இயற்பியல் - இயக்க விதிகள் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Physics : UNIT 3 : Laws of Motion
இயக்க விதிகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
a) திசையில் நிலைமம்
b) இயக்கத்தில் நிலைமம்
c) ஓய்வில் நிலைமம்
d) நிலைமமற்ற தன்மை
விடை : a) திசையில் நிலைமம்
2. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 'm' என்ற நிறை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நிறையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கிடைத்தள விசை Fன் சிறும மதிப்பு என்ன?.
a) mg ஐ விடக் குறைவு
b) mg க்குச் சமம்
c) mg ஐ விட அதிகம்
d) கண்டறிய முடியாது
விடை : c) mg ஐ விட அதிகம்
3. நேர்க்குறி × அச்சுத்திசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடை பெறுவது எது?
a) எதிர்க்குறி × அச்சுத்திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்
b) நேர்க்குறி × அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்
c) வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது
d) கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்
விடை : a) எதிர்க்குறி × அச்சுத்திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்
4. மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?
a) புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
b) புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை
c) புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்து விசை
d) மேற்கண்ட எதுவுமில்லை
விடை : c) புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்து விசை
5. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு.
a) 1
b) 1ஐ விடக் குறைவு
c) 1ஐ விட அதிகம்
d) மேற்கண்ட அனைத்தும்
விடை : c) 1ஐ விட அதிகம்
6. எதிர்க்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் “தனித்த பொருள் விசை படத்தை'' தேர்ந்தெடு. (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)
விடை : c)
7. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது
a) பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்
b) பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்
c) இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்
d) இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை
விடை : b) பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்
8. படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன. முதல் நிலையில் F1 விசை, இடப்புறமிருந்து செயல்படுத்தப் படுகிறது, பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல் படுத்தப்படுகிறது. பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இருநிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F2 (இயற்பியல் ஒலிம்பியாட் 2016)
a) 1:1
b) 1:2
c) 2:1
d) 1:3
விடை : c) 2:1
9. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
a) எப்பொழுதும் சுழி
b) சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
c) எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு
d) முடிவு செய்ய இயலாது
விடை : b) சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை
10. ஓய்வு நிலை உராய்வுக் குணகம் μs கொண்ட, s கிடைத்தளப் பரப்புடன் θ கோணம் சாய்ந்துள்ளள சாய்தளமொன்றில் m என்ற நிறை வழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வு நிலை உராய்வு விசையின் அளவு
a) mg
b) μsmg
c) μsmg sinθ
d) μsmg cosθ
விடை : d) μsmg cosθ
11. பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும் போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
a) பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி
b) பொருளின் மீது விசை ஏதும் செயல்படவில்லை
c) பொருளின் மீது புறவிசை மட்டும் செயல்படுகிறது
d) இயக்க உராய்வு மட்டும் செயல்படுகிறது
விடை : a) பொருளின் மீதான தொகுபயன் விசைசுழி
12. பொருளொன்று சொர சொரப்பபான சாய்தளப்பரப்பில் ஓய்வு நிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
a) பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி
b) ஓய்வு நிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல
c) ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
d) ஓய்வு நிலை உராய்வு, இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல
விடை : c) ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி
13. மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்?
a) நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்
b) சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
c) எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்
d) நிலைம், நிலைமமற்ற குறிப்பாயம்
விடை : b) சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்
14. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க
a) மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்
b) மையநோக்கு விசை இயற்கை விசையாகும்
c) மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது
d) வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும். மையவிலக்கு விசை வட்ட மையத்திலிருந்து வெளிநோக்கியும் செயல்படுகிறது
விடை : d)
15. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை.
a) அதிகரிக்கும்
b) குறையும்
c) மாறாது
d) முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்
விடை: a) அதிகரிக்கும்
விடைகள்:
1) a 2) c 3) a 4) c 5) c
6) c 7) b 8) c 9) b 10) d
11) a 12) c 13) b 14) d 15) a