நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
------------------ பருப்பொருளால் ஆனதல்ல.
அ) தங்க மோதிரம்
ஆ) இரும்பு ஆணி
இ) ஒளி
ஈ) எண்ணெய்த் துளி
விடை: இ) ஒளி
2.
400 மிலி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மிலி ஊற்றப்படுகிறது. இப்போது நீரின்
பருமன்
அ) 400 மி.லி
ஆ) 600 மி.லி
இ) 200 மி.லி
ஈ) 800 மி.லி
விடை : இ) 200 மி.லி
3. தர்பூசணிப்
பழத்தில் உள்ள விதைகளை ------------ முறையில் நீக்கலாம்.
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) வடிகட்டுதல்
இ) காந்தப் பிரிப்பு
ஈ) தெளிய வைத்து இறுத்தல்
விடை: அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
4. அரிசி
மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை --------- முறையில் நீக்கலாம்.
அ) வடிகட்டுதல்
ஆ) படியவைத்தல்
இ) தெளிய வைத்து இறுத்தல்
ஈ) புடைத்தல்
விடை: ஈ) புடைத்தல்
5. தூற்றுதல்
என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ------------- அவசியம் தேவைப்படுகிறது.
அ) மழை
ஆ) மண்
இ) நீர்
ஈ) காற்று
விடை: ஈ) காற்று
6.
------------------------ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
அ) திடப்பொருள் - திடப்பொருள்
ஆ) திடப்பொருள் - நீர்மம்
இ) நீர்மம் – நீர்மம்
ஈ) நீர்மம் – வாயு
விடை: ஆ) திடப்பொருள் - நீர்மம்
7. பின்வருவனவற்றுள்
எது கலவை அல்ல?
அ) பாலுடன் கலந்த காபி
ஆ) எலுமிச்சைச் சாறு
இ) நீர்
ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
விடை : இ) நீர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பருப்பொருள் என்பது அணுக்களால் ஆல் ஆனது.
2. திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி
நீர்மத்தை ஐ விடக் குறைவு.
3. நெற்பயிரிலிருந்து நெல்லை கதிரடித்தல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
4. 'உப்புமா' வில் இருந்து கைகளால் தெரிந்தெடுத்தல்
முறையில் மிளகாயினை நீக்கலாம்.
5. நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க வடிகட்டுதல்
முறை பயன்படுத்தப்படுகிறது.
6. குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும்
நீர் பொதுவாக தூய்மையற்ற நீராக அமையும்.
7. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றுள் ஊசி காந்தத்தால்
கவரப்படும்.
III. பொருத்துக.
அ) பண்புகள்
/ உதாரணம்
எளிதில் உடையக்கூடியது
- (நொறுங்கும் தன்மை) - உலோகத் தட்டு
எளிதில் வளையக்கூடியது - ரப்பர் வளையம்
எளிதில் இழுக்கலாம் - பருத்தி, கம்பளி
எளிதில் அழுத்தலாம் - மண் பானை
எளிதில் வெப்பமடையும் - நெகிழி ஒயர் (wire)
விடைகள்
எளிதில் உடையக்கூடியது - (நொறுங்கும் தன்மை) - மண் பானை
எளிதில் வளையக்கூடியது - நெகிழி ஒயர் (wire)
எளிதில் இழுக்கலாம் - ரப்பர் வளையம்
எளிதில் அழுத்தலாம் - பருத்தி, கம்பளி
எளிதில் வெப்பமடையும் - உலோகத் தட்டு
ஆ)
அ
1. கண்களால் பார்க்கக்கூடிய தேவையற்ற பகுதிப்
பொருளை நீக்குதல்
2.
லேசான மற்றும் கனமான பகுதிப் பொருட்களைப் பிரித்தல்
3. கரையாத மாசுப்பொருள்களை நீக்குதல்
4.
காந்தத் தன்மை கொண்ட பகுதிப் பொருள்களை காந்தத்தன்மை அற்ற பகுதிப்பொருட்களில்
இருந்து பிரித்தல்.
5. நீர்மங்களில் இருந்து திண்மங்களைப் பிரித்தல்
ஆ)
சுண்ணாம்புக் கட்டி (சாக்பீஸ் தூள்) நீருடன்
கலந்திருத்தல்
மணல் மற்றும் நீர்
இரும்பு சார்ந்த மாசுக்கள்
அரிசி மற்றும் கல்
உமி மற்றும் நெல்
இ
காந்தப் பிரிப்பு முறை
தெளிய வைத்து இறுத்தல்
வடிகட்டுதல்
கைகளால் தேர்வு செய்தல்
தூற்றுதல்
IV. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறாக இருப்பின்
சரியான கூற்றை எழுதுக.
அ) காற்று
அழுத்தத்திற்கு உட்படாது.
விடை: தவறு. காற்று அழுத்தத்திற்கு உட்படும்.
ஆ) திரவங்களுக்கு
குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு.
விடை: தவறு. திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட பருமன் உண்டு.
இ) திண்மத்தில்
உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன.
விடை: தவறு. திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்வதில்லை .
ஈ) சமைக்கும்
முன் பருப்பு வகைகளை நீரில் கழுவும்போது, வடிகட்டுதல் மூலம் நீரைப் பிரித்தெடுக்கலாம்.
விடை: தவறு. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை
தெளியவைத்து இருத்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்.
உ) திடப்
பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி
என்பது ஒரு வகையான சல்லடையே.
விடை: தவறு. நீர்மப்பொருள்களிலிருந்து
திண்மப் பொருட்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும்
வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
ஊ) தானியத்தையும்,
உமியையும் தூற்றுதல் முறை மூலம் பிரிக்கலாம்.
விடை : சரி.
எ) காற்று
ஒரு தூய பொருளாகும்.
விடை: தவறு காற்று ஒரு கலவை ஆகும் (அல்லது) காற்று ஒரு தூயபொருள்
அல்ல.
ஏ) வண்டலாக்குதல்
முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கலாம்.
விடை: தவறு. தயிரிலிருந்து வெண்ணெய் கடைதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
V. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க
1. திண்மம்: கடினத்தன்மை :: வாயு : -------------------
விடை: அழுத்தத்திற்கு உட்படும் தன்மை (அல்லது) வெண்மை
2. துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது : வாயு :: ------------
திண்மம்
விடை: துகள்களுக்கு இடையே மிகக்குறைந்த இடைவெளி உடையது
3. திண்மம் : குறிப்பிட்ட வடிவம் :: ------------------ கொள்கலனின்
வடிவம்
விடை: திரவம்
4. உமி தானியங்கள் : தூற்றுதல் :: மரத்தூள் சுண்ணக்கட்டி :
------------------
விடை: வண்டலாக்குதல் மற்றும் தெளியவைத்து இறுத்தல்
5. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் :
-------------- :: காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் :
விடை: கைகளால் தெரிந்தெடுத்தல்; வடிகட்டுதல்
6. இரும்பு - கந்தகம் கலவை : உளுத்தம் பருப்பு - கடுகு கலவை
உருட்டுதல்
விடை: காந்தப்பிரிப்பு முறை
VI. மிகச்சுருக்கமாக விடையளி.
1. பருப்பொருள்
- வரையறு.
பருப்பொருள் என்பது, எடை உள்ளதும், இடத்தை அடைத்துக்
கொள்வதும் ஆகும். திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளில் பருப்பொருள்கள் காணப்படுகின்றன.
2. சமைக்கும்
முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருள்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?
நாம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசியிலுள்ள உமி,
தூசி போன்ற நுண்ணிய மாசுப்பொருட்கள் வண்டலாக்குதல்
முறையில் நீக்கப்படுகின்றன, நீரில் அரிசியைக் கழுவும் போது இலேசான மாசுக்கள் நீரில்
மிதக்கும், எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி அடியில் தங்கும்.
3. கலவைகளை
நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?
ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட
ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தாய்மையற்ற பொருளாகும். எனவே, கலவைகளைப் பிரித்தெடுக்க
வேண்டும்.
4. கலவைக்கு
ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது கலவையே, என்பதை நியாயப்படுத்தவும்.
22 கேரட் கோல்டு என்பது கலவைக்கு
ஒரு உதாரணம். ஏனெனில், 22 கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் காப்பர் அல்லது தங்கம்
மற்றும் காட்மியம் கலவையாகும்.
5. படிய
வைத்தல் வரையறு.
கரையாத திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து
கனமான திண்மத்தை அடியில் வண்டலாகப் படியவைக்கும் முறையே ‘படிய வைத்தல்' எனப்படும்.
6. தூய்
பொருளுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய தூய்மையற்ற வேறுபாடுகளைக் கூறுக.
தூய பொருள்
ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே
ஆனது
இயற்பியல் முறைகளில் பிரிக்க
இயலாது
தூய்மையற்ற பொருள்
பிற பொருள்களின் துகள்கள் கலந்த
கலவை
இயற்பியல் முறைகளில் பிரிக்க
இயலும்
VII. சுருக்கமாக விடையளி.
1. இரப்பர்
பந்தை அழுத்தும்போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
ஆம். ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட
வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் வடிவம்
மட்டுமே மாற்றமடைகிறது,
2. வாயுக்களுக்கு
குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஏன்?
வாயுவின் துகள்களுக்கு இடையே,
குறைவான ஈர்ப்பு விசை செயல்படுவதால், வாயுக்கள் குறிப்பிட்ட வடிவம் பெற்றிருப்பதில்லை.
எனவே, அவை கொள்கலனின் வடிவத்தைப் பெறுகின்றன.
3. பாலில்
இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்.
கடைதல் மற்றும் திரியச் செய்தல்
முறையில் பாலிலிருந்து பாலாடைக்கட்டி பெறலாம். 6 முக்கிய படி நிலைகளில் இது பெறப்படுகிறது.
(i) அமிலத்தன்மையாக்கல்
(ii) திரியச் செய்தல்
(iii) தயிர் மற்றும் மோர் இவற்றைப்
பிரித்தல்
(iv) உப்பு இடுதல்
(v) வடிவமைத்தல்
(vi)
பக்குவப்படுத்துதல்.
4. கீழே
கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள படம் 'சலித்தல்'
முறையில் பிரித்தெடுத்தலைக் காட்டுகிறது. இது வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களைப் பிரித்தெடுக்கப்
பயன்படுகிறது.
உதாரணம் - மாவிலிருந்து தவிடு நீக்குதல்,
மணலிலிருந்து சரளைக் கல்லை நீக்குதல்
5. பருப்புடன்
அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய்?
பருப்புடன் அதிக அளவில் சிறு
காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றைத் 'தூற்றுதல் முறையில் நீக்கலாம்.
இலேசான காகிதத்துண்டுகள் காற்றினால்
அடித்துச் செல்லப்பட்டு தனிக்குவியலாகச் சேரும். எடை அதிகமுள்ள பருப்பு, தூற்றுபவரின்
அருகே சிறு குவியலாகச் சேரும்.
6. உணவுக்
கலப்படம் என்றால் என்ன?
கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களுடன்,
தேவையற்ற பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களைச் சேர்க்கும் செயல்முறைக்கு
'உணவுக் கலப்படம்' என்று பெயர்
7. ஒரு
வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திருரகு மோர் பருக விரும்பினார். திருமதி.
ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மோரைப் பெறுவார்? விளக்கவும்.
திருமதி.ரகு தன்னிடமுள்ள தயிரில்
அரை குவளை எடுத்து, அதனுடன் அரை குவளை நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது
அவர் மோர் பரிமாறலாம்.
VIII. உயர் சிந்தனைத்திறன் வினாக்கள்.
1. திட,
திரவ மற்றும் வாயுப்பொருள்களின் பண்புகளை வேறுபடுத்துக.
2. சுண்ணாம்புத்
தூள், கடுகு எண்ணெய், நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உனது ஆய்வகத்தில் உள்ள தகுந்த
உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்? பிரித்தல் முறையினைப் படிநிலைகளில் விளக்கும்
படத்தினை வரையவும்.
3. மூன்று
நிலைகளில் உள்ள துகள்களின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
அ) படம்
1 பருப்பொருளின் எந்த நிலையைக் குறிக்கிறது?
படம் - 1: பருப்பொருளின் வாயு
நிலையைக் குறிக்கிறது.
ஆ) எப்படத்தில்
துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
படம் - 3 : துகள்களுக்கு இடையினான
ஈர்ப்பு விசை அதிகம் (திண்மநிலை)
இ) திறந்த
கலனில் வைக்க முடியாதது எது?
படம் - 1 : உள்ள வாயுக்களைத்
திறந்த கலனில் வைக்க முடியாது.
ஈ) கொள்கலனின்
வடிவத்தைக் கொண்டது எது?
படம் - 2 : உள்ள திரவம் கொள்கலனின்
வடிவத்தைக் கொண்டது.
4. மலரின்
அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை
கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து, மலர் உண்பதற்கு
வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
துணி சல்லடை கொண்டு சலித்தல்
முறையில் வேர்க்கடலை மற்றும் உளுந்தம் பருப்பைப் பிரித்தெடுக்கலாம். ஏனெனில், இரு திடப்பொருட்களும்
வெவ்வேறு அளவுடையவை.
5. ஒரு
குவளை நீரில் புளிச் சாறையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா?
ஏன் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா, புளிப்பானதா அல்லது புளிப்பும், இனிப்பும் சேர்ந்ததா?
• ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ
ர், சர்க்கரை கலந்தது ஒரு கலவை ஆகும்.
• ஏனெனில், கலவை என்பது எளிதில்
பிரிக்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டது.
• இக்கலவை இனிப்பும், புளிப்பும்
கலந்தது.
IX. வாழ்வியல் திறன்கள் - விவாதம்.
1. உணவுக்
கலப்படமும் அதனைக் கண்டறிதலும் என்ற தலைப்பில் விவாதம் ஒன்று நடத்தவும்.
உணவுக் கலப்படமும் அதனைக் கண்டறிதலும் என்ற
தலைப்பில் விவாதம் ஒன்று நடத்தவும்.
X. வரிசைப்படுத்துதல்.
1. தேநீர்
தயாரித்தலின் படிநிலைகளை வரிசைக்கிரமமாக எழுதவும்.
(கலவை,
கரைத்தல், வடிநீர் மற்றும் வண்டல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தவும்).
1. கரைத்தல்
2. வடிநீர்
3. வண்டல்
4. கலவை
XI. களப்பயணம்.
1. உனக்கு அருகிலுள்ள வயல்வெளிக்கும், அரிசி ஆலைக்கும் சென்று
அங்கு செயல்படுத்தப்படும் பல்வேறு பிரித்தல் முறைகளை உற்றுநோக்கி, குறிப்பெடுக்கவும்.
நவீன தொழில்நுட்பம் எந்தெந்த பாரம்பரிய பழக்கங்களை மாற்றியுள்ளது எனப் பட்டியலிடவும்.
பின்வரும் youtube இணைப்பைப் பயன்படுத்தி காணொளிக் காட்சிகளை
உற்றுநோக்கவும்.
watch?v=9Djc5ZVYUW
watch?v=DJGRJ4qL4-A
XII. செயல்திட்டம்.
1. ஒரு
காய்கறிக் கலவையினையோ அல்லது பழக்கலவையினையோ தயார் செய்க. அது கலவை என்பதற்கான காரணங்களைக்
குறிப்பிடவும்.
ஆப்பிள், மாதுளை, கொய்யா, திராட்சை
ஆகிய பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி பழக்கலவை தயாரிக்கப்படுகிறது. நான்கு வகையான
பழங்களை கலக்கப்பட்டுள்ளதால் இது ஒரு கலவை ஆகும்.
2. விளையாட்டுடன்
இணைப்பு
காற்று
ஒரு தூய பொருளல்ல. சுவாசித்தலிலும், விளையாட்டிலும் இது அவசியமாகிறது.பலூன் விளையாட்டு
ஒரு பிரபலமான விளையாட்டாகும். சூடான காற்று, குளிர்ந்த காற்றைவிட லேசானது என்பதால்
சூடான காற்று நிரம்பிய பலூன்கள் மேலே எழும்புகின்றன. சூடான காற்றினைக் கொண்ட பலூன்களைப்
பற்றி மேலும் அறிக.
• சூடான காற்று நிரம்பிய பலூன்களில்
பயணிகளை ஏற்றிச் செல்ல அதன் கீழ் ஒரு கூடை போன்ற அமைப்பு உள்ளது.
• பலூனின் உள்ளே நிரம்பியுள்ள
காற்றினை சூடுபடுத்த, வெப்பப்படுத்தி உள்ளது.
• வெப்பப்படுத்தும்போது பலூனின்
உள்ளே நிரம்பியுள்ள காற்று இலேசாகிறது.
• பலூனின் வெளியே உள்ள காற்று
கனமானது.
• எனவே பலூன் காற்றில் மேல்
நோக்கி எழும்புகிறது.