Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனை வெர்னியர் அளவியைப் பயன்படுத்திக் காணல்

இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை - தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனை வெர்னியர் அளவியைப் பயன்படுத்திக் காணல் | 11th Physics : Practical Experiment

   Posted On :  23.10.2022 01:13 am

11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை

தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனை வெர்னியர் அளவியைப் பயன்படுத்திக் காணல்

வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி நிறை தெரிந்த ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனைக் கணக்கிடல்.

தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனை வெர்னியர் அளவியைப் பயன்படுத்திக் காணல் 


நோக்கம்

வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி நிறை தெரிந்த ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனைக் கணக்கிடல்.


தேவையான கருவிகள் 

வெர்னியர் அளவி, திண்மக் கோளம்.


வாய்ப்பாடு

ஒரு திண்மக் கோளத்தின் விட்டத்தைப் பற்றிய நிலைமத் திருப்புத்திறன் Id = 2/5 MR2

இங்கு M கோளத்தின் நிறை (kg) (தெரிந்த மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்) 

R கோளத்தின் ஆரம் (m)


விளக்கப்படம்


மாதிரி அளவீடு

MSR = 2.2 cm ; VSC = 4 பிரிவுகள்;

அளவீடு = [2.2 cm + (4×0.01cm)] = 2.24 cm

 

செய்முறை

• வெர்னியர் அளவியின் சுழிப்பிழைகள் கண்டறியப்பட வேண்டும். பிழைகள் இருப்பின் குறித்துக் கொள்ள வேண்டும்.

• கோளமானது வெர்னியர் அளவியின் இரு புயங்களுக்கு இடையில் பொருத்தப்பட்டு முதன்மைக் கோல் அளவு (மு.கோ.அ) குறித்துக் கொள்ளப்படுகிறது. 

• எந்த வெர்னியர் கோல் பிரிவு(வெ.கோ.பி) முதன்மைக்கோல் அளவுடன் சரியாக பொருந்தியுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு இந்த வெ.கோ. பிரிவுடன் சுழித்திருத்தத்தை மேற்கொண்டால் அது சரியான வெர்னியர் கோல் அளவைத் தருகிறது. ( வெ.கோ.அ)

• இந்த வெர்னியர் கோல் அளவு மீச்சிற்றளவால் (LC) பெருக்கப்பட்டு முதன்மைக்கோல் அளவுடன் கூட்டப்படுகிறது. இந்த மதிப்பு கோளத்தின் விட்டமாகும்.

• கோளத்தின் வெவ்வேறு நிலைகளுக்கு விட்டம் உற்றுநோக்கப்பட்டு அட்டவணையில் குறித்து அதன் சராசரி விட்டம் கண்டறியப்படுகிறது. இதிலிருந்து கோளத்தின் ஆரம் (R) கணக்கிடப்படுகிறது.

• கோளத்தின் தெரிந்த நிறையின் மதிப்பு M மற்றும் கணக்கிடப்பட்ட கோளத்தின் ஆரம் R ஆகியவற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட வாய்ப்பாட்டின் மூலம் அதன் விட்டத்தின் வழியேச் செல்லக்கூடிய அச்சைப் பொருத்துள்ள நிலைமத்திருப்புத்திறனைக் கணக்கிடலாம்.


மீச்சிற்றளவு (LC) 

ஒரு முதன்மைக்கோல் பிரிவு (MSD) =  . . . . . . . . . . . . . . . cm 

வெர்னியர் கோல் பிரிவுகளின் எண்ணிக்கை = . . . . . .   

மீச்சிற்றளவு (LC) = 1 முதன்மைக்கோல் பிரிவு (MSD) / மொத்த வெர்னியர் பிரிவுகளின் எண்ணிக்கை

                 = . . . . . . . . . . . . . . cm

காட்சிப்பதிவுகள் 

சுழிப்பிழை =

சுழித்திருத்தம் =


கணக்கீடு

கோளத்தின் நிறை M = . . . . . . . . . . . . . kg 

(கொடுக்கப்பட்ட தெரிந்த மதிப்பு ) 

கோளத்தின் ஆரம் R =. . . . . . . . . . . . .m 

திண்மக்கோளத்தின் விட்டம் வழியே செல்லக்கூடிய

அச்சைப் பொருத்து உள்ள நிலைமத்திருப்புத்திறன் Id =  2/5     MR2  = . . . . . . . . . . . . . kg m2


முடிவு

வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட திண்மக்கோளத்தின் விட்டம் வழியே செல்லக்கூடிய அச்சைப் பொருத்து உள்ள நிலைமத்திருப்புத்திறன். Id = ………………….. kg m2


Tags : Physics Laboratory Practical Experiment இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை.
11th Physics : Practical Experiment : Moment of Inertia of a Solid Sphere of Known Mass Using Vernier Caliper Physics Laboratory Practical Experiment in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை : தெரிந்த நிறை கொண்ட ஒரு திண்மக் கோளத்தின் நிலைமத் திருப்புத்திறனை வெர்னியர் அளவியைப் பயன்படுத்திக் காணல் - இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை