இயற்பியல் செய்முறை பரிசோதனை - செய்முறை தேர்வுக்கு பரிந்துரைக்கப்படும் வினாக்கள் | 12th Physics : Practical
செய்முறை தேர்வுக்கு
பரிந்துரைக்கப்படும் வினாக்கள்
1.
மீட்டர் சமனச் சுற்றைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட கம்பியின் மின்தடையைக்
கண்டுபிடி. மேலும் திருகு அளவியை பயன்படுத்தி கம்பியின் ஆரத்தை அளவிட்டு,
அதிலிருந்து கம்பிச்சுருள் செய்யப்பட்டபொருளின் மின்தடை எண்ணையும்
கண்டுபிடிக்கவும் (குறைந்த பட்சம் 4 அளவீடுகள் தேவை).
2.
டேஞ்சன்ட் கால்வனா மீட்டரைப் பயன்படுத்தி, புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்
கூறின் மதிப்பினைகண்டறிக (குறைந்த பட்சம் 4 அளவீடுகள் தேவை)
3.
மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்டுள்ள மின்கலன்களின் மின்னியக்கு
விசையை ஒப்பிடுக.
4.
நிறமாலைமானியைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட முப்பட்டகத்தின் கோணம் மற்றும் சிறும
திசைமாற்றக்கோணத்தை அளவிட்டு, அதிலிருந்து முப்பட்டகம் செய்யப்பட்ட பொருளின்
ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக.
5.
நிறமாலைமானியைப் பயன்படுத்தி, கீற்றணியை நேர்க்குத்து படுகதிர் முறையில் சரி
செய்து, பாதரச வாயுவிளக்கின் நிறமாலையில் உள்ள நீலம், பச்சை, மஞ்சள், மற்றும்
சிவப்பு நிறங்களின் அலைநீளத்தைக் கண்டுபிடிக்கவும் (ஒரு மீட்டர் நீளத்திற்கான
கோடுகளின் எண்ணிக்கை கீற்றணியிலிருந்து குறித்துக்கொள்ள வேண்டும்).
6.
PN சந்தி டையோடின் V - I பண்பு வரைகோடுகளை வரைந்து, முன்னோக்குச் சார்பு
வரைகோடுகளில்இருந்து முன்னோக்குச் சார்பு மின்தடை மற்றும் வளைவுப்புள்ளி
மின்னழுத்த வேறுபாட்டைகண்டுபிடிக்கவும்.
7.
செனார் டையோடின் V - I பண்பு வரைகோடுகளை வரைந்து, முன்னோக்குச் சார்பு
வரைகோட்டில்இருந்து முன்னோக்குச் சார்பு மின்தடை மற்றும் வளைவுப்புள்ளி மின்னழுத்த
வேறுபாட்டை கண்டுபிடி. மேலும் பின்னோக்குச் சார்பு வரைகோட்டில் இருந்து செனார்
டையோடின் முறிவு மின்னழுத்தவேறுபாட்டையும் கண்டுபிடிக்கவும்.
8.
கொடுக்கப்பட்ட NPN டிரான்சிஸ்டரை பொது உமிழ்ப்பான் சுற்று முறையில் அமைத்து,
உள்ளீடுமற்றும் பரிமாற்று பண்பு வரைகோடுகளை வரைக. மேலும் உள்ளீடு பண்பு
வரைகோட்டில் இருந்து உள்ளீடு மின்எதிர்ப்பையும், பரிமாற்று பண்பு வரைகோட்டில்
இருந்து மின்னோட்டப் பெருக்கத்தையும் கண்டுபிடிக்கவும்.
9.
கொடுக்கப்பட்ட NPN டிரான்சிஸ்டரின் பொது உமிழ்ப்பான் சுற்று முறையில் அமைத்து,
வெளியீடு மற்றும் பரிமாற்று பண்பு வரைகோடுகள் வரைக. மேலும் வெளியீடு பண்பு
வரைகோட்டில் இருந்து வெளியீடு மின்எதிர்ப்பையும், பரிமாற்று பண்பு வரைகோட்டில்
இருந்து மின்னோட்டப் பெருக்கத்தையும்கண்டுபிடிக்கவும்.
10.
தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி, AND, NOT, EX - OR, மற்றும் NAND ஆகிய தர்க்க
வாயில்களின் உண்மை அட்டவணைகளைச் சரிபார்க்கவும்.
11. தொகுப்புச் சுற்றுகளைப் பயன்படுத்தி OR, NOT, EX - OR மற்றும் NOR ஆகிய தர்க்க வாயில்களின்உண்மை அட்டவணைகளைச் சரிபார்க்கவும்.
12.
டீ மார்கனின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றங்களைச் சரிபார்க்கவும்.