந்த நீரை படியவைத்து வெளியேற்றுதல்.

காந்தப் பிரிப்பு முறை - காந்தத் தன்மை கொண்ட பொருள்களை காந்தத் தன்மையற்ற பொருள்களிலிருந்து பிரிக்கும் முறை

வண்டலாக்குதல் கனமான, கரையாத, திடப் பொருள்களை வண்டலாகப் படிய வைத்து பிரிக்கும் முறை (திண்ம திரவக் கலவைகளைப் பிரிப்பதற்குப் பயன்படுகிறது.)

வடிகட்டுதல் - கரையாத மிக நுண்ணிய திடப் பொருள்களை (வீழ்படிவு) அவற்றின் நீர்மத்திலிருந்து வடிதாளப்பயன்படுத்தி பிரித்தெடுக்கும் முறை

கலப்படம் ஒத்த வடிவம் உடைய, தரம் குறைந்த பொருளைக் கலந்து ஒரு முதன்மைப் பொருளினைத் தூய்மையற்றதாக மாற்றுதல்.


இணையச் செயல்பாடு

பருப்பொருள்கள்


விளையாடி பார்போமா Science Kids.

படிநிலைகள்:

• Google தேடு பொறியில்/உலவியில் சென்று நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்களைக் குறித்து அறிந்து கொள்ள "Science Kids ' என்று தட்டச்சு செய்யவும். அதில் 'game: பகுதிக்குள் 'matter" என்று தட்டச்சு செய்யும் போது திரையில் 'can you drag' என்று தோன்ற அதில் OK என்ற பொத்தானை அழுத்தவும்.

• திரையில் மூன்று காலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ள பகுதி தோன்றும். முதலில் உள்ளது திண்மப் பொருள்களுக்காக, இரண்டாவது திரவம் மற்றும் மூன்றாவது வாயுவுக்காக பிரிக்கப் பட்டுள்ளது.அடியில் உள்ள அடுத்து என அர்த்தங் கொள்ளும். இந்தக் குறியீடை அழுத்த அழுத்த அதில் தோன்றும் பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றை இழுத்துக் கொண்டு போய் அந்த அந்த பத்தியில் விடவும்.

• கடைசி நிலையில் கடைசியில் உள்ள படத்தைப் போலத் தோன்றும். திறன் பேசியின் மூலம் நேரடியாகச் செல்ல கொடுக்கப் பட்டுள்ள QR CODE அல்லது உரலி மூலம் உள்ளே சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உரலி

http://www.sciencekids.co.nz/gamesactivities/gases.html

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

Tags : Matter Around Us | Term 1 Unit 3 | 6th Science நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 3 : Matter Around Us : Keywords, Fast Facts Matter Around Us | Term 1 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : நினைவில் கொள்க - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்