Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல் – சுரமானி

இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை - மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல் – சுரமானி | 11th Physics : Practical Experiment

   Posted On :  23.10.2022 01:33 am

11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை

மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல் – சுரமானி

சுரமானியைப் பயன்படுத்தி, மாறாத இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும், கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல்

மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல் – சுரமானி


நோக்கம்

சுரமானியைப் பயன்படுத்தி, மாறாத இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும், கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல். 


தேவையான கருவிகள் 

சுரமானி, அதிர்வெண் தெரிந்த ஆறு இசைக்கவைகள், மீட்டர் அளவுகோல், இரப்பர்அட்டை, சிறுகாகிதத் துண்டுகள், நிறைத்தாங்கி மற்றும் 1/2 kg நிறைக்கற்கள், கூரிய விளிம்புக்கட்டைகள்.


வாய்ப்பாடு

அதிர்வடையும் கம்பியின் அடிப்படைச் சுரத்திற்கான அதிர்வெண்


a) கொடுக்கப்பட்ட நிறை m மற்றும் நிலையான இழுவிசைப் T மதிப்பிற்கு


இங்கு 

n → அதிர்வடையும் கம்பியின் அடிப்படைச் சுரத்திற்கான அதிர்வெண் (Hz) 

m கம்பியின் ஓரலகு நீளத்திற்கான நிறை (kg m-1

l இரு விளிம்புகளுக்கு இடையேயான நீளம் (m) 

T கம்பியின் இழுவிசை (நிறைத்தாங்கியின் நிறையும் சேர்ந்தது) = Mg (N) 

M தொங்கவிடப்பட்ட நிறை (நிறைத்தாங்கியின் நிறையும் சேர்ந்தது) (Kg)


விளக்கப்படம்


சுரமானியைப் பயன்படுத்தி மாறாத இழுவிசைக்கு கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் பிரிவின் நீளத்திற்கும், அதிர்வெண்ணிற்கும் இடையேயான தொடர்பைக் கண்டறிதல்


செய்முறை 

• சுரமானியினை ஒரு மேஜையின் மீது வைத்து அதனுடன் இணைக்கப்பட்ட கப்பியின் பள்ளம் தூய்மையாகவும், குறைந்த உராய்வில் உள்ளதையும் உறுதிசெய்க. 

• தகுந்த நிறையினை நிறைத்தாங்கியில் இட்டு கம்பியை விறைப்பாக்கவேண்டும். 

• இசைக்கவையை இரப்பர் அட்டையில் தட்டி அதிர்வுறச்செய்ய வேண்டும். 

• சுரமானிக் கம்பியை அதிர்வுறச்செய்து இரு அதிர்வு ஒலிகளையும் ஒப்பிடுக. 

• ஒலியானது சம அளவுகேட்கும் வரை விளிம்புக்கட்டை B யை நகர்த்தி கம்பியின் அதிர்வடையும் பிரிவின் நீளத்தை சரிசெய்யவேண்டும்.

• இறுதியாக சரி செய்தபிறகு ஒரு சிறிய காகிதத்துண்டை AB கம்பியின் மையத்தில் வைக்க வேண்டும். 

• இசைக்கவையை அதிர்வுறச்செய்து அதன் அடிப்பகுதியை விளிம்புக்கட்டை A யின் மீது வைத்து அல்லது சுரமானி பெட்டி மீது வைத்து விளிம்புக்கட்டை B யை நகர்த்தி ஒத்ததிர்வினால் காகிதத்துண்டை கிளர்ந்தெழச் செய்யவேண்டும்.

• மீட்டர் அளவுகோல் கொண்டு ABவிளிம்புக்கட்டைகளுக்கு இடையேயான நீளம் அளவிடப்படுகிறது. இதுவே ஒத்ததிர்வு நீளமாகும். இப்பொழுது அதிர்வடையும் கம்பியின் அடிப்படைச்சுரத்தின் அதிர்வெண் இசைக்கவையின் அதிர்வெண்ணுக்குச் சமம். 

• மற்ற இசைக்கவைகளுக்கும் பளுவை மாறாமல் வைத்துக்கொண்டு சோதனையை மீண்டும் செய்ய வேண்டும்.


காட்சிப்பதிவுகள் 

கம்பியின் இழுவிசை T= Mg = ......................... N (மாறலி)

(நிறைத்தாங்கியின் நிறையுடன் சேர்த்து தொடங்கவிடப்பட்ட மொத்த நிறை M என்க.)

T = (தொங்கவிடப்பட்ட நிறை × 9.8) N



வரைபடம்



கணக்கீடு 

அனைத்து இசைக்கவைகளின் n மற்றும் l இன் பெருக்குத்தொகை (nl) மாறிலியாக இருக்கும் (அட்டவணையின் கடைசி பகுதி)


முடிவு

• கொடுக்கப்பட்ட இழுவிசைக்கு கொடுக்கப்பட்ட விரைப்பான கம்பி ஒத்ததிர்வடையும் நீளம் அதிர்வெண்ணிற்கு எதிர்விகிதத்தில் இருக்கும் (அதாவது n  1/l)

nl - இன் பெருக்குத்தொகை மாறிலி மற்றும் அதன் கண்டறியப்பட்ட மதிப்பு....................(Hz m)


Tags : Physics Laboratory Practical Experiment இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை.
11th Physics : Practical Experiment : Study of Relation Between Frequency and Length of a Given Wire Under Constant Tension Using Sonometer Physics Laboratory Practical Experiment in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை : மாறா இழுவிசையில் அதிர்வெண்ணிற்கும் கொடுக்கப்பட்ட கம்பியின் அதிர்வடையும் நீளத்திற்கும் இடையேயான தொடர்பை அறிதல் – சுரமானி - இயற்பியல் ஆய்வக நடைமுறை பரிசோதனை : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : செய்முறை பரிசோதனை