Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | முப்பட்டகப்பொருளின் ஒளி விலகல் எண் கண்டறிதல்

இயற்பியல் செய்முறை பரிசோதனை - முப்பட்டகப்பொருளின் ஒளி விலகல் எண் கண்டறிதல் | 12th Physics : Practical

   Posted On :  14.10.2022 09:05 pm

12 வது இயற்பியல் : செய்முறை

முப்பட்டகப்பொருளின் ஒளி விலகல் எண் கண்டறிதல்

நிறமாலைமானியைப் பயன்படுத்தி முப்பட்டகம் செய்யப்பட்ட பொருளின் ஒளி விலகல் எண்ணைக் கண்டறிதல்.

முப்பட்டகப்பொருளின் ஒளி விலகல் எண் கண்டறிதல்


நோக்கம்

நிறமாலைமானியைப் பயன்படுத்தி முப்பட்டகம் செய்யப்பட்ட பொருளின் ஒளி விலகல் எண்ணைக் கண்டறிதல்.


தேவையான கருவிகள் 

நிறமாலைமானி, முப்பட்டகம், முப்பட்டக இறுக்கி, பாதரச மட்டம் மற்றும்சோடியம் வாயு விளக்கு.


வாய்ப்பாடு


இங்கு, μà முப்பட்டகப்பொருளின் ஒளிவிலகல் எண் (அலகு இல்லை )

A à முப்பட்டகத்தின் கோணம் (டிகிரி)

D à சிறும திசைமாற்றக் கோணம் (டிகிரி)


விளக்கப்படம்



 

செய்முறை

1. நிறமாலைமானியின் தொடக்கச் சீரமைவுகள்

• கண்ணருகு லென்சு: குறுக்குக்கம்பிகள் தெளிவாக தெரியுமாறு கண்ணருகு லென்ஸ் சரிசெய்யப்படுகிறது.

• பிளவு: இணையாக்கியின் பிளவு மெல்லியதாகவும் செங்குத்தாகவும் அமைக்கப்படுகிறது.

• நிறமாலைமானியின் அடிப்பகுதி: மட்டத் திருகுகள் மூலம் நிறமாலைமானியின் அடிப்பகுதி கிடைத்தளமாக இருக்குமாறு செய்யப்படுகிறது.

• தொலைநோக்கி: தொலைவில் உள்ள பொருளை நோக்கி தொலைநோக்கி திருப்பப்படுகிறது. பொருளின் தெளிவான தலைகீழான பிம்பம் கிடைக்குமாறு செய்யப்படுகிறது. தற்போது இணைக்கதிர்களை பெறுமாறு தொலை நோக்கியானது சரி செய்யப்பட்டுள்ளது.

• இணையாக்கி:தொலைநோக்கியும் இணையாக்கியும் ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்படுகின்றன. பிளவின் தெளிவான பிம்பம் தொலைநோக்கியில் தெரியுமாறு, இணையாக்கி சரி செய்யப்படுகிறது. தற்போது இணையாக்கி இணையான ஒளிக்கதிர்களை தருகிறது.

• முப்பட்டக மேசை: பாதரச மட்டம் மற்றும் மட்டத் திருகுகளைப் பயன்படுத்தி, முப்பட்டக மேசை கிடைமட்டமாக இருக்குமாறு சரி செய்யப்படுகிறது.

2. முப்பட்டகத்தின் கோணத்தை கண்டறிதல் (A)

•சோடியம் வாயு விளக்கின் மூலம் பிளவு ஒளியூட்டப்படுகிறது.

• சம பக்க முப்பட்டகமானது அதன் ஒளிவிலகல் விளிம்பு, இணையாக்கியை நோக்கி இருக்குமாறுமுப்பட்டக மேசை மீது வைக்கப்படுகிறது.

• இணையாக்கியிலிருந்து வெளிவரும் ஒளியானது முப்பட்டகத்தின் எதிரொளிக்கும் பக்கங்களில் பட்டு எதிரொளிக்கப்படுகிறது.

•முப்பட்டகத்தின் ஒரு பக்கத்தில் இருந்து எதிரொளிக்கப்படும் பிம்பத்தைப் பார்க்கும் வகையில் தொலைநோக்கியானது இடதுபுறம் திருப்பப்படுகிறது.

•பிளவின் எதிரொளிப்பு பிம்பம் செங்குத்து குறுக்குக் கம்பியில் இணையுமாறு, தொடுகோட்டுத் திருகுகள் மூலம் தொலைநோக்கி சரி செய்யப்படுகிறது.

• இரண்டு வெர்னியர் அளவுகோல்களில் இருந்தும் முதன்மைக்கோல் அளவு மற்றும் வெர்னியர்ஒன்றிணைவு ஆகியவை குறித்துக் கொள்ளப்படுகின்றன.

•தற்போது, முப்பட்டகத்தின் மறு பக்கத்தில் இருந்து எதிரொளிக்கப்படும் பிம்பத்தைப் பார்க்கும் வகையில் தொலைநோக்கியானது வலதுபுறம் திருப்பப்படுகிறது.

•மேற்கூறியவாறு மீண்டும் அளவீடுகள் குறித்துக்கொள்ளப்படுகின்றன.

•இந்த இரு அளவீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு 2A ஆகும். இதிலிருந்து முப்பட்டகத்தின் கோணம் A கணக்கிடப்படுகிறது.

3. சிறும திசைமாற்றக் கோணத்தை கண்டறிதல் (D)

• இணையாக்கியில் இருந்து வெளிவரும் ஒளியானது முப்பட்டகத்தின் ஒரு பக்கத்தின் வழியே ஊடுருவி, ஒளிவிலகல் அடைந்து மற்றொரு பக்கம் வழியாக வெளியேறுமாறு முப்பட்டக மேசை குறிப்பிட்ட திசையில் வைக்கப்படுகிறது.

•ஒளிவிலகல் பிம்பத்தை நோக்குமாறு தொலை நோக்கி திருப்பப்படுகிறது.

• தொலைநோக்கியினுள் பார்த்தவாறே, முப்பட்டக மேசை ஒரு குறிப்பிட்ட திசையில் திருப்பப்படுகிறது. அதன் மூலம் படுகதிரின் திசையை நோக்கி பிம்பம் நகருமாறு செய்யப்படுகிறது.

• படுகதிரை நோக்கி நகரும் பிம்பமானது ஒரு குறிப்பிட்ட நிலையில் எதிர்திசையில் திரும்புகிறது.இந்நிலையே சிறும் திசைமாற்ற நிலை ஆகும்.

• இந்நிலையில், பிம்பமானது செங்குத்து குறுக்குக் கம்பியோடு இணையுமாறு தொலைநோக்கி சுழற்றப்பட்டு பின் பொருத்தப்படுகிறது.

•இரண்டு வெர்னியர் அளவுகோல்களில் இருந்தும் அளவீடுகள் குறித்துக் கொள்ளப்படுகின்றன.

• முப்பட்டக மேசையிலிருந்து முப்பட்டகம் நீக்கப்பட்டு, நேர்க்கதிர் பிம்பம் செங்குத்து குறுக்குக் கம்பியோடு இணையுமாறு தொலைநோக்கி சரி செய்யப்படுகிறது. பின்னர் அளவீடுகள் குறித்துக் கொள்ளப்படுகின்றன.

• அளவீடுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு, இந்த இரு அளவீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு சிறும திசைமாற்றக் கோணம் D-ஐத் தருகிறது.

• A மற்றும் D ஆகியவற்றின் மதிப்புகளைப் பயன்படுத்தி, முப்பட்டகம் செய்யப்பட்ட பொருளின் ஒளி விலகல் எண் கண்டறியப்படுகிறது.

 

மீச்சிற்றளவு

ஒரு முதன்மைக்கோல் பிரிவு = 30'

வெர்னியர் அளவுகோல் பிரிவுகள் எண்ணிக்கை = 30

நிறமாலைமானியில், 30 வெர்னியர் பிரிவுகள் 29 முதன்மைக்கோல் பிரிவுகளுடன் பொருந்துகின்றன.

30 VSD = 29 MSD

அல்லது 1 VSD = 29 / 30 MSD

மீச்சிற்றளவு (LC) = 1MSD - 1VSD

= (1/30) MSD = (1/30) × 30’

=1’


காட்சிப் பதிவு

அட்டவணை 1

முப்பட்டகத்தின் கோணம் கண்டறிதல் (A)


அட்டவணை2

சிறும திசைமாற்றக் கோணம் கண்டறிதல் (D)


கணக்கீடு


முடிவு

1. முப்பட்டகத்தின் கோணம் (A) = ...................... (டிகிரி)

2. முப்பட்டகத்தின் சிறும திசைமாற்றக் கோணம் (D) = ...........................(டிகிரி)

3. முப்பட்டக பொருளின் ஒளிவிலகல் எண் μ= .......................(அலகு இல்லை)


குறிப்பு

i. தொடக்கச் சீரமைவுகள் செய்த பிறகு, நிறமாலைமானியின் நிலையை, குறிப்பாகஇணையாக்கியை மாற்றுவது கூடாது.

ii. மொத்த அளவீடு TR = MSR + (VSL × LC)

இங்கு, MSR = முதன்மைக்கோல் அளவீடு

VSC = வெர்னியர் கோல் ஒன்றிணைவு

LC = மீச்சிற்றளவு (= 1')

Tags : Physics Practical Experiment இயற்பியல் செய்முறை பரிசோதனை.
12th Physics : Practical : Refractive Index of the Material of the Prism Physics Practical Experiment in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : செய்முறை : முப்பட்டகப்பொருளின் ஒளி விலகல் எண் கண்டறிதல் - இயற்பியல் செய்முறை பரிசோதனை : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : செய்முறை