Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us

   Posted On :  15.09.2023 06:25 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

கற்றல் நோக்கங்கள் ❖ பருப்பொருள்களை வரையறுத்து, அவற்றின் பண்புகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல். ❖ சில பண்புகளின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்துதல். ❖ திண்ம், திரவம் மற்றும் வாயுக்களை அவற்றின் துகள் அமைப்பின் அடிப்படையில் வேறுபடுத்துதல். தூய பொருள்களையும், கலவைகளையும் வேறுபடுத்துதல். ❖ கலவைகளைப் பிரித்தலின் அவசியத்தைக் கண்டறிதல். ❖ கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக் கலவைகளைப் பிரிப்பதற்கு, தகுந்த முறைகளைப் பரிந்துரைத்தல். ❖ உணவுக் கலப்படம் குறித்தும், அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு பெறுதல்.

அலகு 3

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

 

இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய மற்றும் நிறையை உடைய பொருள் பருப்பொருளாகும்


 

கற்றல் நோக்கங்கள்

பருப்பொருள்களை வரையறுத்து, அவற்றின் பண்புகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல்.

சில பண்புகளின் அடிப்படையில் பொருள்களை வகைப்படுத்துதல்.

திண்ம், திரவம் மற்றும் வாயுக்களை அவற்றின் துகள் அமைப்பின் அடிப்படையில் வேறுபடுத்துதல். தூய பொருள்களையும், கலவைகளையும் வேறுபடுத்துதல்.

கலவைகளைப் பிரித்தலின் அவசியத்தைக் கண்டறிதல்.

கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக் கலவைகளைப் பிரிப்பதற்கு, தகுந்த முறைகளைப் பரிந்துரைத்தல்.

உணவுக் கலப்படம் குறித்தும், அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு பெறுதல்.

 

அறிமுகம்

நம்மைச் சுற்றிலும் பருப்பொருள்கள் உள்ளன. நாம் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் பருப்பொருளால் ஆனவை. நிறையை உடைய மற்றும் இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய பொருள்கள் அனைத்தும் பருப்பொருள்கள் எனப்படுகின்றன. பருப்பொருள்கள் மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. அவை, திண்மம், நீர்மம் மற்றும் வாயு ஆகும். பருப்பொருள்கள் எவற்றால் ஆனவை தெரியுமா?

பருப்பொருள்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள் மிகச் சிறிய துகள்கள் ஆகும். நம்முடைய கண்கள் உருப்பெருக்கியினால்கூட மற்றும் பார்க்கமுடியாத அளவிற்கு அணுக்கள் மிகச்சிறியவை. ஒரு காகிதத்தாளின் தடிமன் இலட்சக்கணக்கான அணுக்களின் தடிமனைக் கொண்டது. அணுக்களின் அமைப்பைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி (Scanning Electron Microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (Tunnelling Electron Microscope) போன்றவை கண்டறியப் அணுக்களின் அமைப்பைக் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்களைப் பற்றி உயர்வகுப்புகளில் மேலும் பார்க்கலாம். இப்போது பருப்பொருளின் மூன்று நிலைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.


செயல்பாடு 1

சிறிதளவு சர்க்கரைப் படிகங்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு உருப்பெருக்கும் லென்சின் வழியாக கவனமாக அவற்றை உற்றுநோக்கவும்.


கொடுக்கப்பட்டுள்ள எந்த உருவத்துடன் சர்க்கரைப் படிகத்தின் உருவம் ஒத்துப்போகின்றது என்று கூறவும்.

அ ஆ இ ஈ உ ஊ


சில சர்க்கரைப் படிகங்களை நீரில் இடவும்.

சர்க்கரைப் படிகங்களில் என்ன மாற்றம் நிகழ்கிறது? சர்க்கரைப் படிகங்களும் மூலக்கூறுகளால் ஆனவையே. சர்க்கரை நீரில் கரையும்பொழுது, சர்க்கரைப்படிகங்கள் உடைக்கப்படுவதால் சர்க்கரை மூலக்கூறுகள் நீர் முழுவதும் பரவுகின்றன.

இந்நிகழ்வு அந்நீரினை இனிப்புச் சுவை கொண்டதாக மாற்றுகிறது. அந்த சர்க்கரை மூலக்கூறுகள் கண்களால் காண இயலாத அளவு சிறியதாக உள்ளதால் நம்மால் அவற்றைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சிறிய அளவுள்ள எந்த ஒரு பருப்பொருளிலும் மில்லியன் எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் இருக்கும் (ஒரு மில்லியன் = 10 இலட்சம்).

Tags : Term 1 Unit 3 | 6th Science பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 3 : Matter Around Us : Matter Around Us Term 1 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் - பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்