Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | திரவத்தின் பாகுநிலையைக் காணல் (ஸ்டோக்ஸ் முறை)

இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை - திரவத்தின் பாகுநிலையைக் காணல் (ஸ்டோக்ஸ் முறை) | 11th Physics : Practical Experiment

   Posted On :  23.10.2022 01:24 am

11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை

திரவத்தின் பாகுநிலையைக் காணல் (ஸ்டோக்ஸ் முறை)

ஸ்டோக்ஸ் முறையில் கொடுக்கப்பட்ட திரவத்தின் பாகியல் எண்ணைக் கணக்கிடுதல்.

திரவத்தின் பாகுநிலையைக் காணல் (ஸ்டோக்ஸ் முறை)


நோக்கம்

ஸ்டோக்ஸ் முறையில் கொடுக்கப்பட்ட திரவத்தின் பாகியல் எண்ணைக் கணக்கிடுதல்.


தேவையான கருவிகள் 

நீண்ட உருளை வடிவ கண்ணாடி ஜாடி, அதிக பாகுநிலை கொண்ட திரவம், மீட்டர் அளவுகோல், கோளவடிவக் குண்டு, நிறுத்துக்கடிகாரம், நூல்


வாய்ப்பாடு


இங்கு 

η - திரவத்தின் பாகியல் எண் (N s m–2)

கோளவடிவ குண்டின் ஆரம் (m)

δ → எ ஃகு கோளத்தின் அடர்த்தி (kg m–3)

σ → திரவத்தின் அடர்த்தி (kg m–3)

புவியீர்ப்பு முடுக்கம் (9.8 m s–2)

 சராசரி முற்றுத்திசைவேகம் ( m s–1)


விளக்கப்படம்



செய்முறை

• அளவீடுகள் குறிக்கப்பட்ட நீண்ட உருளை வடிவ கண்ணாடி ஜாடி ஒன்றினை எடுத்து அதனுள் கொடுக்கப்பட்ட திரவத்தை நிரப்ப வேண்டும். 

• A, B என்ற இரு புள்ளிகள் கண்ணாடி ஜாடியில் குறிக்கப்படுகிறது. உலோகக் குண்டானது Aயை அடையும்போது அது முற்றுத் திசைவேகத்தைப் பெறும் வகையில் புள்ளி A திரவத்தின் பரப்பிற்கு அதிக ஆழத்தில் குறிக்கப்படவேண்டும். 

• திருகு அளவி கொண்டு, கோளவடிவ உலோகக்குண்டின் ஆரத்தைக் கணக்கிட வேண்டும். 

• கோளவடிவக்குண்டாது திரவத்தில் மெதுவாக விழச்செய்யப்பட வேண்டும். 

• கோளமானது புள்ளி A-யை கடக்கும் போது ஓர் நிறுத்துக்கடிகாரத்தை    இயக்கவேண்டும். கோளமானது புள்ளி B- யை கடக்கும் போது நிறுத்துக் கடிகாரத்தை நிறுத்த வேண்டும். A மற்றும் B -க்கு இடையேயான தொலைவை அளந்து t மதிப்பை அட்டவணையில் குறித்துக் கொள்ள வேண்டும்முற்றுத்திசைவேகத்தைக் கணக்கிட வேண்டும். 

• A மற்றும் B-க்கு இடையேயான தொலைவினை அளந்து கொள்ள வேண்டும். வெவ்வேறு தொலைவுகளுக்கு சோதனை திரும்பச் செய்யப்பட வேண்டும். புள்ளி Aயானது கண்டிப்பாக முற்றுத்திசைவேகத்தை அடையும் நிலைக்கு கீழே குறிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.


காட்சிப்பதிவுகள் 

முற்றுத் திசைவேகத்தைக் காணல்



கணக்கீடு 

கோளவடிவ உலோகக் குண்டின் அடர்த்தி δ = ________ kg m−3

கொடுக்கப்பட்ட திரவத்தின் அடர்த்தி σ = ________ kg m−3

கோளத்தின் ஆரம் r.......................m 

திரவத்தின் பாகியல் எண் η = 2r2g(δ −σ) / 9 =  = ________ N s m–2


முடிவு

ஸ்டோக்ஸ் முறையில் கொடுக்கப்பட்ட திரவத்தின் பாகியல் எண் η = ________ Nsm–2


Tags : Physics Laboratory Practical Experiment இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை.
11th Physics : Practical Experiment : Viscosity of a Liquid By Stoke’s Method Physics Laboratory Practical Experiment in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை : திரவத்தின் பாகுநிலையைக் காணல் (ஸ்டோக்ஸ் முறை) - இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை