இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை - சீரற்ற வளைவு - ஊசி மற்றும் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பளுவிற்கும் இறக்கத்திற்கும் இடையேயான தொடர்பைச் சரிபார்த்தல் | 11th Physics : Practical Experiment
சீரற்ற வளைவு - ஊசி மற்றும் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பளுவிற்கும் இறக்கத்திற்கும் இடையேயான தொடர்பைச் சரிபார்த்தல்.
நோக்கம்
ஒரு சட்டத்தின் சீரற்ற வளைவைப் பயன்படுத்தி பளு மற்றும் இறக்கத்திற்கிடையேயான தொடர்பைச் சரிபார்த்தல்
தேவையான கருவிகள்
ஒரு நீண்ட சீரான சட்டம் (மீட்டர் அளவுகோல்] இரு கத்தி விளிம்புத் தாங்கிகள், நிறைத் தாங்கி, நிறைகள், ஊசி, வெர்னியர் நுண்ணோக்கி.
வாய்ப்பாடு
M / s = மாறிலி
இங்கு
M → தொங்கவிடப்பட்ட பளு (நிறை) (kg)
S → கொடுக்கப்பட்ட பளுவில் சட்டத்தில் ஏற்படும் இறக்கம் (m)
விளக்கப்படம்
செய்முறை
• இரு கத்தி விளிம்புகளையும் மேஜையின் மீது வைக்கவேண்டும்.
• சீரான சட்டத்தை (மீட்டர் அளவு கோலை) கத்தி விளிம்புகளின் மேற்பகுதியில் வைக்க வேண்டும்
• நிறைத்தாங்கியை அளவுகோலின் மையத்தில் தொங்கவிட வேண்டும். தாங்கி தொங்கிவிடப்பட்டுள்ள, அளவுகோலின் மையத்தில் ஒரு ஊசியைப் பொருத்த வேண்டும்.
• இந்த அமைப்பின் முன்னே ஒரு வெர்னியர் நுண்ணோக்கியை வைக்க வேண்டும்.
• நுண்ணோக்கியை சரிசெய்து, ஊசியின் தெளிவான பிம்பத்தைப் பெறவேண்டும். நுண்ணோக்கியின் கிடைத்தளக் குறுக்குக்கம்பி ஊசி முனையுடன் பொருந்துமாறு செய்ய வேண்டும் (இங்கு நிறைதாங்கியானது நிலைப்பளு (Dead Load) M ஆகும்).
• நுண்ணோக்கியின் செங்குத்து அளவுகோலின் அளவீடுகளை குறித்துக்கொள்ள வேண்டும்.
• நிறைத்தாங்கியில் 0.05kg (50gm) நிறைகளை ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்து அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
• பிறகு நிறைத்தாங்கியில் இருந்த நிறைகளை ஒன்றன் பின் ஒன்றாக குறைத்து அளவீடுகளை குறித்துக்கொள்ள வேண்டும்.
• ஒவ்வொரு பளுவிற்குமான சராசரி அளவீட்டை நிலைப்பளு அளவீட்டுடன் கழிக்கவேண்டும். இந்த அளவு குறிப்பிட்ட நிறை M - இற்கான இறக்கமாகும்.
மாதிரி வரைபடம்
பளு (M) மற்றும் இறக்கம் (S) ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு
M ஆனது X - அச்சிலும் s ஆனது y - அச்சிலும் எடுத்துக்கொள்ளப்பட்டு M மற்றும் S- க்கான வரைபடம் வரைய வேண்டும். இவ்வரைபடம் ஒரு நேர்கோடாகும்.
கணக்கீடு
முடிவு
• ஒவ்வொரு பளுவிற்கும் (நிறை) மற்றும் இறக்கத்திற்கு இடையே உள்ள தகவு கணக்கிடப்பட்டது. இதன் மதிப்பு ஒரு மாறிலியாக உள்ளது கண்டறியப்பட்டது.
• எனவே பளுவிற்கும் இறக்கத்திற்கிடையேயான தொடர்பு ஒரு சட்டத்தின் சீரற்ற வளைவைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டது.