இயற்பியல் செய்முறை பரிசோதனை - மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள மின்கலன்களின்மின்னியக்குவிசைகளை ஒப்பிடுதல் | 12th Physics : Practical
மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள மின்கலன்களின்மின்னியக்குவிசைகளை ஒப்பிடுதல்
மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி இரு மின்கலன்களின்மின்னியக்குவிசைகளை ஒப்பிடுதல்.
மின்கலத்தொகுப்பு, சாவி, மின்தடை மாற்றி, DPDT சாவி, லெக்லாஞ்சிமற்றும் டேனியல் மின்கலன்கள், கால்வனாமீட்டர், உயர் மின்தடைப் பெட்டி, தொடுசாவி, இணைப்புக் கம்பிகள்
இங்குε1 மற்றும்ε2 ஆகியவை
முறையே லெக்லாஞ்சி மற்றும் டேனியல் மின்கலன்களின் மின்னியக்குவிசைகள்
l1 மற்றும் l2 ஆகியவை முறையே லெக்லாஞ்சி மற்றும் டேனியல் மின்கலன்களின் சமன்செய் நீளங்கள்
•மின்சுற்றுப் படத்தில் உள்ளவாறு கருவிகளை வைக்கவும்.
• மின்கலத்தொகுப்பு, சாவி மற்றும் மின்தடை மாற்றி ஆகியவற்றை
உள்ளடக்கிய முதன்மை சுற்றை மின்னழுத்தமானியுடன் தொடர் இணைப்பில் கொடுக்கவும்.
• DPDT சாவியின் M1& M2 முனைகளுடன்
மின்கலன்களின் நேர்மின் முனைகளையும், N1&N2 முனைகளுடன் மின்கலன்களின்
எதிர்மின் முனைகளையும் இணைக்கவும். M & N ஆகிய பொது முனைகளுடன் மின்னழுத்தமானியை
இணைக்கவும்.
• DPDT சாவியைக் கொண்டு லெக்லாஞ்சி மின்கலனை மின்சுற்றில் இணைக்கவும்;
மின்னழுத்தமானியின் கம்பியின் மேல் தொடுசாவியை நகர்த்தி சமன்செய் புள்ளியையும் சமன்செய்
நீளத்தையும் குறிக்கவும்.
• இதேபோல் டேனியல் மின்கலனின் சமன்செய் நீளத்தையும் குறித்துக்
கொள்ளவும்.
• மின்தடை மாற்றியை சரிசெய்து வெவ்வேறு சமன்செய் நீளங்களை அளவிடவும்.
• வெவ்வேறு l1 மற்றும் l2 மதிப்புகளைக் கொண்டு இரு மின்கலன்களின் மின்னியக்குவிசைகளின் தகவைக் கணக்கிடவும்.
அட்டவணை: இரு மின்கலன்களின் மின்னியக்குவிசைகளின் தகவைக் கணக்கிடுதல்
இரு மின்கலன்களின்
மின்னியக்குவிசைகளின் தகவு = ........
(அலகு இல்லை).
DPDT
சாவி
இருமுனை இருவழி சாவி (Double Pole Double Throw Switch) என்பது
பொது முனைகளான M மற்றும் N ஆகியவற்றுடன் இணைப்பைக் கொடுக்கும், உலோகக் கைப்பிடி கொண்ட
ஆறுமுனை சாவியாகும். கொடுக்கப்பட்ட இரு மின்கலன்களும் M1& N1
மற்றும் M2& N2 முனைகளுடன் இணைக்கப்படுகின்றன. கைப்பிடியை
M1& N1 முனைகளுடன் பொருத்தும்போது, அம்முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள
மின்கலன் முதன்மை சுற்றில் சேர்க்கப்படுகிறது.